Skip to main content

Posts

Showing posts from February, 2026

அமேரிக்கா ஈரான் மோதல்

அமேரிக்கா ஈரான் மோதல் இலங்கையில் எரிபொருள் வரிசை மக்கள் தற்ப்போது ஈரான் அமேரிக்கா போர் ஆரம்பமானவுடன் இலங்கையில் பல இடங்களில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் வரிசையில்  உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் அமேரிக்கா ஈரான் ஆகிய இரு நாடுகளின் போர் ஆரம்பமாகியதைத்தொடர்ந்து இலங்கையில் இன்று மாலை தொடக்கம பல பகுதிகளில் மக்கள் எரிபொருள் நிரப்புவதற்க்காக எரிபொருள் நிலையங்களுக்கு முன் வரிசையில் நிற்க்க ஆரம்பித்துள்ளனர்.    இந்த போரின் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு வரக்கூடும் என்ற எண்ணத்தில் இவ்வாறு மக்கள் எரிபொருள் நிரப்ப காத்திருக்கின்றனர். செய்தித்தொகுப்பு :-தாஜுதீன் முஹம்மட் ஆசிக்

T20 WORD CUP PAK VS ENG

 20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026) Match-45  T20 உலககிண்ணத்தின் 45து போட்டி  24/02/2026 பாக்கிஸ்தான் மற்றும் இங்கிலாந்து  அணிகளுக்கிடையில் இன்று இரவு 7.00மணிக்கு கண்டி,பல்லேகலயில் ஆரம்பமானது.  இன்றைய போட்டியானது பாக்கிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு மிக முக்கியமான போட்டியாகும். காரணம் முதல் போட்டியில் பாக்கிஸ்தான் 1புள்ளிகளுடன் மழை காரணமாக எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் அரை இறுதி கனவை நனவாக்க முடியும்.மறு பக்கத்தில் இங்கிலாந்து இந்த போட்டியில் வெற்றிபெற்றால் அடுத்த அரை இறுதிச்சு சுற்றுக்கு தகுதி பெறும்.   நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.  பாக்கிஸ்தான் அணியானது  ஆரம்பமே சொதப்பலாக அமைந்தது ஆரம்பத்துடுப்பாட்டம் சரியாகா அமையவில்லை என்றுதான் கூறவேண்டும் பாக்கிஸ்தானின் முதலாவது விக்கெட் ஓட்டம் ஏதும் பெறாமலே வீழ்த்தப்பட்டது   முதல் 6ஓவர்கள் முடிவில் 46ஓட்டங்களைப்பெற்றது பாக்கிஸ்தான்  அணி சார்பாக   பர்ஹான் 45பந்துகளுக்கு 56 ஓட்டங்களும்  சதாப் க...

பேரீத்தம்பழம் வழங்கும் நிகழ்வு

 பேரீத்தம்பழம் வழங்கும் நிகழ்வு வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் லைப்லைன் அசோசியன் தனியார் நிறுவனத்தின் தலைவருமான  காதர் மஸ்தான் அவர்களினால் புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு தனது சொந்த முயற்சியினால் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பேரீத்தம் பழங்களை விநியோகிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்டத்தில் அண்மையில் ஆரம்பமானது.  அதன் அடிப்படையில்  சுமார் 6258 குடும்பங்களுக்கான பேரீத்தம் பழங்கள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டது.  செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக் 21/02/2026

Srilanka v Australia (T20 wordcup 2026)

