Sunday, 27 July 2025

உலமாக்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

உலமாக்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டி 



ஆலங்குடா உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 26/07/2025ம் திகதி ஆலங்குடா மெல்போன் மைதானத்தில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்படு இருந்தது




இந்த தொடரில் கற்பிட்டி,திகழி,முதலைப்பாளி, ஆலங்குடா ஆகிய பிரதேசங்களில் இருந்து 6அணிகள் பங்குபற்றின


இதில் இறுதிப்போட்டிக்கு கல்பிட்டி -B உலமாக்கள் அணி மற்றும் திகழி உலமாக்கால் அணி தகுதிபெற்றது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் கல்பிட்டி-b உலமாக்கள் அணியை வீழ்த்தி திகழி உலமாக்கள் அணி வெற்றி பெற்றது.



டி.எம்.ஆசிக்

 சிலாவத்துறை பஸ் நிலையம் மாற்றியமைக்கப்பட வேண்டும்




முசலிப் பிரதேசத்திற்கான பிரதான பஸ் நிலையமொன்று 2009 யுத்த முடிவில் 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ் சிலாவத்துறையில் அமைக்கப்பட்டது.


எனினும் அந்த பஸ் நிலையம் எவ்வித அடிப்படைத் திட்டமுமின்றி மக்கள் பயன்படுத்த முடியாத ஓர் இடத்தில் அமையப் பெற்றுள்ளது. பஸ்கள் அங்கு வந்து செல்வதற்கான நடைமுறைச் சாத்தியமில்லை.


அந்த பஸ் நிலையம் வேளாண்மை காலங்களில் நெல் காயப்போடும் ஒரு அனுகூலமான பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படும் அதேவேளை அதிக இரவு நேரங்களில் மாட்டுத் தொழுவமாகவும் போதைப்பொருள் பாவிக்கும் இடமாகவும் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கிறனர். 


மக்கள் அதிகம் கூடுகின்ற, நடமாடுகின்ற, வந்து செல்லக்கூடிய. இடத்திலேயே ஒரு பிரதேசத்திற்கான பஸ் நிலையம் அமையப்பெற வேண்டும்.


சிலாவத்துறை சந்தியைச் சூழவுள்ள வைத்தியசாலை, வங்கி உட்பட்ட பல்வேறு அரச அலுவலகங்கள், வர்த்தக நிலையங்களில் மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட்டு பஸ் நிலையம் வந்து பஸ் மூலம் தமது கிராமத்துக்கு இலகுவாகச் செல்வதற்கான ஒரு பஸ் நிலையம் சிலாவத்துறைச் சந்தியிலேயே அமைக்கப்பட வேண்டும். 


(நானாட்டான் பஸ் நிலையம் ஒரு முன்மாதிரியாகும்)


இதற்குப் பொருத்தமான காணி சிலாவத்துறைச் சந்தியில் முன்னர் 'சீநோர்' நிலையம் அமைந்திருந்த இடத்தில் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் போது குறித்த காணியைத் தவிர்த்துவிட்டு எவ்வித பொருத்தமும் இல்லாத இடத்தில் சிலாவத்துறை பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.


(இதுவொரு சமூகத்துக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகமாகும்)


வேப்பங்குளம், மறிச்சுக்கட்டி, அரிப்புத்துறை ஆகிய 3 பக்கங்களிலிருந்து சிலாவத்துறை சந்திக்கு வரும் மக்களும் முசலிப் பிரதேசத்திலிருந்து வெளி இடங்களுக்குச் செல்லும் பயணிகளும் ஓர் உருப்படியான பஸ் நிலையம் இல்லாமல் சிலாவத்துறை சந்தியில் அலைக்கழிந்து திரிகின்றனர்.


எனவே சிலாவத்துறைச் சந்தியில் அமைந்துள்ள சீநோர் காணியில் கடைத்தொகுதியுடன் கூடிய பிரதான பஸ் நிலையம் அமைக்கப்படுவதோடு தற்போது பயனற்றுக் கிடக்கும் பஸ் நிலையம் விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்தும் நிலையமாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.


எனவே தயவுசெய்து 'தேசிய மக்கள் சக்தி' (NPP) முக்கியஸ்தர்களும் முசலிப் பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் சமூகத்துக்கான இவ்வுயரிய பணியில் ஒன்றுபட்டு அதிக கவனம் செலுத்தி செயற்பட முன்வர வேண்டுமென அன்பாகக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


எழுத்தாளர்:-Muhuseen Raisudeen

Sunday, 20 July 2025

நுரைச்சோலையில் இஞ்சி வைத்திருந்தவர் கைது

 நுரைச்சோலை பகுதியில் 2828 கிலோ கிராம் சட்டவிரோத இஞ்சி பறிமுதல்!


