Skip to main content

West indies vs scotland

 20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026) Match-2
 

   T20 உலககிண்ணத்தின் இரண்டாவது போட்டி  07/02/2026 மேற்கிந்திய் தீவுகள் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கிடையில் இன்று பிற்பகல் 3.00மணிக்கு கொல்கத்தாவில் ஆரம்பமானது.

   நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணித்தலைவர் பந்துவீசத்தீர்மானித்தார்.


 மேற்கிந்திய தீவுகள் அணியானது ஆரம்பமே அதிரடியாக ஆரம்பித்தது 54ஓட்டங்களுக்கு தனது முதலாவது விக்கெட்டை இழந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக 

சிம்ரோன் ஹெட்மயிர் 36பந்துகளுக்கு 64 ஓட்டங்களும்

பிரண்டன் கிங்    30பந்துகளுக்கு 35ஓட்டங்களும்

சர்பம் ரூத்போரட் 13பந்துகளில் 26ஓட்டங்களும்

ரோமன் பவல் 14பந்துகளுக்கு 24ஓட்டங்களும் பெற்றனர்.

20ஓவர்கள் நிறைவில் அதிரடியாக ஆடிய மேற்கிந்திய தீவுகள் அனி 182ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் இழந்தது.



 ஸ்காட்லாந்து சார்பாக பந்து வீச்சில்

பிரட் கேரி-2

ஒழிவர் டெவிட்சன்-1

சப்யான் சரிப்-1

மிச்சல் லெசக்-1

    183எடுத்தால் வெற்றி என்று ஆடுகளம் புகுந்த ஸ்காட்லாந்து அணியின் ஆரம்பத்துடுப்பெடுத்தாட்டம் சரியாக அமையவில்லை 

முதலாவது விக்கெட் 07ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது

 மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சானது சிறப்பானதாக இருந்தது ஸ்காட்லாந்து அணிக்கு மிகவும் சவாலாக அமைந்தது என்றுதான் கூறவேண்டும்

  ஸ்காட்லாந்து சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்

டொம் பூரூஸ் 28பந்துகளில் 35ஓட்டம்

பிரிங்க்ஷன் 42 பந்துகளில் 24 ஓட்டம்

மார்க் வால்ட் 12பந்துகளில்15ஓட்டம்

பிரண்டன் மெக் முலன் 12பந்துகளில் 14ஓட்டம் என்று பெற்றனர்.

   இறுதியாக 18.5பந்துகளில் சகலவிக்கெட்டுக்களையும் இழந்ததது ஸ்காட்லாந்து அணி 

  மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக பந்து வீச்சில்

ரோமாரோ சீப்ஹார்ட் 5விக்கெட்டையும்

ஜெசன் ஹோல்டர் 3

 பவிக்கெட்டையும்

சாமர் ஜோசப் 1விக்கெட்டையும்

மோட்டி 1விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.


   2026- T20உலககிண்னத்தின் இரண்டாவது (2து) போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணி 35ஓட்டங்களினால் வெற்றி பெற்றதே.

சீப்ஹார் ஹெட்ரிக்கை கைப்பற்றினார். என்பது குறிப்பிடத்தக்கது.


 செய்திஇத்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

07/02/2026

Comments

Popular posts from this blog

கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன்.

 கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில பகுதியில் 8மாத கற்பிணியை வெட்டிக்கொன்ற கணவன். கற்பிட்டி தலவில கெலே பகுதியைச்சேர்ந்த 26மதிக்கத்தக்க பெண்ணியே சம்பவத்தில் உயிரிழந்தாதகதெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இந்த சம்பவத்தைச்செய்த சந்தேக நபரை கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி 45நிமிடங்களில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.சந்தேக நபருக்கு எதிரான குற்றத்துக்கு பயன்படுத்திய கத்தியுடன் கைதுசெய்துள்ளார்கள்.

வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன?

 வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன? கல்முனை வடக்கு  வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஆடை விவகாரம் இலங்கையில் பாரியளவில் பேசுபொருளாக மாறியது. தமிழர்கள் அதிகமாக பணிபுரியும் குறித்த வைத்தியசாலையில் புதிதாக ஒன்பது(9)ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்,இவர்கள் 9பேரும் முஸ்லிம்கள் எனவே அவர்கள் கடமைக்கு செல்லும் பொழுது அரசாங்கம் அங்கீகரித்த தமது கலாசாரத்துக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து சென்றுள்ளனர் இருந்த போதும் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம் மதக்கலாசாரத்தை முக்கியப்படுத்தும் குறித்த ஆடையை அணிந்து பணிபுரிய முடியாது என்று அவர்களுக்கு எதிர்ப்பு உருவாகியது இதனால் இவர்களின் வேலை கேள்விகுறியாகியது. ஆனால் இந்த ஆடைப்பிரச்சினை இலங்கையில் சமூகவளைதலங்களில்  ஒன்றுக்கு ஒன்று முரனான கருத்துகளுடன் மேலோங்கியது எனவே குறித்த 9ஊழியர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு உடனடியாக அரசாங்கம் மாற்றியது .இந்த மாற்றம் சரியானதா ?என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர் இன்று இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த 9ஊழியர்களையும் புதிய வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்...

இம்ரான் மஹ்ரூப் mp மசோதாவை சாபாநாயகரிடம் சமர்பித்தார்

  கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பான பிரேரனையை பாராளுமன்றத்தில் ஆராயக்கோரி சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்ட பிரேரனை ஒன்று வழங்கப்பட்டது.திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட கோரோனா காலத்தில் உயிரிழந்த  முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரனை நடாத்தவேண்டும் என வலியுருத்தும் பிரேரனையை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக்கோரி 20மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்ள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை 19-08-2026இன்று உத்தியோகபூர்வமாக வழங்கினார். இம்ரான் மஹ்ரூப்,முஜிபுர் ரஹ்மான்,காதர் மஸ்தான்,உதுமாலெப்பை,அப்துல் வாசித் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். தகவல்:- இம்ரான் மஹ்ரூப்  பா உ (FB பக்கம்)