சீட் பெல்ட் அணிந்து வந்த ஜனாதிபதி
78து சுதந்திர தின நிகழ்வானது 04/02/2026ம் திகதி காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந் நிகழ்வில் அனைத்து ஏற்பாடுகள் முடிவடைந்து ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருந்தவேலையில் இலங்கை நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் வருகை தந்திருந்தார் ஆனால் இந்த நிகழ்வுக்கு வருகை தரும்பொழுது ஜனாதிபதி வாகனத்தின் முன் இருக்கையில் அமர்ந்து முன் இருக்கையில் சீட் பெல்ட் அணிந்து வந்தது அதிகமானோரின் கவனத்தை ஈர்த்தது.
நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் சாதாரண குடிமகனுக்கு என்ன சட்ட ஒழுங்கோ அதையே தானும் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் வரவேற்க்கத்தக்கது.
இந் நிகழ்வு சமூக ஊடகங்களில் அதிகமாக பேசப்படும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது.
செய்தித்தொகுப்பு:- தாஜூதீன் ஆசிக்
04/02/2026

No comments:
Post a Comment