நுரைச்சோலை சஞ்சிதவத்தை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 மூடைகளில் 

2828 கிலோ கிராம் இஞ்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட 33 வயது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



கடற்படையினருடனும், நுரைச்சோலை பொலிஸாருடனும் இணைந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீடுகளில் வலைவீச்சு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.




தகவல்களின்படி, இவ்வாறு சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்படும் இஞ்சி இந்தியாவில் இருந்து கடல் வழியாகப் பதுக்கப்படுவதாகவும், இது சிறந்த லாபம் தரும் குற்றவியல் வணிகமாக மாறிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கைப்பற்றப்பட்ட பொருட்களும் சந்தேகநபரும் சட்ட நடவடிக்கைக்காக நுரைச்சோலை பொலிஸாரால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

20/07/25


மன்னார் இளைஞசன் விமானி

 மன்னார் - விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கற்றிருந்தார்.




தொடர்ந்து பின்லாந்து தேசத்தில் மின்னியல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தில் தொழில் சார்ந்த உயர்நிலை இரண்டாம் நிலை தரத்தின் தகுதியையும் மின்னியல் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்று,  ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் (EASA) விமானங்களுக்கான வணிக விமானி உரிமம், (EASA CPL(A) MULTI-ENGINE PISTON (MEP) மற்றும் கருவிகளின் மதிப்பீடு (IR), செயல்திறன் அடிப்படையிலான வழிநடத்துதல் (PBN) மற்றும் ADVANCED UPRT தடுப்புமுறை மற்றும் மீட்பு பயிற்சி அதாவது விமான கட்டுப்பாட்டு இழப்பிலிருந்து மீட்பு பயிற்சி ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.


ATPL ஏர்லைன் போக்குவரத்து விமானி ஒருவர் பெறக்கூடிய விமான உரிமத்தை பெற்றுள்ளார். இது ஒரு விமானி பெறக்கூடிய அதிக தரமான உரிமமாக இருப்பதுடன் இவ்வுரிமத்தை கொண்டு ஒருவர் வணிக விமானங்களில் தலைமை விமானியாக (Captain) பணியாற்ற முடிகிறது.


விமானியாக சரித்திரத்தில் இடம்பிடித்து சாதனை புரிந்த அனுஜனின் மன்னார் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்

Wednesday, 16 July 2025

காணி விடுவிக்க உத்தரவு

 வர்த்தமானிகளின் மூலம் வனலாகா கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க உடனடி உத்தரவு.


இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) இடம்பெற்றது. 



கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இளையதம்பி ஶ்ரீநாத், கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்,  கந்தசாமி பிரபு,  ஆகியோரது பங்கேற்புடன் இக் கூட்டம் இடம் பெற்றது.




இக்கூட்டத்தில் விஷேட அதிதியாக, சுற்றாடல் அமைச்சர் கௌரவ வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி  (பா.உ) கலந்துகொண்டார்.


இதன்போது, சுற்றாடல்  அமைச்சிற்குட்பட்ட திணைக்களங்களின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.


இன்றைய கூட்டத்தின் போது நான் பல்வேறு முன்மொழிவுகளை முன் மொழிந்த்திருந்தேன். அதனடிப்படையில்.


வனத்திணைக்களத்தின் 1985ம் ஆண்டு வர்த்தமானியில் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளவற்றை தவிர்த்து எமது மக்கள் பயிர் செய்கை செய்து வந்த பல ஏக்கர் காணிகள் வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியிருந்தது. இதனை கருத்திற்கொண்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட காணிகளை விட பின்னர் வந்த வர்த்தமானிகளின் மூலம் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்குமாறு நான் முன்னைய அரசாங்க காலத்தில் 2023ம் ஆண்டு விடுத்த வேண்டுகோளின் பிரகாரம், அனைத்து பிரதேச செயலகங்களினாலும் குறித்த வர்த்தமானிக்கு மேலதிகமாக காடுகளாக காட்டப்பட்டுள்ள நிலங்கள் தொடர்பாக அறிக்கை தயார்செய்து வழங்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின் பிரகாரம் காணிகளை விடுப்பதற்கு  வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதனை சுற்றாடல் அமைச்சர் புதிய வர்த்தமானியினை வெளியிடுவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னரும் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டு நிறைவேறாமல் சென்றுள்ளது. ஆகவே இந்த அரசாங்கமாவது இக்காணிகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தியுள்ளார்.