20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026) Match-30      T20 உலககிண்ணத்தின் 30து போட்டி  16/02/2026 இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நேற்று இரவு 7.00மணிக்கு கண்டி,பல்லேகலயில் ஆரம்பமானது.  நேற்றைய போட்டியானது அவுஸ்திரேலிய மற்றிம் இலங்கை அணிகளுக்கு மிக முக்கியமான போட்டியாகும். காரணம் இலங்கை இந்த போட்டியில் வெற்றிபெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் இல்லாவிட்டல் சிம்பாபயோடு போட்டிபோடவேண்டும் அதில் கட்டாயல் வெற்றிபெற வேண்டும்.   அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே 2போட்டிகளில் 1தோல்வி கண்டதால் இந்த வெற்றி அவர்களின் அடுத்த சுற்றுக்கு இலகுவாக இருக்கும் இல்லை என்றால் அது கேள்விக்குறியே நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் பந்துவீசத் தீர்மானித்தார்.  அவுஸ்திரேலிய அணியானது  அதிரடியாக ஆரம்பித்து நல்லதோர் ஒர் ஆரம்பத்தையே கொடுத்தது  104ஓட்டங்களுக்கு தனது முதலாவது விக்கெட்டை  இழந்தது. முதல் 6ஓவர்கள் முடிவில் 70ஓட்டங்களைப்பெற்றது அவுஸ்திரேலிய  அணி சார்பாக   ரெவிஸ் ஹெட் 29பந்துகளுக்கு 56 ஓட்டங்களும் மிச்சல் மார்ஸ்...

இந்தியா v பாக்கிஸ்தான்( IND V PAK T20-2026)

 2026 T20 உலககிண்ணத்தில் இந்த உலகமே எதிர்பார்க்கும் போட்டி என்றால் அது இந்தியா பாக்கிஸ்தான் அணிகள் மோதும் போட்டிதான் இந்தியா – பாக்கிஸ்தான்  பெப்ரவரி 15ம் திகதி இலங்கை கொழும்பு ஆர் பிரமதாச மைதானத்தில் மோதுகின்றன.இந்த மைதானத்தின் இருக்கை 35000ம் ஆனால் இதுவரையில் 88000த்துகு மேல் ரசிகர்கள் பதிவுகலை மேற்கொண்டுள்ளதாக தகவல்  உலகம் காத்திருக்கும் கிரிக்கெட் திருவிழா கிரிக்கெட் உலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டி எது என்று கேட்டால், பெரும்பாலானோர் சொல்லும் பதில் “இந்தியா vs பாக்கிஸ்தான்” என்பதே. பெப்ரவரி15ம் திகதி நடைபெறவுள்ள இந்த மோதல் மீண்டும் ஒரு முறை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வரலாற்றுப் பின்னணி இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதும் ஒவ்வொரு போட்டியும் சாதாரண கிரிக்கெட் ஆட்டமல்ல. இரு நாடுகளின் நீண்டகால போட்டி மனப்பான்மை, அரசியல் பின்னணி, ரசிகர்களின் உணர்ச்சி பிணைப்பு ஆகியவை இந்த போட்டியை மிகவும் சிறப்பானதாக மாற்றுகின்றன. உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா பல முறை முன்னிலை பெற்றிருந்தாலும், பாக்கிஸ்தான் அணியும் பல முக்கிய தருணங்களில் வலுவா...

நுரைச்சோலை பாடசாலையில் மரதன் ஓட்டப்போட்டி

   நுரைச்சோலை பாடசாலையில் மரதன் ஓட்டப்போட்டி புத்தளம்,கற்பிட்டி,நுரைச்சோலை பாடசாலையின் 2026ம் ஆண்டிற்க்கான இல்ல விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு விமர்சையாக நடைபெற்று வருகின்றது.  மாணவர்களின் விளையாட்டுத்திறமைகளை கண்டறிவதற்க்காகவும்,மாணவர்களின் பாடசாலைக்காலங்களில் பெறும் நினைவுகளாக இருப்பது இந்த பாடசாலை விளையாட்டுப்போடிகளாகும்.  அந்த வகைவகையில் 13/02/2026ம் திகதி மரதன் ஓட்டப்போட்டி அதிகாலையில் ஆரபிக்கப்பட்டது,இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள்,பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள்,மற்றும் பொதுமக்கள் என்று பலரும் கலந்துகொண்டனர்.  செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக் 13/02/2026

