Skip to main content

Posts

Showing posts with the label கல்வி

5ம் ஆண்டுக்கான பரீட்சை நாளை

  09/08/2026 நாளை 5ம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை தினம் நடைபெறவுள்ளது. எனவே இந்த போட்டிப்பரீட்சையில் பங்குபற்றக்கூடிய அனைத்துச்சிறுவர்களுக்கும் ak media தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது,நல்லமுறையில் பரீட்சையை எழுதி நல்ல பெறுபேறுகளைப்பெறவேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். ADMIN

திகழி முஸ்லிம் மகா வித்தியாலயம்

 2025ம் ஆண்டு உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்களின் பல்கலைக்கழகத்துகான தெரிவுகள் வெளியாகிவுள்ள நிலையில் புத்தளம்,கற்பிட்டி,திகழி பாடசாலையின் சார்பாக பரீட்சை எழுதிய மாணவர்கள் எந்த பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளார்கள் என்ற விபரத்தை திகழி முஸ்லிம் மகா வித்தியாலம் உத்தியோகபூர்வமாக வெளியாக்கியுள்ளது. திகழி பாடசாலையில் கல்விகற்று  வயம்ப பல்கலைக்கழகத்துக்கு (Management)பிரிவுக்கு இரண்டு மாணகவர்கள்,  களனி பல்கலைக்கழகத்தில் விளையாட்டு ,அறிவியல் துறைக்கு ஒரு மாணவர், கொழும்பு கலைப்பிரிவுக்கு(arts) 5மாணவர்களும்,யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவுக்கு 4மாணவர்களும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் Tourim&hospitality managementபிரிவுக்கு ஒரு மாணவரும்,தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் islamic studies பிரிவுக்கு ஒரு மாணவரும் தெரிவாகியுள்ளார்கள்.

தாருல் உலூம் காஷிபுல் ஹுதா அரபிக்கல்லூரியில் நடைபெற்ற இல்லவிளையாட்டுப்போட்டி

 தாருல் உலூம் காஷிபுல் ஹுதா அரபிக்கல்லூரியில் நடைபெற்ற இல்லவிளையாட்டுப்போட்டி புத்தளம்,கற்பிட்டி,முதலைப்பாளியில் இயங்கி வரும் தாருல் உலூம் காஷிபுல் ஹுதா அரபிக்கல்லூரியில் இம்மாதம் (ஜூலை)28,29,30ஆகிய தினங்களில் மதுரசா மாணவர்களுக்கான மாபெரும் இல்லவிளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது, இந்த மதுரஸாவில் சுமார் 160மாணவர்கள் கல்விகற்கின்றனர்,இவர்களின் விளையாட்டுத்திறமைகளையும் ஊக்குவிக்கவேண்டும் என்ற நோக்கில் இந்த இல்ல விளையாட்டுப்போட்டியை இந்த மதுரஸாவில் அதிபர் அஷ்ஷேக் ஜெமில்கான் ரஹ்மானி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 160மாணவர்களையும்,மதுரஸாவில் பணிபுரியும் உலமாக்கள் 16பேரையும் ஒன்றினைத்து நான்கு இல்லங்களாக பிரிக்கப்பட்டு வெகுவிமர்சையான முறையில் இந்த விளையாட்டுப்போட்டி. நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்த நிகழ்வுகளை முன்று நாட்கள் நடாத்த திட்டமிட்டு அதில் ஒவ்வொரு நாட்களில் ஒவ்வொரு விளையாட்டு தொகுதிகளாக நடாத்தவும் விளையாட்டுக்குழு தீர்மானித்தது.அந்தவகையில் முதலாவது (28)நாள் நிகழ்வாக கிரிக்கெட் ,கரப்பந்துப்போட்டிகளை 4இல்லங்களுக்கிடையில் நடாத்தி முடிக்கப்பட்டது. இரண்டாவது நாளன்று(29) மாணவ...

2026 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை தயார்!

