Skip to main content

பாக்கிஸ்தான் vs நெதர்லாந்து

  1.  20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026) 

   T20 உலககிண்ணத்தின் முதலாவது போட்டி  07/02/2026 பாக்கிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையில் இன்று காலை 11மணிக்கு கொழும்பில் ஆரம்பமானது.

   நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் பந்துவீசத்தீர்மானித்தார்.நெதர்லாந்து அணியானது 28ஓட்டங்களுக்கு முதலாவது விக்கெட்டை இழந்தது.


நெதர்லாந்து அணி சார்பாக 

எட்வேர்ட்ஸ் 29பந்துகளுக்கு 37 ஓட்டங்களும்

பேஸ் டி லேட்ஸ்    25பந்துகளுக்கு 30ஓட்டங்களும்

அக்கர்மேல் 14பந்துகளில் 20ஓட்டங்களும்

அர்யன் டொட் 8பந்துகளுக்கு 13ஓட்டங்களுக் பெற்றனர்.

19.4ஓவர்கள் நிறைவில் 147ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்தது.


 பாக்கிஸ்தான் சார்பாக பந்து வீச்சில்

சல்மான் மிர்சான்-3

முஹம்மட் நவாஸ்-2

அப்ரார் அஹமட்-2

சயீம் அய்யூப்-2


    148எடுத்தால் வெற்றி என்று ஆடுகளம் புகுந்த பாக்கிஸ்தான் அணியின் ஆரம்பத்துடுப்பெடுத்தாட்டம் சரியாக அமையவில்லை முதலாவது விக்கெட் 28ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது


 நெதர்லாந்து அணியின் பந்து வீச்சானது பாக்கிஸ்தான் அணிக்கு மிகவும் சவாலாக அமைந்தது என்றுதான் கூறவேண்டும்

  பாக்கிஸ்தான் சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்

சயீம் அய்யூப் 13பந்துகளில் 24ஓட்டம்

சகிசதா பர்கான் 31 பந்துகளில் 47 ஓட்டம்

பஹீம் அஸ்ரம் 11பந்துகளில்29ஓட்டம்

பாபர் அசாம் 18பந்துகளில் 15ஓட்டம் என்று பெற்றனர்.

   இறுதியாக 19.3பந்துகளில் 7விக்கெட்டை இழந்து போராடி வெற்றி இலக்கை அடைந்தது 148ஓட்டம் 

  நெதர்லாந்து அணி சார்பாக பந்து வீச்சில்

அர்யன் டுட் 2விக்கெட்டையும்


லோகோன் வேன் பீக்1விக்கெட்டையும்

மீக்கரேன் 2விக்கெட்டையும்

கையில் களின் 1விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.


   2016-01து T20உலககிண்னத்தின் முதலாவது போட்டியில் பாக்கிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது

  செய்தி ஆசிரியர்:-தாஜூதீன் ஆசிக்

07/02/2026

Comments

Popular posts from this blog

கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன்.

 கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில பகுதியில் 8மாத கற்பிணியை வெட்டிக்கொன்ற கணவன். கற்பிட்டி தலவில கெலே பகுதியைச்சேர்ந்த 26மதிக்கத்தக்க பெண்ணியே சம்பவத்தில் உயிரிழந்தாதகதெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இந்த சம்பவத்தைச்செய்த சந்தேக நபரை கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி 45நிமிடங்களில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.சந்தேக நபருக்கு எதிரான குற்றத்துக்கு பயன்படுத்திய கத்தியுடன் கைதுசெய்துள்ளார்கள்.

வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன?

 வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன? கல்முனை வடக்கு  வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஆடை விவகாரம் இலங்கையில் பாரியளவில் பேசுபொருளாக மாறியது. தமிழர்கள் அதிகமாக பணிபுரியும் குறித்த வைத்தியசாலையில் புதிதாக ஒன்பது(9)ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்,இவர்கள் 9பேரும் முஸ்லிம்கள் எனவே அவர்கள் கடமைக்கு செல்லும் பொழுது அரசாங்கம் அங்கீகரித்த தமது கலாசாரத்துக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து சென்றுள்ளனர் இருந்த போதும் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம் மதக்கலாசாரத்தை முக்கியப்படுத்தும் குறித்த ஆடையை அணிந்து பணிபுரிய முடியாது என்று அவர்களுக்கு எதிர்ப்பு உருவாகியது இதனால் இவர்களின் வேலை கேள்விகுறியாகியது. ஆனால் இந்த ஆடைப்பிரச்சினை இலங்கையில் சமூகவளைதலங்களில்  ஒன்றுக்கு ஒன்று முரனான கருத்துகளுடன் மேலோங்கியது எனவே குறித்த 9ஊழியர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு உடனடியாக அரசாங்கம் மாற்றியது .இந்த மாற்றம் சரியானதா ?என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர் இன்று இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த 9ஊழியர்களையும் புதிய வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்...

இம்ரான் மஹ்ரூப் mp மசோதாவை சாபாநாயகரிடம் சமர்பித்தார்

  கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பான பிரேரனையை பாராளுமன்றத்தில் ஆராயக்கோரி சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்ட பிரேரனை ஒன்று வழங்கப்பட்டது.திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட கோரோனா காலத்தில் உயிரிழந்த  முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரனை நடாத்தவேண்டும் என வலியுருத்தும் பிரேரனையை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக்கோரி 20மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்ள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை 19-08-2026இன்று உத்தியோகபூர்வமாக வழங்கினார். இம்ரான் மஹ்ரூப்,முஜிபுர் ரஹ்மான்,காதர் மஸ்தான்,உதுமாலெப்பை,அப்துல் வாசித் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். தகவல்:- இம்ரான் மஹ்ரூப்  பா உ (FB பக்கம்)