மலையகம் சென்றார் ஜனாதிபதி

 மலையகம் சென்றார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் இன்றைய தினம் 11-02-2026ம் திகதி மலையகத்துக்கு சென்றார் போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு மக்கள் பேரணி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று போதை ஒழிப்போம் என்ற தலைப்பில் இந்த நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது அத்தோடு ஜனாதிபதி யாரும் எதிர்பார்க்க விதமாக மலையகத்கில் தேயிலை பறித்துக்கொண்டு இருந்த மக்களோடும் தீடீர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.    இந்த நிகழ்வு மக்களிடயே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது சிலர் கூறியது இதற்க்கு முன்னிருந்த ஜனாதிபதிகள் யாரும் எங்களோடு வந்து பேசவில்லை என்று கூறி மகிழ்ச்சியடைந்தனர். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன முஹம்மட் ஆசிக் 11/02/2026

PAK V USA

 20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026) Match-12      T20 உலககிண்ணத்தின் 12து போட்டி  10/02/2026 பாக்கிஸ்தான் மற்றும் அமேரிக்கா அணிகளுக்கிடையில் இன்று இரவு 7.00மணிக்கு கொழும்பில் ஆரம்பமானது.    நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற அமேரிக்கா கிரிக்கெட் அணித்தலைவர் பந்துவீசத் தீர்மானித்தார்.  பாக்கிஸ்தா அணியானது நல்லதோர் ஒர் ஆரம்பத்தையே கொடுத்தது  54ஓட்டங்களுக்கு தனது முதலாவது விக்கெட்டை இழந்தது. முதல் 6ஓவர்கள் முடிவில் 56ஓட்டங்களைப்பெற்றது பாக்கிஸ்தான்  அணி சார்பாக  சஹிசடா பர்கான் 42பந்துகளுக்கு 73 ஓட்டங்களும் பாபர் அசாம் 32பந்துகளுக்கு 46ஓட்டங்களும் சடாப் கான் 12பந்துகளில் 30ஓட்டங்களும் சயீம் அய்யூப் 17பந்துகளுக்கு 19 ஓட்டங்களும் பெற்றனர். 20ஓவர்கள் நிறைவில் 190 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்தது.    அமேரிகா  சார்பாக பந்து வீச்சில் ஸகல்வேர்க்-4 மொஹ்வில் -1 ஹமீத் சிங்-1 நெதன் வால்கர்-1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்     191எடுத்தால் வெற்றி என்று ஆடுகளம் புகுந்த அமேரிகா அணியின் ஆரம்பத்துடுப்பெடுத்தாட்டம் நன்றா...

சம்பியனானது கற்பிட்டி வேல்ட்லயன்ஸ்

 சம்பியனானது கற்பிட்டி வேல்ட்லயன்ஸ் இலஙகையின் 78சுதந்திரதினத்தை முன்னிட்டு கற்பிட்டி விஜய கடற்படையினரால் 04/02/2026ம் திகதி கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது  மொத்தமாக 5அணிகள் பங்குபற்றியது கடற்படையினர் அணி 2,கற்பிட்டி வேல்ட் லயன்ஸ் அணி,குறிஞ்சிப்பிட்ட,கண்டக்குழி ஆகிய அணிகள் பங்குபற்றியது இதில் இறுதிப்போட்டிக்கு கற்பிட்டி வேல்ட் லயன்ஸ் மற்றும் குறிஞ்சிப்பிட்டி எரப்சன் ஆகிய அணிகள் மோதியது விரு விருப்பான இறுதிப்போட்டியில் கற்பிட்டி வேல்ட் லயன்ஸ் அணி வெற்றிபெற்றது தகவக்:-முஹம்மட் சாஜித் செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக் 09/02/2026

SL V IRL( T20)