  - ஜூலை 15ஆம்  திகதி முதல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம் சிறு போகத்திற்கான நெல் அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளதால், நெல் கொள்வனவு நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்குமாறும், அதற்காக தற்போது நெல் கையிருப்பிலுள்ள களஞ்சியசாலைகளை சந்தைக்கு விநியோகித்து, புதிய நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான ஆயத்தப் பணிகளை 'சதொச' நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க விவசாய அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (07) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். இம்முறை சிறுபோகத்தில் சுமார் 475,000 ஹெக்டெயர் நெல் வயல்களில் பயிரிடப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு காலநிலை மாற்றமும் இம்முறை நெற்செய்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும், இதனால் வெற்றிகரமான நெல் அறுவடை கிடைத்துள்ளதாகவும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 2026 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக திறைசேரியினால் 6 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு ...

மாணவர்களுக்கான உளவளத்துனை கருத்தரங்கு

 📚 📚 மாணவர்களின் மனவளமும் எதிர்காலமும் வளமாகட்டும் 📚 நாவற்க்காடு பாடசாலையில் மாணவர்களுக்கான உளவளத்துணை மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புத்தளம் மாவட்ட உளவளத்துணையாளர் H. M. நிப்ராஸ் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார். மாணவர்களின் மனநலம், தன்னம்பிக்கை, கல்வி முன்னேற்றம் மற்றும் நல்ல சமூகப் பழக்கவழக்கங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும், திறன் மேம்பாட்டிற்கும் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்திய அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்படுகின்றன.  16/05/2026 செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

பாலர்பாடசாலையில் புதுவருடகொண்டாட்டம்

பாலர்பாடசாலையில் புதுவருடகொண்டாட்டம்  30/04/2026இன்று ஆண்டாங்கேனி லூர்து மாதா பாலர் பாடசாலையில் (அவுறுது உட்சவ) புதுவருட கொண்டாட்டம் பாலர்பாடசாலையில் மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரிய்ரகள் பிரதேச மக்களின் பங்குபற்றுதல்களுடன் நடைபெற்றது இந் நிகழ்வில் கற்பிட்டி முன் பள்ளிகளுக்கான பொறுப்பாளர் H.M.நிப்ராஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக் 30/04/2026

இலங்கையில் அதிகரிக்கும் வெப்பம்

 இலங்கையின் தற்போதைய வெப்பநிலை – காரணங்கள், தாக்கங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை இந்நாட்களில் இலங்கையின் பல பகுதிகளில் வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக மேற்கு, வடமேற்கு மற்றும் வட மாகாணங்களில் பகல் நேரங்களில் அதிக வெப்பம் உணரப்படுகிறது. இது பொதுமக்களின் நாளந்தோறும் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. 🌡️ தற்போதைய நிலைமை சமீப நாட்களில் வெப்பநிலை 32°C முதல் 36°C வரை உயர்ந்து காணப்படுகிறது. சில உள்வாரிப் பகுதிகளில் இது மேலும் அதிகமாக உணரப்படுகிறது. அதிக ஈரப்பதத்துடன் கூடிய சூழல் காரணமாக “Feels like” வெப்பநிலை இன்னும் உயர்ந்ததாக இருக்கும். ☀️ வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணங்கள் சூரிய கதிர்வீச்சு அதிகரிப்பு – கோடை காலத்திற்கு நகரும் பருவம் மழை குறைவு – நீண்ட நாட்களாக மழை இல்லாமை காற்றோட்டம் குறைவு – வெப்பம் வெளியேறாமல் நிலைத்திருக்கும் காலநிலை மாற்றம் – உலகளாவிய அளவில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் ⚠️ இதன் தாக்கங்கள் உடல் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) தலைவலி, சோர்வு, மயக்கம் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு விவசாய நடவடிக்கைகளில் சிரமம் நீ...

