Skip to main content

Posts

Showing posts from March, 2026

IPL -MATCH-4 (GL V PK)

  IPL ன் 4து போட்டி 31/03/2026 இரவு 7:30pm. பஞ்சாப்   மைதானத்தில் ஆரம்பமானது நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் (pk) அணித்தலைவர் பந்துவீசத்தீர்மானித்தார் GT அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரும் மைதானம்.வந்தனர் பெரிதும் எதிர்பார்த இணைப்பாட்டம் ஏமாற்றம் அழித்தது ரசிகர்களுக்கு 37து ஓட்டம் இருந்த நேரத்தில் 1து விக்கெட் விழ்த்தப்பட்டது. GL அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் ஆரம்பம் சரியாக அமையவில்லை. GL அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்  சுப்மன் கில் 27 பந்துகளில் 39 ஓட்டம் ஜோஸ் பட்லர்  33பந்துகளில்  38ஓட்டம் கிளேன் பிலிப்ஸ் 17பந்துகளில் 25ஓட்டம வாசிங்டன் சுந்தர் 16பந்துகளில் 18ஓட்டத்தை பெற்றனர். PKஅணி சார்பாக பந்து வீச்சில் விஜயகுமார் வைசக்- 3 யூவேஸ்வந்தர் சஹால்-2 மெர்கோ ஜென்சப்-1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். 20ஓவர் முடிவில் GLஅணி  162/6 ஓட்டங்களைப்பெற்றது. 163எடுத்தால் வெற்றி என்று கலம் இறங்கிய PKஅணி ஆரம்பமே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது முதல் 6ஓவர்கள் முடிவில் 55 ஓட்டங்களைப்பெற்றது. 7ஓட்ட...

தவேகா பிரச்சாரக்கூட்டத்தில் பாட்டில் வீச்சு

  தவேகா பிரச்சாரக்கூட்டத்தில் பாட்டில் வீச்சு தமிழகத்தின் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த தேர்தலில் போட்டியிடக்கூடிய கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்று முதல் தங்களது வேட்புமனுக்களை செலுத்தி வருகின்றனர்.   அந்த வகையில் சில கட்சிகள் தேர்தலுக்கான பிரச்சாரங்களையும் ஆரம்பித்துவிட்டனர் இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர் ஆதவ் அர்ஜூனாவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் வில்லிவாகத்தில் கட்சித்தொண்டர்களின் மத்தியில் நடைபெற்றுக்கொண்டு இருந்த சந்தர்ப்பத்தில் அங்கு மதுமான பாட்டில்கள் உடைத்து மக்களுக்கு இடையில் வீசப்பட்டது.இதனால் கூட்டத்தில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது . இதற்க்கு காரணம் திமுகா தான் என்றும் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூட்டத்தின் நடுவே பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்தார் ஆதவ் அர்ஜூனா.தமிழகத்தின் தேர்தல் நடிகர் விஜய் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து 234தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக் 31/03/2026

இலங்கையில் அதிகரிக்கும் வெப்பம்

 இலங்கையின் தற்போதைய வெப்பநிலை – காரணங்கள், தாக்கங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை இந்நாட்களில் இலங்கையின் பல பகுதிகளில் வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக மேற்கு, வடமேற்கு மற்றும் வட மாகாணங்களில் பகல் நேரங்களில் அதிக வெப்பம் உணரப்படுகிறது. இது பொதுமக்களின் நாளந்தோறும் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. 🌡️ தற்போதைய நிலைமை சமீப நாட்களில் வெப்பநிலை 32°C முதல் 36°C வரை உயர்ந்து காணப்படுகிறது. சில உள்வாரிப் பகுதிகளில் இது மேலும் அதிகமாக உணரப்படுகிறது. அதிக ஈரப்பதத்துடன் கூடிய சூழல் காரணமாக “Feels like” வெப்பநிலை இன்னும் உயர்ந்ததாக இருக்கும். ☀️ வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணங்கள் சூரிய கதிர்வீச்சு அதிகரிப்பு – கோடை காலத்திற்கு நகரும் பருவம் மழை குறைவு – நீண்ட நாட்களாக மழை இல்லாமை காற்றோட்டம் குறைவு – வெப்பம் வெளியேறாமல் நிலைத்திருக்கும் காலநிலை மாற்றம் – உலகளாவிய அளவில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் ⚠️ இதன் தாக்கங்கள் உடல் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) தலைவலி, சோர்வு, மயக்கம் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு விவசாய நடவடிக்கைகளில் சிரமம் நீ...

