Skip to main content

20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026) Match-4

 

   T20 உலககிண்ணத்தின் நான்காவது போட்டி  08/02/2026 ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இன்று காலை 11 .00மணிக்கு சென்னையில் ஆரம்பமானது.

   நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

 ஆப்கானிஸ்தான் அணியானது மெதுவான ஒர் ஆரம்பத்தையே கொடுத்தது35ஓட்டங்களுக்கு தனது முதலாவது விக்கெட்டை இழந்தது.


ஆப்கானிஸ்தான்  அணி சார்பாக 

குல்புதீன் 35பந்துகளுக்கு 64 ஓட்டங்களும்

சாதிகுல் அதல்  24பந்துகளுக்கு 29ஓட்டங்களும்

குர்பாஸ் 22பந்துகளில் 27ஓட்டங்களும்

ரசூலி 13பந்துகளுக்கு 20

ஓட்டங்களும் பெற்றனர்.

20ஓவர்கள் நிறைவில் ஆப்கானிஸ்தான் அனி 182ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்தது.

  மெதுவான ஆரம்பமாக இருந்தாலும் நடு வரிசை வீரர்கள் அணிக்கான ஓட்டத்தை சீரான முறையில் அதிக ஓட்டத்தை சேர்க்க உதவினார்கள்

நியூசிலாந்தி சார்பாக பந்து வீச்சில்

பிரகுசன்-2

மாட் ஹென்ரி-1

ரச்சின்ரவிந்தர்-1

ஜகப் டப்பி-1


    183எடுத்தால் வெற்றி என்று ஆடுகளம் புகுந்த நியூசிலாந்து அணியின் ஆரம்பத்துடுப்பெடுத்தாட்டம் சரியாக அமையவில்லை 

முதலாவது விக்கெட் 14 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது

 ஒரு கட்டத்தில்14 ஓட்டங்களுக்கு 2விக்கெட்டை இழந்து தடுமாறியது.ஆப்கானிஸ்தான் அணியின் சூழலில் சற்று தடுமாறியது நியூசிலாந்து என்று கூறலாம்.ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சானது சிறப்பானதாக இருந்தது நியூசிலாந்து அணிக்கு மிகவும் சவாலாக அமைந்தது என்றுதான் கூறவேண்டும்

  நியூசிலாந்து சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்

 சய்பேர்ட் 42பந்துகளில் 65ஓட்டம்

 கேலேன் பிலிப்ஸ் 25பந்துகளில் 41 ஓட்டம்

 சப்மே 17பந்துகளில்28ஓட்டம்

டேரி மிச்சல் 14பந்துகளில் 25ஓட்டம் என்று  அதிரடியாக ஆட ஆரம்பித்தனர்.


   இறுதியாக 17.5ஓவர்கள் நிறைவில் 5விக்கெட்டுக்களையும் இழந்ததது நியூசிலாந்து அணி 183ஓட்டங்களைப்பெற்றது 

  ஆப்கானிஸ்தான்  அணி சார்பாக பந்து வீச்சில்

மூஜீப் 2விக்கெட்டையும்

 ரசீட் கான்1

 விக்கெட்டையும்

பரூக்கி 1விக்கெட்டையும்

முஹம்மட் நபி 1விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.



   2026- T20உலககிண்னத்தின் நான்காவது(4து) போட்டியில் நியூசிலாந்து அணி 5விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக டிம் செய்பேர்ட் தெரிவானார்.

செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

08/02/2026

 

Comments

Popular posts from this blog

கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன்.

 கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில பகுதியில் 8மாத கற்பிணியை வெட்டிக்கொன்ற கணவன். கற்பிட்டி தலவில கெலே பகுதியைச்சேர்ந்த 26மதிக்கத்தக்க பெண்ணியே சம்பவத்தில் உயிரிழந்தாதகதெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இந்த சம்பவத்தைச்செய்த சந்தேக நபரை கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி 45நிமிடங்களில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.சந்தேக நபருக்கு எதிரான குற்றத்துக்கு பயன்படுத்திய கத்தியுடன் கைதுசெய்துள்ளார்கள்.

வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன?

 வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன? கல்முனை வடக்கு  வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஆடை விவகாரம் இலங்கையில் பாரியளவில் பேசுபொருளாக மாறியது. தமிழர்கள் அதிகமாக பணிபுரியும் குறித்த வைத்தியசாலையில் புதிதாக ஒன்பது(9)ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்,இவர்கள் 9பேரும் முஸ்லிம்கள் எனவே அவர்கள் கடமைக்கு செல்லும் பொழுது அரசாங்கம் அங்கீகரித்த தமது கலாசாரத்துக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து சென்றுள்ளனர் இருந்த போதும் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம் மதக்கலாசாரத்தை முக்கியப்படுத்தும் குறித்த ஆடையை அணிந்து பணிபுரிய முடியாது என்று அவர்களுக்கு எதிர்ப்பு உருவாகியது இதனால் இவர்களின் வேலை கேள்விகுறியாகியது. ஆனால் இந்த ஆடைப்பிரச்சினை இலங்கையில் சமூகவளைதலங்களில்  ஒன்றுக்கு ஒன்று முரனான கருத்துகளுடன் மேலோங்கியது எனவே குறித்த 9ஊழியர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு உடனடியாக அரசாங்கம் மாற்றியது .இந்த மாற்றம் சரியானதா ?என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர் இன்று இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த 9ஊழியர்களையும் புதிய வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்...

இம்ரான் மஹ்ரூப் mp மசோதாவை சாபாநாயகரிடம் சமர்பித்தார்

  கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பான பிரேரனையை பாராளுமன்றத்தில் ஆராயக்கோரி சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்ட பிரேரனை ஒன்று வழங்கப்பட்டது.திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட கோரோனா காலத்தில் உயிரிழந்த  முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரனை நடாத்தவேண்டும் என வலியுருத்தும் பிரேரனையை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக்கோரி 20மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்ள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை 19-08-2026இன்று உத்தியோகபூர்வமாக வழங்கினார். இம்ரான் மஹ்ரூப்,முஜிபுர் ரஹ்மான்,காதர் மஸ்தான்,உதுமாலெப்பை,அப்துல் வாசித் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். தகவல்:- இம்ரான் மஹ்ரூப்  பா உ (FB பக்கம்)