புவிச்சரிதவியல் சுரங்கங்கள் அளவை பணியகம் (GSMB) ஆனது மேல்மண் மற்றும் ஆற்றுமண் அகழ்வு பத்திரங்கள் வழங்கும் போது பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட திணைக்களங்களின்  பிரசன்னத்துடன் களவிஜயம் மேற்கொண்டு அனைத்து திணைக்களங்களின் ஒப்புதலின் பின்னர் தான் வழங்க வேண்டும் என எனவும்.


அத்துடன், மண்ணகழ்ந்து சேமித்து வைக்கப்படும் களஞ்சியசாலை (Yard) மண்ணகழ்வுதாரர்கள் காட்டினை அண்டிய பகுதியில் வைத்து இரவு வேளைகளில் மண்ணகழ்வினை மேற்கொண்டு பகல் வேளைகளில் அதனை விநியோகம் செய்கின்றார்கள். ஆகவே இதனை பிரதான வீதிகளுக்கு அருகாமையில் உத்தியோகத்தர்கள் மேற்பார்வை செய்யக்கூடியவாறு அமைத்தல் வேண்டும். அத்துடன், இவ் நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ளும் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தேவையான ஆளணி மற்றும் வாகன வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் எனது கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.


தகவல்:-பா உ சாணக்கியன் முகனூலில்

16/07/25

Monday, 14 July 2025

இந்தியாவின் முயற்சியை இறுதியில் தடுத்த ஸ்பின்

   திரில் வெற்றியை பெற்றது இங்கிலாந்து


இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3து டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது


T .m.ஆசிக்


இங்கிலாந்து சார்பாக

  • ரூட் 104
  • பிரைடின் கேர்ஸ் 56
  •  போப், ஸ்டோகஸ் தலா 44 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற 387 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களை இழந்தது



இந்தியா சார்பில் பந்துவீச்சில்

  • பும்ராஹ் -5
  • சிராஜ்,நிதிஷ் ரெட்டி தலா 2
  • ஜடேஜா -1 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.


தனது முதலாவது இன்னிங்க்ஸ் துடுப்பெடுத்தாட சென்ற இந்திய அணி இங்கிலாந்தைப்போல 387ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது

 இந்தியா சார்பாக அதிகபட்சமாக

  • ராகுல்-100
  • ரிசப் பண்ட் -74
  • ஜடெஜா-72 ஓட்டங்களைப்பெற்றனர்.


இங்கிலாந்து சார்பாக பந்து வீச்சில்

  • கிரிஸ் வோக்ஸ்-3
  • ஆச்சர்,ஸ்டோக்ஸ் தலா 2

  • கேர்ஸ்,பசீர் தலா 1 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.


மீண்டும் தனது 2து இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்துக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது 190ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்தது 

  இந்தியாவின் பந்து வீச்சில்

  • வாவிங்டன் சுந்தர்-4
  • சிராஜ்,பும்ராஹ் தலா -2
  • ரெட்டி,அகாஸ் டீப் தலா-1 ஒரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.


 190என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி இறுதிவரை போராடியது இருந்தும் இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்கள் ஒருவருக்கொருவர் வெற்றிக்காக தங்களது மிகச்சிறந்த பந்துவீச்சு பிரதியை மேற்கொண்டனர் அதன் காரணமாக 22 ஓட்டங்களினால் இங்கிலாந்து வெற்றியை தனதாக்கியது.




 இந்தியா சார்பாக ரவீந்திர ஜடேஜா இறுதிவரை தனது அணிக்காக போராடினார் இருந்தும் பயனளிக்கவில்லை 

 இந்தியா சார்பாக அதிகபட்சமாக

  • ஜடேஜா -61
  • ராகுல்-31
  • கருன் நாயர்-14 ஓட்டங்களை அதிகபட்சமா பெற்றனர்.

 இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில்



  •  ஆச்சர்,பென் ஸ்டோக்ஸ் தலா 3
  • பைடன் கேர்ஸ்-2
  • பசீர்,வோக்ஸ் தலா 1விக்கெட்டுக்களை பெற்றனர் . 