எரிபொருள் நிரப்ப QRமுறை

 எரிபொருள் நிரப்ப QR முறை  இலங்கையில் தற்ப்போது எரிபொருள் நிரப்புவதற்க்காக QR முறையை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஈரான்,அமேரிக்கா,இஸ்ரேல் ஆகிய  நாடுகளுக்கிடையில் நடைபெற்று வரும் போர் காரணமாக உலகில் கச்சா எண்ணெய்யின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளது.எனவே அதன் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது. மக்கள் போர் காரணமாக எரிபொருட்களை சேமித்து வைப்பதனால் நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்க்காக இலங்கை அரசாங்கம் வாகனத்தின் பதிவுகளைப்பயன்படுத்தில் QRமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது இதனால் ஒருவர் வாரத்துக்கு குறிப்பிட்ட அளவிலான எரிபொருளை மாத்திரமே பயன்படுத்த முடியும்.இதனால் பதுக்கள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகளை கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்பதால் அரசாங்கம் இந்த முடிவை அமுல்படுத்தியுள்ளது . பின்வருமாறு வாகனங்களுக்கான எரிபொருள் அளவுகள் நிரணயிக்கப்பட்டுள்ளது   இருசக்கரவானம்(Bike)-5L முச்சக்கரவண்டி(Auto)-15L வேன்(van)-40L பஸ்(bus)-60L கார்(car)-15L லொறி(Lorris)-200L லேண்ட் வெஹிகல்(land vehicle's)-25L Special purpose vehicle's-40L என்ற அடிப்படையில் வாரம...
 அல்-மினா பாலர் பாடசாலையில் சுதந்திர தின நிகழ்வு  புத்தளம்,ஆலங்குடா,அலி ஜின்னா கிராமத்தில்  இயங்கி வரும் அல் மினா பாலர்பாடசாலையில் இன்று 04/02/2026ம் திகதி 78து சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது. இதன் போது தேசிய கீதம் பாடப்பட்டு,தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வும் நடைபெற்றது,அத்தோடு இந் நிகழ்வில் கலந்துகொண்ட சிறுவர்கள் தேசியக்கொடியை ஏந்திய வண்ணம் பாதையோரமாக நடைபவனியும் சென்றனர்.     இன்றைய சிறுவர்களே நாட்டின் நாளைய தலைவர்களாக வரக்கூடியவர் எனவே இந்த வருடத்தில் கல்வியை நோக்கி வந்திருந்த இந்த சிறுவர்களுக்கு நாட்டின் சுதந்திர தினம் என்னவென்றும்,அது கடந்து வந்த பாதையையும் ஆசிரியரினால் கூறப்பட்டது. இந்த நிகழ்வின் மூலம் சிறுவர்களிடையே நாட்டுப்பற்று, தேசிய அடையாளம் மற்றும் சமூக ஒற்றுமை போன்ற மதிப்பீடுகளை வளர்க்கும் நோக்கம் நிறைவேறியது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது   புகைப்பட உதவி:-அஸ்ஸாலி செய்தித்தொகுப்பு:-தாஜூன் ஆசிக் 04/02/2026

கால்கோள் விழா 2026

 கால்கோள் விழா 2026 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயம் புத்/கல்/ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலத்தின் 2026ம் ஆண்டுக்கான முதலாம் தரத்துக்கான புதிய மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்று காலை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வின் முன்னாக் முதலாம் தரத்துக்கு கற்பித்த ஆசிரியைகளுக்கும் புதிய முதலாம் தரத்துக்கு கற்பிக்க இருக்கும் ஆசிரியைகளுக்கும் பரிசுப்பொருட்களும் வைக்கப்பட்டது பாடசாலை அதிபர் அவர்களினால்  இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர்AHM.சக்கூர் பிரதம அதிதியாக MLM.காதர் அவர்களும், ஆலங்குடா கிராமசேவகர் அசீமா,சமூக சேவகர் நிசார்,பாடசாலை ஆசிரியர்கள்,பாலர் பாடசாலை ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள்களும் கலந்துகொண்டனர். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக் 2026./01/29