IPL 2026-MATCH-01

 அதிரடியாக ஆரம்பித்தது ipl வழமைபோன்று iplஉரித்தான வேகம்,பரபரப்பு,எதிர்பார்ப்பு என்ற அம்சத்தோடு ஆரம்பமாகியது இந்தியன் பீரிமியர் லீக் IPL ன் முதலாவது போட்டி 29/03/2026 இரவு 7:30pm. பெங்களூரு சின்ன சுவாமி மைதானத்தில் ஆரம்பமானது நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற நடப்பு சம்பியன் RCB. அணித்தலைவர் பந்துவீசத்தீர்மானித்தார் SRH அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக ரெவிஸ் ஹெட்,அபிசேக் சர்மா ஆகியோரும் மைதானம்.வந்தனர் பெரிதும் எதிர்பார்த இணைப்பாட்டம் ஏமாற்றம் அழித்தது ரசிகர்களுக்கு 18து ஓட்டம் இருந்த நேரத்தில் 1து விக்கெட் விழ்த்தப்பட்டது. SRH அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் ஆரம்பம் சரியாக அமையவில்லை 23 ஓட்டங்களுக்கு 3விக்கெட்டை இழந்து தடுமாறினார்.அணித்தலைவர் இஷான் கிசானின் அதிரடியால் 201ஓட்டத்தை பெற்றது SRH அணியினர் SRH அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்  இஷான் கிசான் 36 பந்துகளில் 80 ஓட்டம் கிலாசன்  22பந்துகளில்  31ஓட்டம் அனிக்கெட் வர்மா  18பந்துகளில் 43ஓட்டம் ரெவிஸ் ஹெட் 9பந்துகளில் 11ஓட்டத்தை பெற்றனர். RcB  அணி சார்பாக பந்து வீச்சில் ஜொசப் டfபி- 3 ரொமோரி சொப்...

பாக்கிஸ்தான் சூப்பர் லீக்(PSL) MATCH-2

 பாக்கிஸ்தான் பிரிமியர் லீக்(PSL)MATCH-2 பாக்கிஸ்தான் சூப்பர் லீக்கின் இரண்டாவது போட்டி இன்று கராச்சி கிங் மற்றும் கியூட்டா கலாட்டரிஸ் அணிகளுக்கு 27/02/2026 இரவு 7:30pm ஆரம்பமானது. நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற கியூட்டா கலாட்டரஸ் அணி பந்து வீசத்தீர்மானித்தது ,கராச்சி கிங் அணியின் ஆரம்பத்துடுப்பெடுத்தாடத்திற்க்காக டேவிட் வார்னர்,முஹம்மட் வசீம் ஆகியேரும் கலம்புகுந்தனர். கராச்சி கிங் அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் டேவிட் வார்னர் 22பந்துகளுக்கு 35ஓட்டம் மொயீன் அலி 48ஓட்டம் 29பந்துகளில் சாட் பெக் 30ஓட்டம் 23பந்துகளில் சல்மான் அகா  22பந்துகளில் 10ஓட்டம் என்ற அடிப்படையில் பெற்றனர்.      20ஓவர்கள் நிறைவில் 181ஓட்டங்களைப்பெற்றது 7விக்கெட்டுக்களை இழந்தது 182எடுத்தால் வெற்றி என்று ஆடுகளம் புகுந்த கியூட்டா அணி ஆரம்பம் அதிரடியாக ஆரம்பித்தது முதல் ஒவர்கள் நிறைவில் 75ஓட்டங்களைப்பெற்றது,ஆனால் இந்த அதிரடியை தொடரவிடாமல் கராச்சி கிங் அணியின் பந்துவீச்சாளர்கள் விரைந்து கியூட்டா அணியின் துடுபெடுத்தாட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.ஹசன் அலியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது கியூட...

ஈரான் தெஹ்ரையினில் கடைகளை பார்வையிட்ட ஜனாதிபதி

 ஈரான் ஜனாதிபதியும் மருத்துவருமான மசூத், அந்நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள சில கடைகளை இன்று (27) பார்வையிட்டார். ஈராம்-இஸ்ரேல்,அமேரிக்கா போர்கள் பல வாரங்களாக முடிவில்லாம நடைபெற்று வருகின்ற வேலையில் பல உயிர்சேதங்கள்,உடமைகள் அழிவு,பொருளாதாரம் பாதிப்பு,உலக பொருளாதாரம் நெருக்கடியில் உள்ள தற்ப்போதைய சூழ் நிலை உள்ளது மூன்று நாடுகளின் தலைவர்களையும் மற்ற நாடுகள் குறி வைத்து தாக்க காத்திருக்கும் இந்த நிலையில் இன்றய தினம் ஈரான் ஜனாதிபதியும் மருத்துவருமான மசூத், அந்நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள சில கடைகளை இன்று (27) பார்வையிட்டார். 27/03/2026

