கிண்ணத்தைகைப்பற்றிய எவெரஸ்ட் அணி புத்தளம் ,கற்பிட்டி ,ஆலங்குடாவின் எவெரஸ் கிரிக்கெட் கழகத்தின் ஏற்பாட்டில் ஜூலை மாதம் 24,25,26ம் திகதிகளில் மாபெரும் மென்பந்துகிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமான முறையில் நிறைவுக்குகொண்டுவரப்பட்டது ,இந்த தொடரானது பகல் இரவுப்போட்டியாக நடைபெற்றது சுமார் 40அணிகளுக்குமேல் இந்த தொடரில் பங்குபெற்றியது இந்த தொடரில் வெற்றிபெரும் அணிக்கு சுமார் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய்(150000) மற்றும் கிண்ணம்,இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய்கள் மற்றும் கிண்ணம் என அறிவிக்கப்பட்டது. மூன்று நாட்கள் பகல்,இரவாக இந்த போட்டிகள் நடாத்தப்பட்டத்து அந்த வகையில் அரை இறுதிக்கு 40அணிகளில் இருந்து வயம்பல லெவன்,எவெரஸ்ட்,போல்ஸ்டார்,சென் செபஸ்டியன் அணிகள் தேர்வாகின,முதலாவது அரை இறுதிப்போட்டி வயம்ப லெவன் மற்றும் எவெரஸ்ட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் எவெரஸ்ட் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது,இரண்டாவது அரை இறுதி போல்ஸ்டார் மற்றும் சென் செபஸ்டியன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் போல்ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு தகுதுபெற்றது. இ...