மன்னார் ,புத்தளம் பாதை

 மன்னார்-புத்தளம் பாதை (இளவங்குளம் ஊடான) பாதையை மீண்டும் திறக்ககோரி இன்று 23/01/2026 மன்னார் மற்றும் புத்தளத்தின் பல பகுதிகளில் ஜனாதிபதிக்கு இந்த பாதையின் முக்கியத்துவத்கை தெரியப்படுத்தும் நோக்கிலும் ,இந்த பாதையை திறப்பதையும்,இந்த பாதையினூடாக பயணிக்க மக்கள் எவ்வளவு ஆர்வத்துடனும் இருக்கிறார்கள் என்பதை ஜனாதிபதிக்கு தெரிவிக்க மக்களிடம் கையொப்பம் கேட்க்கப்பட்டது அதிகளவிலான மக்கள் இந்த கையொப்பம் வைக்கும் நிகழ்வில் ஆர்வத்துடன் பலரும் தங்களது ஆதரவை கையொப்பமிட்டு தெரிவித்திருந்தனர் என்பதை காணக்கிடைத்தது. மேலும் இந்த பாதையை திறப்பதனால் மக்களுக்கான பயணச்செலவு,பயணச்சுமை என்பன குறையும் அத்தோடு இது புதிதாக இந்த மக்கள் இந்த பாதையை கேட்கவில்லை யுத்ததுக்கு முன் மன்னார் புத்தள மக்களினால் உபயோகித்த பாதை யுத்த முடிவின் பின்னரும் புத்தள,மன்னார் மக்களினால் உபயோகிக்கப்பட்ட பாதையையே இந்த மக்கள் மீண்டும் மக்களின் பாவனைக்காக கேட்க்கின்றனர். எனவே இந்த மக்களின் நீண்டகால ஒரு எதிர்பார்ப்பாக இருக்கும் இந்த மன்னார்,புத்தளம் பாதையை இந்த நாட்டின் தற்ப்போதைய ஜனாதிபதி அவர்கள் நிறைவேற்றித்தருவாரா? என்ற ஒரு கேள்வியோடு...

பாலர் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு    23/01/2026 இன்று PSSOநிறுவனத்தினால் ஆலங்குடா, அல் ஹிஜ்ரா பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கான நினைவுச்சின்னங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டது.  இன் நிகழ்வில்  pssoஅமைப்பின் தலைவர் T .அன்சார்(மௌலவி) அவர்களும்,PSSO நிறுவனத்தின் கல்விக்கான பொறுப்பாளர் A.S.M.சியாத் அவர்களும் ஊடக பொறுப்பாளர், T.M.ஆசிக் மற்றும் pssoஅமைப்பின் உறுப்பினர் NM,சப்ரான்,மற்றும் ஆலங்குடா பாடசாலையின் அதிபர் AHM.சக்கூர் ,கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பஸ்லி மற்றும் பள்ளித்தலைவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். செய்தித்தொகுப்பு:-தாஜூதின் ஆசிக் 23/01/2026

ACTIVE KIDS KINDERGARTEN ALANKUDA வின் *Tiny* *Titans* *சிறிய* *கைகள்* *பெரிய* *சாகசங்கள்*

  2026/01/13 ம் திகதி அதிபர் மற்றும் ஆசிரியைகள் தலைமையில் , ஆலங்குடா Eye Institute வளாகத்தில் வெகு விமர்சயாக நடைபெற்றது. இதில் Active Kids Kindergarten இன் மழலைகள் தங்கள் திறமைகளை மிகவும் சிறப்பாகவும் ரசிக்கும் வண்ணமும் வெளிப்படுத்தினார்கள். இதற்காக பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பயிற்றுவித்து பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர் 👏. பிள்ளைகள் தங்கள் ஆடைகளையும் பெற்றோரின் ஆடைகளையும் நீருடனும் சலவை தூளுடனும் bubbles உடனும் விளையாடிய வண்ணம் மிகவும் சிறப்பாகவும் வேடிக்கையாகவும் கழுவினார்கள். பார்ப்பதற்கு மிகவும் கண் கவரும் வகையில் இருந்தது.  மேலும் மிக அழகிய முறையில் பல வண்ணங்களில் chef உடையுடன் தங்கள் சிறிய கரங்களால் பழங்கள், மரக்கறிகளை வெட்டி தேங்காய் துருவி, உரல் கொண்டு இடித்து இன்னும் பல வகைகளில் பல விதமான கண்ணை கவரும் வண்ணங்களில் உணவுகளையும் பானங்களையும் தயாரித்தனர். குழந்தைகளுக்கு “எனக்கும் செய்ய முடியும்” என்ற தன்னம்பிக்கையையும், பொறுப்பு , சகிப்புத் தன்மை , படைப்பாற்றல் போன்ற மன நலம் சார்ந்த நன்மைகளை நோக்கமாக கொண்டே இந்நிகழ்வு *(Tiny Titans)* (*சிறிய கைகள் பெரிய சாகசங்கள்* )ஏ...