இலங்கைக்கு எப்போதும் உதவத்தயார் ஈரான்

 இலங்கைக்கு எப்போதும் உதவத்தயார் ஈரான் தற்ப்போதை அமேரிக்கா,இஸ்ரேல் -ஈரான் நாடுகளுக்கிடையில் நடைபெற்று வரும் போரின் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம், அமைதி,என்பன பெரும் பாதிப்புக்கு மத்தியில் செல்கின்றது.   அந்த வகையில் பல நாடுகளில் எரிபொருள்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் பல பாதிப்புக்களை ஒவ்வொரு நாடும் சந்தித்தி வருகின்றது எரிபொருள் உற்பத்தி செய்து வினியோகிக்கும் நாடுகள் கூட எரிபொருள் விலையை தங்களது நாட்டில் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது   இந்த பிரச்சினை இலங்கையை விட்டு வைக்கவில்லை இலங்கை பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் மீண்டு வந்த இலங்கை மீண்டும் எரிபொருளின் பாரிய விலை அதிகரிப்பினால் நாட்டின் அரச வேலைகள்,பொதுப்போக்கு வரத்து தொழில் என்பன பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  இன்று இலங்கையில்  ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து இருந்த  ஈரானிய தூதுவர் இலங்கை நாட்டுக்கு நாம் எப்போதும் எந்த உதவியையும் செய்யத்தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கு தேவையான எண்ணெய் மற்றும் அத்தியவசிய பொருட்களையும் எப்போது வேண்டுமானாலும் வழங்தயாராக இருப்பதாக ஈரானிய தூதுவர் கூறினார். செய்தித்...

எரிபொருள் நிரப்ப QRமுறை

 எரிபொருள் நிரப்ப QR முறை  இலங்கையில் தற்ப்போது எரிபொருள் நிரப்புவதற்க்காக QR முறையை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஈரான்,அமேரிக்கா,இஸ்ரேல் ஆகிய  நாடுகளுக்கிடையில் நடைபெற்று வரும் போர் காரணமாக உலகில் கச்சா எண்ணெய்யின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளது.எனவே அதன் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது. மக்கள் போர் காரணமாக எரிபொருட்களை சேமித்து வைப்பதனால் நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்க்காக இலங்கை அரசாங்கம் வாகனத்தின் பதிவுகளைப்பயன்படுத்தில் QRமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது இதனால் ஒருவர் வாரத்துக்கு குறிப்பிட்ட அளவிலான எரிபொருளை மாத்திரமே பயன்படுத்த முடியும்.இதனால் பதுக்கள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகளை கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்பதால் அரசாங்கம் இந்த முடிவை அமுல்படுத்தியுள்ளது . பின்வருமாறு வாகனங்களுக்கான எரிபொருள் அளவுகள் நிரணயிக்கப்பட்டுள்ளது   இருசக்கரவானம்(Bike)-5L முச்சக்கரவண்டி(Auto)-15L வேன்(van)-40L பஸ்(bus)-60L கார்(car)-15L லொறி(Lorris)-200L லேண்ட் வெஹிகல்(land vehicle's)-25L Special purpose vehicle's-40L என்ற அடிப்படையில் வாரம...

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

 எரிபொருள் விலைகள் அதிகரிப்பு அமேரிக்கா,இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் போர் காரணமா உலக சந்தையில் மசகு எண்னையின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. எனவே அதன் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருளுக்கான விலை அதிகரிப்பு என்றும் நடைபெறுகின்றது அந்த வகையில் இலங்கையிலும் சடுதியாக எரிபொருளின் விலைகள் இன்று 09/03/2026 இரவு 12:00மணியின் பின்னர் அதிகரிக்கப்படும் என்று இலங்கையின் எரிபொருள் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது அதற்கேற்ப இலங்கையில் 92 வகை டீசல் 22 ரூபாய் அதிகரித்து 303 ரூபாயாகவும் 95வகை சுப்பர் டீசல் 24ரூபாய் அதிகரித்து 353 ரூபாயாகவும் பெற்றோல் 92 வகை 24ரூபாய் அதிகரித்து 317 ரூபாயாகவும் பெற்றோல் 95 வகை 25ரூபாய் அதிகரித்து 365 ரூபாயாகவும் மண்ணென்னய் 13ரூபாய் அதிகரித்து 195 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. செய்தித்தொகுப்பு :- தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

சஞ்சு சம்சுன்(sanju samson)