 20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026) Match-6      T20 உலககிண்ணத்தின் 6து போட்டி  08/02/2026 இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் இன்று இரவு 7.00மணிக்கு கொழும்பில் ஆரம்பமானது.    நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து  கிரிக்கெட் அணித்தலைவர் பந்துவீசத் தீர்மானித்தார்.  இலங்கை அணியானது மெதுவான ஒர் ஆரம்பத்தையே கொடுத்தது  28ஓட்டங்களுக்கு தனது முதலாவது விக்கெட்டை இழந்தது. முதல் 6ஓவர்கள் முடிவில் 50ஓட்டங்களைப்பெற்றது இலங்கை அணி சார்பாக   குசல் மெண்டிஸ்43பந்துகளுக்கு 56 ஓட்டங்களும் கமிந்து மெண்டிஸ் 19பந்துகளுக்கு 44ஓட்டங்களும் பத்தும் நிசங்க 23பந்துகளில் 24ஓட்டங்களும் கமில் மிஸ்ஹார 11பந்துகளுக்கு 14 ஓட்டங்களும் பெற்றனர். 20ஓவர்கள் நிறைவில் 163 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்தது.     அயர்லாந்து சார்பாக பந்து வீச்சில் பெர்ரி மெக்ராத்தி-2 ஜோர்ஜ் டெக்ரோல்-2 டெலனி-1 மார்க் அடெ-1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்     164எடுத்தால் வெற்றி என்று ஆடுகளம் புகுந்த அயர்லாந்து அணியின் ஆரம்பத்துடுப்பெடுத்தாட்ட...

வடமேல் மாகாணத்தின் மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்புக்கான தலைவர் நியமனம்

 வடமேல் மாகாணத்தின் மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்புக்கான தலைவராக T.ஹம்சார் நியமனம் PSSO அமைப்பின் தலைவர் T.ஹம்சார்(அன்சார்) வடமேல் மாகாணத்தின் மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்புக்கான தலைவராக நியமிக்கப்பட்டார் 06/02/2026ம் திகதி கொழும்பு (BMICH)பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து இதற்கான உத்தியோக பூர்வ அனுமதிக்கடிதம் மற்றும் அடையாள அட்டை என்பன வழங்கிவைக்கப்பட்டது. செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக் 08/02/2026
20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026) Match-4      T20 உலககிண்ணத்தின் நான்காவது போட்டி  08/02/2026 ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இன்று காலை 11 .00மணிக்கு சென்னையில் ஆரம்பமானது.    நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.  ஆப்கானிஸ்தான் அணியானது மெதுவான ஒர் ஆரம்பத்தையே கொடுத்தது35ஓட்டங்களுக்கு தனது முதலாவது விக்கெட்டை இழந்தது. ஆப்கானிஸ்தான்  அணி சார்பாக  குல்புதீன் 35பந்துகளுக்கு 64 ஓட்டங்களும் சாதிகுல் அதல்  24பந்துகளுக்கு 29ஓட்டங்களும் குர்பாஸ் 22பந்துகளில் 27ஓட்டங்களும் ரசூலி 13பந்துகளுக்கு 20 ஓட்டங்களும் பெற்றனர். 20ஓவர்கள் நிறைவில் ஆப்கானிஸ்தான் அனி 182ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்தது.   மெதுவான ஆரம்பமாக இருந்தாலும் நடு வரிசை வீரர்கள் அணிக்கான ஓட்டத்தை சீரான முறையில் அதிக ஓட்டத்தை சேர்க்க உதவினார்கள் நியூசிலாந்தி சார்பாக பந்து வீச்சில் பிரகுசன்-2 மாட் ஹென்ரி-1 ரச்சின்ரவிந்தர்-1 ஜகப் டப்பி-1     183எடுத்தால் வெற்றி என்று ஆடுகளம் புக...

அமேரிக்கா v இந்தியா (Ind vs usa)