22ஓட்டங்களினால் இங்கிலாந்து வெற்றி பெற்றது

  5போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1என்ற அடிப்படையில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.


   

Friday, 11 July 2025

Abacusயினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சி

 ICAM Abacus கல்பிட்டி கிளையினால் நடத்தப்பட்ட *Regional Abacus Speed Maths Competition* ஜூலை 10 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு ஆலங்குடா Eye Institute இல்  வெற்றிகரமாக நடைபெற்றது.

இதில் ஆலங்குடா, திகழி, பள்ளிவாசல்துறை, கண்டல்குளி மற்றும் கல்பிட்டி ஆகிய கிளைகளிலிருந்தும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் . 


போட்டி நடைபெற்றதினத்திலே வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் ICAM abacus பெயர் பொதிக்கப்பட்ட purse வழங்கப்பட்டது..





இந்நாளை வெற்றிகரமாக கழிக்கச்செய்த ICAM Abacus kalpity branch ஆசிரியைகளுக்கும் , Eye Institute க்கும்  நன்றியை தெரிவித்தனர். ஏற்பாட்டுக்குழுவினர்.





தகவல்:-The area Manger

Alankuda Coaching Center

11/07/2025

Wednesday, 9 July 2025

இம்ரான் மஹ்ரூப் உயிர் அச்சுருத்தலா?

 குச்சவெளி ,புல்மோட்டை பிரதேச ACMC முக்கியஸ்தர்களால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் சேறு பூசும் நடவடிக்கைகளுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ACMC க்கு ஆதரவு வழங்காத காரணத்தால் குச்சவெளி மற்றும் புல்மோட்டை பிரதேச சில ACMC முக்கியஸ்தர்கள் மற்றும் சில ACMC ஆதரவாளர்கள்  தனக்கு சமூக வலைத்தளம் ஊடாகவும் ஏனைய வழிகளிலும் உயிர் அசச்சுறுத்தல் விடுத்ததாகவும் தொடர்ச்சியாக சேறு பூசும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்ததாகவு.



எனவே அவர்களுக்கு எதிராக நேற்று(8)  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தனது முறைபாட்டையும் பதிவு செய்துள்ளார்



அத்துடன் தனது சட்டதரணி ஊடாக அவர்களுக்கு எதிரான  சட்ட நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளதாகவும்,தெரிவித்துள்ளார்.

தகவல் :-இம்ரான் மஹ்ரூப் முகனுல்

10/07/2025



Tuesday, 8 July 2025

தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

 இலங்கை  மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தீர்மானமிக்க போட்டியில் வெற்றிபெற்றது இலங்கை அணி




இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் போட்டியில் 2-1அடிப்படையில் வெற்றிகொண்டது இலங்கை அணி


1-1என்ற அடிப்படையில் சமநிலையில் இருந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று 8/7/2025 கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்றது

  நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது

   இலங்கை சார்பாக

  • பத்தும் நிசாங்க 34
  • குசல் மெண்டிஸ்-124
  • அசலங்க 54   அதிக பட்சமாக பெற இலங்கை 7விக்கெட்டுகளை இழந்து 285 ஓட்டங்களைப்பெற்றது .


  • பங்களாதேஷ் பந்துவீச்சு சார்பாக
  • தஸ்கின் அஹமட்,மஹ்தி ஹசன் தலா 2விக்கெட்டையும்,
  • தன்சீம்,தன்விர் இஸ்லாம்,ஹொசைன் ஆகியோர் தலா 1விக்கெட்டையும் பெற்றனர்.


 285என்ற வெற்றி இலக்கை நோக்கித்துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 186 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது


பங்களாதேஷ் சார்பக

  •  தவ்டி ஹரிடி 58
  •  பர்வீஸ் ஹூசைன்28
  • மஹ்தி ஹசன்28 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றனர்.
  •  இலங்கை சார்பாக பந்து வீச்சில் 
  • அசித பெர்னாண்டோ,சமீரா தலா 3விக்கெட்டையும்
  •  வெல்லாலகே,ஹசரங்கா தலா2விக்கெட்டையும் கைப்பற்ற 99 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றியை தனதாக்கி தொடரை கைப்பற்றியது.

