Skip to main content

Posts

Showing posts from January, 2026

கால்கோள் விழா 2026

 கால்கோள் விழா 2026 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயம் புத்/கல்/ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலத்தின் 2026ம் ஆண்டுக்கான முதலாம் தரத்துக்கான புதிய மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்று காலை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வின் முன்னாக் முதலாம் தரத்துக்கு கற்பித்த ஆசிரியைகளுக்கும் புதிய முதலாம் தரத்துக்கு கற்பிக்க இருக்கும் ஆசிரியைகளுக்கும் பரிசுப்பொருட்களும் வைக்கப்பட்டது பாடசாலை அதிபர் அவர்களினால்  இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர்AHM.சக்கூர் பிரதம அதிதியாக MLM.காதர் அவர்களும், ஆலங்குடா கிராமசேவகர் அசீமா,சமூக சேவகர் நிசார்,பாடசாலை ஆசிரியர்கள்,பாலர் பாடசாலை ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள்களும் கலந்துகொண்டனர். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக் 2026./01/29

லூர்து மாதா பாடசாலையில் பொங்கள் கொண்டாட்டம்

புத்தளம் ,கற்பிட்டி,ஆண்டாங்கேனி லூர்து மாதா பாலர் பாடசாலையில் 2026ம் ஆண்டுக்கான தைப்பொங்கள் நிகழ்வானது 23/01/2026ம் ஆண்டு வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழ் பண்டிகைகளில் ஒன்றான தைபொங்கள் பண்டிகையை லூர்து மாதா பாலர் பாடசாலையில் உள்ள சிறுவர்களை வைத்து பாடசாலையின் ஆசிரியைகளினால் இந்த பொங்கள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த பொங்கள் நிகழ்வுகள் இங்கு கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் கலந்துகொண்டு தங்களது கரங்களினால் பொங்களுக்கான அனைத்து உணவுகளை செய்வதையும் மேலும் எல்லா சிறுவர்களும் ,ஆசிரியைகளும் ஒன்றாக அமர்ந்து பொங்கள் உணவுகளை உட்கொள்வதையும் நீங்கள் படத்தில் காணலாம். செய்தித்தொகுப்பு:-தாஜுதீன் ஆசிக் 24.01.2026

மன்னார் ,புத்தளம் பாதை

 மன்னார்-புத்தளம் பாதை (இளவங்குளம் ஊடான) பாதையை மீண்டும் திறக்ககோரி இன்று 23/01/2026 மன்னார் மற்றும் புத்தளத்தின் பல பகுதிகளில் ஜனாதிபதிக்கு இந்த பாதையின் முக்கியத்துவத்கை தெரியப்படுத்தும் நோக்கிலும் ,இந்த பாதையை திறப்பதையும்,இந்த பாதையினூடாக பயணிக்க மக்கள் எவ்வளவு ஆர்வத்துடனும் இருக்கிறார்கள் என்பதை ஜனாதிபதிக்கு தெரிவிக்க மக்களிடம் கையொப்பம் கேட்க்கப்பட்டது அதிகளவிலான மக்கள் இந்த கையொப்பம் வைக்கும் நிகழ்வில் ஆர்வத்துடன் பலரும் தங்களது ஆதரவை கையொப்பமிட்டு தெரிவித்திருந்தனர் என்பதை காணக்கிடைத்தது. மேலும் இந்த பாதையை திறப்பதனால் மக்களுக்கான பயணச்செலவு,பயணச்சுமை என்பன குறையும் அத்தோடு இது புதிதாக இந்த மக்கள் இந்த பாதையை கேட்கவில்லை யுத்ததுக்கு முன் மன்னார் புத்தள மக்களினால் உபயோகித்த பாதை யுத்த முடிவின் பின்னரும் புத்தள,மன்னார் மக்களினால் உபயோகிக்கப்பட்ட பாதையையே இந்த மக்கள் மீண்டும் மக்களின் பாவனைக்காக கேட்க்கின்றனர். எனவே இந்த மக்களின் நீண்டகால ஒரு எதிர்பார்ப்பாக இருக்கும் இந்த மன்னார்,புத்தளம் பாதையை இந்த நாட்டின் தற்ப்போதைய ஜனாதிபதி அவர்கள் நிறைவேற்றித்தருவாரா? என்ற ஒரு கேள்வியோடு...

பாலர் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு    23/01/2026 இன்று PSSOநிறுவனத்தினால் ஆலங்குடா, அல் ஹிஜ்ரா பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கான நினைவுச்சின்னங்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டது.  இன் நிகழ்வில்  pssoஅமைப்பின் தலைவர் T .அன்சார்(மௌலவி) அவர்களும்,PSSO நிறுவனத்தின் கல்விக்கான பொறுப்பாளர் A.S.M.சியாத் அவர்களும் ஊடக பொறுப்பாளர், T.M.ஆசிக் மற்றும் pssoஅமைப்பின் உறுப்பினர் NM,சப்ரான்,மற்றும் ஆலங்குடா பாடசாலையின் அதிபர் AHM.சக்கூர் ,கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பஸ்லி மற்றும் பள்ளித்தலைவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். செய்தித்தொகுப்பு:-தாஜூதின் ஆசிக் 23/01/2026