 20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026) Match-3      T20 உலககிண்ணத்தின் மூன்றாவது போட்டி  07/02/2026 இந்தியா மற்றும் அமேரிக்கா அணிகளுக்கிடையில் இன்று இரவு 7.00மணிக்கு மும்பையில் ஆரம்பமானது.    நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற அமேரிக்கா கிரிக்கெட் அணித்தலைவர் பந்துவீசத்தீர்மானித்தார்.  இந்தியா அணியானது ஆரம்பமே விக்கெட்டுக்களை பறிகொடுக்க ஆரம்பித்தது ஒரு கட்டத்தில் இந்தியா 46ஓட்டங்ககுக்கு 4விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது பின்னர் அணித்தலைவர் சூர்யகுமாரின் அதிரடியால் நல்லதொரு முடிவை பெற்றது என்றுதான் கூறவேண்டும் . 8ஓட்டங்களுக்கு தனது முதலாவது விக்கெட்டை இழந்தது. இந்தியா  அணி சார்பாக  சூர்யகுமார் யாதவ் 49பந்துகளுக்கு 84 ஓட்டங்களும் திலக் வர்மா  16பந்துகளுக்கு 25ஓட்டங்களும் அக்சர் 11பந்துகளில் 15ஓட்டங்களும் இஷான் கிசன் 16பந்துகளுக்கு 20 ஓட்டங்களும் பெற்றனர். 20ஓவர்கள் நிறைவில் இந்தியா அனி 169ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களையும் இழந்தது.  அமேரிக்கா சார்பாக பந்து வீச்சில் ஸ்கல்வேக்-4 ஹர்மீத் சிங்-2 முஹம்மட் முஹசின்-1 அலி ஹான்-1   ...

West indies vs scotland

 20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026) Match-2      T20 உலககிண்ணத்தின் இரண்டாவது போட்டி  07/02/2026 மேற்கிந்திய் தீவுகள் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கிடையில் இன்று பிற்பகல் 3.00மணிக்கு கொல்கத்தாவில் ஆரம்பமானது.    நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணித்தலைவர் பந்துவீசத்தீர்மானித்தார்.  மேற்கிந்திய தீவுகள் அணியானது ஆரம்பமே அதிரடியாக ஆரம்பித்தது 54ஓட்டங்களுக்கு தனது முதலாவது விக்கெட்டை இழந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக  சிம்ரோன் ஹெட்மயிர் 36பந்துகளுக்கு 64 ஓட்டங்களும் பிரண்டன் கிங்    30பந்துகளுக்கு 35ஓட்டங்களும் சர்பம் ரூத்போரட் 13பந்துகளில் 26ஓட்டங்களும் ரோமன் பவல் 14பந்துகளுக்கு 24ஓட்டங்களும் பெற்றனர். 20ஓவர்கள் நிறைவில் அதிரடியாக ஆடிய மேற்கிந்திய தீவுகள் அனி 182ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் இழந்தது.  ஸ்காட்லாந்து சார்பாக பந்து வீச்சில் பிரட் கேரி-2 ஒழிவர் டெவிட்சன்-1 சப்யான் சரிப்-1 மிச்சல் லெசக்-1     183எடுத்தால் வெற்றி என்று ஆடுகளம் புகுந்த ஸ்காட்லாந்து அணியின் ஆரம்பத்துடுப்பெட...

பாக்கிஸ்தான் vs நெதர்லாந்து

 20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026)     T20 உலககிண்ணத்தின் முதலாவது போட்டி  07/02/2026 பாக்கிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையில் இன்று காலை 11மணிக்கு கொழும்பில் ஆரம்பமானது.    நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் பந்துவீசத்தீர்மானித்தார்.நெதர்லாந்து அணியானது 28ஓட்டங்களுக்கு முதலாவது விக்கெட்டை இழந்தது. நெதர்லாந்து அணி சார்பாக  எட்வேர்ட்ஸ் 29பந்துகளுக்கு 37 ஓட்டங்களும் பேஸ் டி லேட்ஸ்    25பந்துகளுக்கு 30ஓட்டங்களும் அக்கர்மேல் 14பந்துகளில் 20ஓட்டங்களும் அர்யன் டொட் 8பந்துகளுக்கு 13ஓட்டங்களுக் பெற்றனர். 19.4ஓவர்கள் நிறைவில் 147ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்தது.  பாக்கிஸ்தான் சார்பாக பந்து வீச்சில் சல்மான் மிர்சான்-3 முஹம்மட் நவாஸ்-2 அப்ரார் அஹமட்-2 சயீம் அய்யூப்-2     148எடுத்தால் வெற்றி என்று ஆடுகளம் புகுந்த பாக்கிஸ்தான் அணியின் ஆரம்பத்துடுப்பெடுத்தாட்டம் சரியாக அமையவில்லை முதலாவது விக்கெட் 28ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது  நெதர்லாந்து அணியின் பந்து வீச்சானது பாக்கிஸ்த...

