இந்தியாவுக்கு எதிரான T20தொடரை கைப்பற்றியது அயர்லாந்து. அயர்லாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கான 2போட்டிகள் கொண்டT20 தொடர் ஆரம்பமானது முதலாவது போட்டியானது ஜூன் 26ம் திகதி நடைபெற்றது இந்த போட்டியில் அயர்லாந்து வெற்றிபெற்றது, இந்த தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று 28/06 நடைபெற்றது. நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற இந்திய அணியானது முதலில் பந்துவீசத்தீர்மானித்தது. அயர்லாந்து சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக டிம்.டக்கர்,ரோஸ் அடைர் ஆகிய இருவரும் ஆடுகளம் புகுந்தனர் இந்த இணைப்பாட்டம் போதுமான ஓட்டத்தை பெறும் முன்னரே இந்திய பந்துவீச்சில் இணைப்பாட்டம் இடை நிறுத்ப்பட்டது. அயர்லாந்து சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் ஹெரி டெக்கர் 53 பெஞ்சமின் கெளிட்ஸ் 37 ரோஸ் அடைர் 16 ஜோர்ஜ்டொக்ரேல் 19ஓட்டங்களைப்பெற்றனர். இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் பிரின்ஸ் யாதவ் -3 அர்சிப் சிங்-2 சிவம் தூபே-2 ஹர்சித் ரானா-1 ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். இறுதியில் அயர்லாந்து அணி 20ஓவர்கள் முடிவில் 8விக்கெட்டை இழந்து 154ஓட்டங்களைப்பெற்றனர். 154என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட இந்திய அணியின...