இலங்கை வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி

 இலங்கை வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி  இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு இருபதுப்போட்டித்தொடர் ஜனவரி 22ம் திகதி தொடம்ங்க உள்ள நிலையில் இந்த தொடரில் பங்கேற்க்க உள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்றைய தினம் இலங்கை பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.   3ஒரு நாள் போட்டி மற்றும் 3T20போட்டிகளில் இலங்கை வந்துள்ள இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக் 19/01/2026

தொடரை வென்றது நியூசிலாந்து அணி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3து ஒரு நாள் போட்டி இன்று கோல்கர் ஸ்டியம் இந்தூரில் நடைபெற்றது.    நாணயசுழற்ச்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது.    நியூசிலாந்து சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்  டேரி மிச்சல் 137(131)கி லன் பிலிப்ஸ் 106(88) வில் யங்/30(41) மிச்சல் பர்ஸ்வேல் 28(18)        அதிகபட்சமாக பெற்றனர் 50ஓவர் முடிவில் 337-8ஓட்டங்களைப்பெற்றது.    இந்தியா சார்பாக பந்துவீச்சில்  அர்தீப் சிங்க் 3-63 ஹர்சித் ரனா 3-84 முகம்மட் சிராஜ் 1-43 குல்தீப் யாதவ்  1-48     338 என்ற வெற்றி இலக்கை நோக்கி  துடுப்பெடுத்தாடிய இந்திய ஆரம்பமே அதிரடியாக ஆரபித்தது இந்தியா சார்பாக துடுப்பெடுத்தாடிய வீரர்கள் பின் வருமாறு ஓட்டங்கைப்பெற்றனர்.  விராட் கோலி 124(108) நிதிஸ் ரெட்டி 53(57) ஹர்திஸ் ரனா 53(43) சுப்மன் கில் 23(18)     என்ற ஓட்டங்களைப்பெற்னர் மிகவும் தீர்க்கமான போட்டியான இந்த போட்டி ரசிகர்களினால் எதிர்ப்பார்க்கப்பட்டது 3போட்டிகளை  கொண்ட இந்த தொடர் 1-1என்ற அடிப்பட...

புத்தளத்தில் பிரதமர் ஹரினி அமரசூரிய

 17/01/2026 இன்று  பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்கள் புத்தளத்தின் பல முக்கிய இடங்களுக்குசென்று பார்வையிட்டதன் பின்பு புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரிக்கு விஜயம் செய்து அங்கு இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டார். இவ்விஜயத்தின்போது பிரதமருடன் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன,  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஜே.எம். பைசல், கயான் ஜானக உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்தனர். செய்தி மூலம்- பைசல் பா.உ( Fb) 17/01/2026

விடைபெறுகிறார் ஜூலி ஜியூன் சங்

 தனது இராஜதந்திர பதவிக் காலச் சேவை நிறைவடைந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க குடியரசின் தூதுவர் ஜூலி ஜியூன் சங் (Julie Chung) இன்று16/01/2026 காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தார். இலங்கைக்கு கடந்த காலங்களில் அவர் பெற்றுத் தந்த ஒத்துழைப்புகளுக்கும் ஆதரவுகளுக்கும் அவருக்கு எதிர்க்கட்சித்தலைவர் நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டார். அவரால் இந்நாட்டில் தூதுராக சேவையாற்றிய காலத்தில் பெற்றுத் தந்த சிறந்த சேவையை ஒருபோதும் மறந்திட முடியாது என்றுன் எதிர்க்கட்ச்சித்தலைவர் தெரிவித்தார். தகவல்:-சஜித் பிரமேதாச (முகனூல்) 17/01/2026

ACTIVE KIDS KINDERGARTEN ALANKUDA வின் *Tiny* *Titans* *சிறிய* *கைகள்* *பெரிய* *சாகசங்கள்*

  2026/01/13 ம் திகதி அதிபர் மற்றும் ஆசிரியைகள் தலைமையில் , ஆலங்குடா Eye Institute வளாகத்தில் வெகு விமர்சயாக நடைபெற்றது. இதில் Active Kids Kindergarten இன் மழலைகள் தங்கள் திறமைகளை மிகவும் சிறப்பாகவும் ரசிக்கும் வண்ணமும் வெளிப்படுத்தினார்கள். இதற்காக பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பயிற்றுவித்து பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர் 👏. பிள்ளைகள் தங்கள் ஆடைகளையும் பெற்றோரின் ஆடைகளையும் நீருடனும் சலவை தூளுடனும் bubbles உடனும் விளையாடிய வண்ணம் மிகவும் சிறப்பாகவும் வேடிக்கையாகவும் கழுவினார்கள். பார்ப்பதற்கு மிகவும் கண் கவரும் வகையில் இருந்தது.  மேலும் மிக அழகிய முறையில் பல வண்ணங்களில் chef உடையுடன் தங்கள் சிறிய கரங்களால் பழங்கள், மரக்கறிகளை வெட்டி தேங்காய் துருவி, உரல் கொண்டு இடித்து இன்னும் பல வகைகளில் பல விதமான கண்ணை கவரும் வண்ணங்களில் உணவுகளையும் பானங்களையும் தயாரித்தனர். குழந்தைகளுக்கு “எனக்கும் செய்ய முடியும்” என்ற தன்னம்பிக்கையையும், பொறுப்பு , சகிப்புத் தன்மை , படைப்பாற்றல் போன்ற மன நலம் சார்ந்த நன்மைகளை நோக்கமாக கொண்டே இந்நிகழ்வு *(Tiny Titans)* (*சிறிய கைகள் பெரிய சாகசங்கள்* )ஏ...