  இந்தியா அணி சிறந்தகிரிக்கெட் அணியாக இருந்தாலும் அது விளையாடும் போட்டிகளில் தோல்வியடைவேண்டும் என்று பார்க்கின்றவன் நான் காரணம் இலங்கை கிரிக்கெட் ரசிகன் நான்  இந்தியாவில் பல திறமையான வீரர்கள் வந்து சென்றாலும் சஞ்சு சம்சுனின் விளையாட்டில் ஒர் பிடிப்பு இந்திய அணியில் பல போட்டிகளில் இவருக்கான வாய்ப்புக்கள் கிடைத்தாலும் அதில் சஞ்சு பெரிதாக விளையாடியதில்லை இலங்கை அணியின் ஒரு வீரர் நன்றாக விளையாடவில்லை என்றால் வரும் கவலை சஞ்சு சம்சன் விளையாட பொழுதில் எனக்கு வந்ததுண்டு நல்ல வீரர் ஆனால் சர்வதேசபோட்டிகளில் இவர் பிரகாசிப்பது குறைவு என்றகவலையே இந்திய வீரர்கள் துடுப்பெடுத்தாட்டத்தில் 50/100/150ஓட்டங்களைப்பெற்றால் மைதானத்தை இரண்டாக்கி விடுவார்கள் ஆனால் அதற்க்கு மாற்றமான ஒரு வீரர் எப்பொழுதும் அமைதி,அழகான புன்னைகை, அழகான துடுப்பெடுத்தாட்டம் என்பன சஞ்சு சம்சுனின் மீதும் அவரின் கிரிக்கெட்டின் மீதும் ஒரு ஈர்ப்பு. இந்த தொடரில் சம்சும் ஆரம்பத்தில் பெரிதாக விளையாடவில்லை மீண்டும் மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடும் பொழுது இந்த போட்டியில் சம்சுன் 100அடிக்கமாட்டானா இவரால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி...

2026 T20உலககிண்ணத்தை கைப்பற்றியது. இந்திய அணி

 20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026) Match-55   இறுதிப்போட்டி      T20 உலககிண்ணத்தின் 55து இறுதிப்போட்டி  08/03/2026 இந்தியா மற்றும் நியூசிலாந்து  அணிகளுக்கிடையில் இன்று இரவு 7.00மணிக்கு அஹமதாபாத்தில் ஆரம்பமானது.  இந்தப்போட்டியில் இந்தியா அணி வெற்றிபெற்றால் தொடர்ச்சியாக இரண்டாவது தடவை கிண்ணத்தை கைப்ப்பற்றும் முனைப்போடும் ,நியூசிலாந்து அணி முதல் தடவையாக கைப்பற்றும் நோக்கிலும் போட்டியில் கலந்துகொண்டது. நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து  கிரிக்கெட் அணித்தலைவர் பந்துவீசத் தீர்மானித்தார்.  இந்தியா  அணியானது  ஆரம்பமே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது நரேந்திர மோடி மைதானம் ஆரம்பம் முதலே இந்தியாவின்  ஆதிக்கமாகவே இருந்தது இந்தியாவின் ஆரம்பவிக்கெட்டுக்காக இணைந்த சம்சன் மற்றும் அபிசேக் சர்மாவின் அதிரடி ஆரம்பத்திலே மைதானத்தில் தொடங்கியது.  முதலாவது விக்கெட் 98 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது   முதல் 6ஓவர்கள் முடிவில் 92 ஓட்டங்களைப்பெற்றது இந்தியா  அணி சார்பாக   சஞ்சு சம்சன் 46பந்துகளுக்கு 89 ஓட்டங்...

ஈரான் கப்பலை பொறுப்பெடுக்கும் இலங்கை

ஈரான் கப்பலை பொறுப்பெடுக்கும் இலங்கை இஞ்சின் பழுது காரணமாக கடலில் நிற்கும் ஈரானின் கப்பலை பொறுப்பேற்க இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தீர்மானம் - ஜனாதிபதி அறிவிப்பு  கொழும்பை அண்மித்த பகுதியில் கடலிலுள்ள ஈரானின் இரண்டாவது கப்பலை பொறுப்பேற்க இலங்கை முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்றிரவு அவர் கூறியதாவது, என்ஜின் ஒன்று செயல் இழந்ததாக சொல்லப்பட்ட ஈரானுக்கு சொந்தமான அந்த கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவராமல் திருகோணமலைக்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. நாங்கள் இறையாண்மையுள்ள ஒரு நாடு.எந்த நாட்டுக்கும் சார்பானவர்கள் அல்ல நாம். எங்கள் கடல் பிரதேசத்தில் இருந்து கோரப்பட்ட உதவியை இராஜதந்திர முறையில் கையாண்டோம் எனவும் நாங்கள் அமைதியை விரும்புகிறோம். அனைவருடனும் நாங்கள் நட்புறவை பேணுகிறோம். நாங்கள் நடுநிலையான நாடாக மனித நேய அடிப்படையில் செயல்படுகிறோம். இந்த பிரச்சினையை முன்வைத்து அரசுக்கும் நாட்டுக்கும் எதிரான கருத்துக்கள் வந்தன. சிறுவர்கள் அந்த கப்பலில் இருப்பதாக தகவல் பரப்பப்பட்டது. சிறுவர்கள் இருக்கிற...