T20உலககிண்ணம்-2026

 20/20உலககிண்ணம்2026  2026ம் அண்டுக்கான T20உலககிண்ணத்தொடர் நாளை( 07/04/2026)இலங்கை கொழும்பில் முதலாவது போட்டி நடைபெற்றவுள்ளது. (பாக்கிஸ்தான் நெதர்லாந்து)11.00am 2026ம் ஆண்டு உலகிண்ணத்தை இலங்கை மற்றும் இந்தியா  இணைந்தே நடாத்துகின்றது.   இந்தியா: மும்பை, அஹமதாபாத், சென்னை, கோல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களிலும் இலங்கை: கொழும்போ, கண்டி போன்ற நகரங்களில் இந்த போட்டிகள் யாவும் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.நாளை ஆரம்பிக்க உள்ள உலகிண்ணத்தொடரானது T20யின் 10து உலகிண்ணத்தொடராகும்.  முதலாவதாகக் உலகிண்ணத்தொடர் 2007ம் ஆண்டு நடைபெற்றது. ஒரு நாள் தொடரை விடவும் மிகவும் ரசிகர்களினால் கொண்டாடக்கூடிய ஒரு தொடராக T20தொடர் பார்க்கப்படுகின்றது. 2024ம் ஆண்டு நடைபெற்ற  T20உலக்கிண்ணத்தை இந்தியா அணி கைப்பற்றியது. நடந்து முடிந்த 9உலககிண்ணங்களையும் கீழ் வரும் அணிகள் கைப்பற்றியுள்ளார்கள் 1️⃣ 2007 –  இந்தியா 2️⃣ 2009 –  பாகிஸ்தான் 3️⃣ 2010 – இங்கிலாந்து 4️⃣ 2012 – வெஸ்ட் இண்டீஸ் 5️⃣ 2014 – இலங்கை 6️⃣ 2016 –  வெஸ்ட் இண்டீஸ் 7️⃣ 2021 – ஆஸ்திரேலியா 8️⃣ 2022 – இங்கிலாந்து 9️⃣ 2024 ...

லூர்து மாதா பாலர் பாடசாலையில் சுதந்திர தின நிகழ்வு

 சுதந்திர தின நிகழ்வு லூர்து மாதா பாலர் பாடசாலையின் சுதந்திர தின நிகழ்வு இன்று 05/04/2026ம் திகதி நடைபெற்றது.   இந் நிகழ்வில் நுரைச்சோலை போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றிவைத்தனர்.    இந்த சுதந்திர தின நிகழ்வில் நாட்டின் வரைபடத்தில் ஒற்றுமைக்காக இந் நிகழ்வில் கலந்துகொண்ட அதிகாரிகள் ,மாணவர்கள்,பெற்றோர்கள்,இந் நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் கை அடையாளம் பதிக்கப்பட்டு நினைவுகளாக வைக்கப்பட்டது. மேலும் இந் கைவிரல் நிகழ்வானது ,இன ஒற்றுமை, மத ஒற்றுமை,நாட்டின் ஒற்றுமையையை உலகுக்கு எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வாக அமைந்தது   மேலும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரிகளினால் மாணவர்களுக்கான ஒழுக்கம், ஒற்றுமை,சட்டம் ஒழுங்குகளை,மதிப்பது சம்மந்தமாகவும் அறிவுரை வழஙகப்பட்டது செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக் 05/04/2026
 அல்-மினா பாலர் பாடசாலையில் சுதந்திர தின நிகழ்வு  புத்தளம்,ஆலங்குடா,அலி ஜின்னா கிராமத்தில்  இயங்கி வரும் அல் மினா பாலர்பாடசாலையில் இன்று 04/02/2026ம் திகதி 78து சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது. இதன் போது தேசிய கீதம் பாடப்பட்டு,தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வும் நடைபெற்றது,அத்தோடு இந் நிகழ்வில் கலந்துகொண்ட சிறுவர்கள் தேசியக்கொடியை ஏந்திய வண்ணம் பாதையோரமாக நடைபவனியும் சென்றனர்.     இன்றைய சிறுவர்களே நாட்டின் நாளைய தலைவர்களாக வரக்கூடியவர் எனவே இந்த வருடத்தில் கல்வியை நோக்கி வந்திருந்த இந்த சிறுவர்களுக்கு நாட்டின் சுதந்திர தினம் என்னவென்றும்,அது கடந்து வந்த பாதையையும் ஆசிரியரினால் கூறப்பட்டது. இந்த நிகழ்வின் மூலம் சிறுவர்களிடையே நாட்டுப்பற்று, தேசிய அடையாளம் மற்றும் சமூக ஒற்றுமை போன்ற மதிப்பீடுகளை வளர்க்கும் நோக்கம் நிறைவேறியது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது   புகைப்பட உதவி:-அஸ்ஸாலி செய்தித்தொகுப்பு:-தாஜூன் ஆசிக் 04/02/2026