டி.எம்.ஆசிக்
09/07/2025

நுரைச்சோலை பாடசாலை சுத்தம்

 Clean srilanakஎனும் திட்டத்தில் நுரைச்சோலை பாடசாலை சுத்தம் செய்யப்பட்டது

த.மு.ஆசிக்

 Clean srilanka எனும் திட்டத்தின் கீழ் புத்தளம்,நுரைச்சோலை தேசிய பாடசாலையின் வழாகம் பாடசாலை மாணவர்கள் ,அதிபர்,ஆசிரியர்களினால் சுத்தம் செய்யப்பட்டது இதன் போது சுகாதார பரிசோகதர்களும் கலந்துகொண்டனர்.
     


  08/07/2025

Monday, 7 July 2025

 சிலாவத்துறை பாடசாலை மாணவி பஹ்மா 
தேசிய மட்டத்தில் 3 ஆம் இடம் 




சிலாவத்துறை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி F.பஹ்மா அரசகரும மொழிகள் ஆணைக்குழுவிற்கான குறிக்கோள் வாசகங்களை (Motto) உருவாக்கும் அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போட்டியில் (தமிழ் மொழிப் பிரிவு) 3 ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.



பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றிச் சான்றிதழ், நினைவுச் சின்னம், 25,000 ரூபா பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்ட பஹ்மா ஹுனைஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த பிரோஸ்கான் - றினோசா தம்பதியரின் புதல்வியாவார்.


மாணவியின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்


தகவல்:-Muhuseen Raisudeen(fb)

08/07/25

Thursday, 3 July 2025

200ஓட்டங்களைபெற்றார் சுப்மன் கில்

 டெஸ்ட் போட்டிகளில் முதல் தடவையாக 200 ஓட்டங்களை பெற்றுள்ளார் சுப்மன் கில்




 இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2து டெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தலைவர் சுப்மன் கில் 200*ஓட்டங்களை கடந்துள்ளார் இது கில்லின் டெஸ்ட் போட்டிகளில் முதலாவது 200ஓட்டம் என்பது குறிப்பிடத்தக்கது


03/07/2025

Tuesday, 1 July 2025

தென்னாபிரிக்கா வெற்றி


தென்னாபிரிக்கா மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியானது கூயீன் ஸ்போர்ட் மைதானத்தில் ஜூன் 28 ஆரம்பமானது நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற  தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.



தென்னாபிரிக்கா சார்பாக

  •      பிரீட்டரிஸ் 153
  • கோர்பின் போஸ் 100
  • பிரவீஸ் 51 

   ஓட்டங்கள் பெற முதல் இன்னிங்ஸ்யில் 418ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டை இழந்தது


சிம்பாபே சார்பாக பந்துவீச்சில் 

  • டக்கிங் சிவங்கா 4
  • முசர்பனி 2
  • வில்லிங்டன் மசகஸ்டா,வின்சண்ட் மசகஸ்டா தலா 1 விக்கெட்டை பெற்றனர்.


தனது முதலாவது இன்னிங்சை தொடர்ந்த சிம்பாபே சார்பாக 

  • சேன் வில்லியம்ஸ்137
  • கிரஜ் எர்வின் 36 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற 251 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது 


தென்னாபிரிக்கா சார்பாக பந்துவீச்சில்

  • கிவ்னா மபாகா 4
  • கேசவ் மகாராஜா,
  • கோடி யூசுப் தலா 3விக்கெட்டுக்களை பெற்றனர்.

  

அதனைத்தெடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென்னாபிரிக்கா சார்பாக

  • முல்டர் 151
  • மஹாராஜா51
  • கோர்பின் போஸ் 36
  • வெர்ரின் 36

    என்ற ஓட்டங்களைப்பெற தென்னாபிரிக்கா சகலவிக்கெட்டுக்களையம் இழந்து 369 ஓட்டங்களைபெற சிம்பாபே அணிக்கு வெற்றி இலக்காக 537ஓட்டங்கள் தீர்மானிக்க்கப்பட்டது


  •  537என் இமாலய வெற்றி இலக்கை நோக்கி புறப்பட்ட சிம்பாவே அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தென்னாபிரிக்காவின் பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல்
  • விலிங்டன் மசகஸ்டா 57
  • கிரக் எர்வின் 49
  • முசரபானி 32 அதிகபட்சமாக பெற 208 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழக்க 328ஓட்டங்களினால் தென்னாபிரிக்க வெற்றியீட்டியது 


தென்னாபிரிக்கா சார்பாக பந்து வீச்சில்

  • கோர்பின் போஸ் 5
  • கோடி யூசுப் 3
  • மகாராஜா,பிரிவிஸ் தலா 1விக்கெட்டையுன் கைப்பற்றினார்கள்.



ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...