இலங்கை அணியை விமர்சிக்கும் ரசிகர்கள்

 இலங்கை அணியை விமர்சிக்கும் ரசிகர்கள் இலங்கை கிரிக்கெட் அணியானது 2015ம் ஆண்டின் பின்னர்  துடுப்பெடுத்தாட்டம்,பந்து வீச்சு என இரண்டிலும் சொதப்பியே வருகின்றது என்பது தான் உண்மை குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, டில்சான்,மாலிங்கா,குலசேகரா,மெத்திவ்ஸ்,ஆகியோரின் ஓய்வின் பின்னர் இலங்கை அணியானது இன்னும் சரியான ஒரு அணியாக.முழுமை பெறவில்லை. 2015ம் ஆண்டுக்கு பின்னர் ஒரு தடவை மட்டுமே ஆசியா கோப்பையை கைப்பற்றியுள்ளது இதை தவிர வேறு ஒரு ICC-கிண்ணங்களை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.    நிலையான பயிற்றுவிப்பாளர் இல்லை,தலைமைத்துவம் மாற்றம் என்பதும் தொடர்ந்தும் அதே வீரர்களை அணியில் வைத்திருப்பது, புதிய வீரர்களை தேர்தெடுப்பத்தில்  சில முரன்பாடுகள் என்பதும் இலங்கை அணியின் இந்த நிலைமைக்கான காரணமாக அமைந்துள்ளது  அந்த வகையில் இந்த வருடம் ஆரம்பம் முதலே இலங்கை அணி அதிகமான தோல்விகளை சந்தித்து வருகின்றது.  பாக்கிஸ்தான் அணியுடனான் தோல்வி இங்கிலாந்தி அணியுடனான் தொடர் தோல்வி       இப்படியான தோல்விகளினால் தற்ப்போது இலங்கை அணி ரசிகள் கடந்த இங்கிலாந்துடனான் இறுதிப்...

சீட் பெல்ட் அணிந்து வந்த ஜனாதிபதி

 சீட் பெல்ட் அணிந்து வந்த ஜனாதிபதி 78து சுதந்திர தின நிகழ்வானது  04/02/2026ம் திகதி காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந் நிகழ்வில் அனைத்து ஏற்பாடுகள் முடிவடைந்து ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருந்தவேலையில் இலங்கை நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் வருகை தந்திருந்தார் ஆனால் இந்த நிகழ்வுக்கு வருகை தரும்பொழுது ஜனாதிபதி வாகனத்தின் முன் இருக்கையில் அமர்ந்து முன் இருக்கையில் சீட் பெல்ட் அணிந்து வந்தது அதிகமானோரின் கவனத்தை ஈர்த்தது.    நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் சாதாரண குடிமகனுக்கு என்ன சட்ட ஒழுங்கோ அதையே தானும் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் வரவேற்க்கத்தக்கது.    இந் நிகழ்வு சமூக ஊடகங்களில் அதிகமாக பேசப்படும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. செய்தித்தொகுப்பு:- தாஜூதீன் ஆசிக் 04/02/2026

ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தின நிகழ்வு

 ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தின நிகழ்வு இலங்கையின் 78து சுதந்திர தின நிகழ்வானது சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது இலங்கை நாட்டின் தேசியக்கொடியை ஜனாதிபதி அனுர குமார டிசானாயக்க ஏற்றி வைத்தார்.    இன்றைய சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் ,எதிர்க்கட்சித்தலைவர்,அமைச்சர்கள்,பா உறுப்பினர்கள்,வெளி நாட்டுத்தூதுவர்கள்,பொதுமக்களும் கலந்துகொண்டனர்.   இந் நிகழ்வில் இலங்கையின் முப்படைகளின் அணிவகுப்புக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்பன நடைபெற்றது.     செய்தித்தொகுப்பு:- தாஜூதீன் ஆசிக் 04/02/2016

இலங்கையின் 78சுதந்திர தினம்

 இலங்கையின் சுதந்திரம் – ஒரு நாளின் விழாவை விட நீண்ட பயணம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 4ஆம் தேதி இலங்கை சுதந்திர தினத்தை  நாம் நினைவுகூர்கிறோம். 1948ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுபட்டு, சுதந்திதம் பெற்ற நாளாக இது வரலாற்றில் பதிவானது. ஆனால் சுதந்திரம் என்பது ஒரே நாளில் முடிந்த ஒரு நிகழ்வு அல்ல. அது தலைமுறைகள் கடந்து தொடர வேண்டிய ஒரு பயணம். சுதந்திரம் கிடைத்த நாளில் இலங்கை மக்களிடம் பெரிய கனவுகள் இருந்தன. சமத்துவம், அமைதி, வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு,ஒற்றுமை போன்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. சில துறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தாலும், இன்னும் பல சவால்களை நாடு எதிர்கொண்டு வருகிறது என்பதும் உண்மை. சுதந்திரம் என்றால் கொடி ஏற்றுவது, விழா நடத்துவது மட்டும் அல்ல. ஒவ்வொரு குடிமகனும் தனது உரிமைகளை உணர்ந்து, கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றுவதும் அதில் அடங்கும். ஊழல் இல்லாத நிர்வாகம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சட்டத்திற்கு முன் சமத்துவம் ஆகியவை உண்மையான சுதந்திரத்தின் அடையாளங்கள். இலங்கை பல இனங்களும், பல மதங்களும் வாழும் நாடு. இந்த வேறுபாடுகளே நம் பலமாக மாற வேண்டும். கடந்த கால...
 இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியானது இன்று கண்டி பல்லேகளையில நடைபெற்றது.   நாணயசூழற்ச்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசத்தீர்மானித்தது.   இலங்கை அணி ஆரம்பமுதலே துடுப்பெடுத்தாட்டத்தில் வலுவான நிலையில் துடுபெடுத்தாடியது இலங்கை அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்  பவன் ரத்னாயக 40(22)க மில் மிஷ்ரா 36(30)ப த்தும் நிசாங்க 34(22)கு சல் மெண்டிஸ் 32(17) இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில்  ஜோபர் ஆர்சர் 2(w) வில் ஜன் 1w ஆதில் ராசித்1w லியம் டவ்சான் 1wயும் கைப்பற்றினர்.   இலங்கை அணியானது 20ஓவர்கள் முடிவில் 185/5விக்கெட்டை கைப்பற்றியது.      இங்கிலாந்து அணி துடுப்பெடுதாட முன் மழை குறிக்கிட்டதால் 17ஓவராக மட்டுப்படுத்தப்பட இந்த போட்டியானது இங்கிலாந்து அணிக்கு 17ஓவர்களுக்கு 168 ஓட்டம் வெற்றி இலக்காக நிர்னயிக்கப்பட்டது.    இங்கிலாந்து சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்  டொம் பெண்டன் 54(33) ஜோஸ் பட்லர் 39(29) ஹரி பூரூக் 36(12) சாம் கரன்20(14) என்ற அடிப்படையில் ஓட்டங்களைப்பெற்றனர...