Skip to main content

Posts

Showing posts from August, 2026

சம்பியனானது கல்பிட்டி வேல்ட் லயன் கிரிக்கெட் அணி

 சம்பியனானது கல்பிட்டி வேல்ட் லயன் கிரிக்கெட் அணி புத்தளம்,நுரைச்சோலை லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்திய மென்பந்துசுற்றுப்போட்டியானது ஆகஸ்ட் மாதம் 21,22,23ம் திகதிகளில் போல்ட் ஸ்டார் மைதானத்தில் நடாத்தப்பட்டது . இந்த தொடரில் பல அணிகள் கிண்ணத்தை கைப்பற்றவேண்டும் என்ற நோக்கில் போட்டியில் பங்குபற்றின,இந்த தொடரில் பங்குபற்றி கிண்ணத்தை கைப்பற்றும் அணிக்கு பரிசுத்தொகையாக ஒரு லட்சம் அறிவிக்கப்பட்டது இந்த தொடரில் இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூபா 50000ம் அறிவிக்கப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது. பணப்பரிசையும் கிண்ணத்தையும் கைப்பற்றும் நோக்கில் பல அணிகள் போட்டிபோட்டாலும் இறுதிப்போட்டிக்கு கல்பிட்டி வேல்ட் லயன் அணியுடன்  இறுதிப்போட்டியில் விளையாட  கோல்ட் மூன் அணி தகுதி பெற்றது இரண்டு பலம் பொருந்திய அணிகளும் இறுதிப்போட்டியில் மோதின இறுதியில் இந்த தொடரில் சம்பியணாக கல்பிட்டி வேல்ட் லயன் அணி மகுடம் சூடியது.வெற்றிபெற்ற அணிக்கு கல்பிட்டி பிரதேசசபைத்தலைவர் Asm.றிகாஸ் அவர்களின் கரங்களினால் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.மேலும் இந்த கிண்ணம் வேல்ட் லயன் அணிய...

கடமையைப்பெறுப்பேற்றார் வைதியர் சுகுணன்

 கடமையைப்பெறுப்பேற்றார் வைத்தியர் சுகுணன் கல்முனை வடக்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் விபத்தொண்றில் காயமடைந்ததன் காரணமாக 21நாட்களாக பணிக்குவராமல் இருந்தார்.மீண்டும் தேக ஆரோக்கியம் பெற்றதன் காரணமாக 24/08/2026திங்கள் கிழமை மீண்டும் தான் கடமை புரியும் வைத்தியசாலைக்கு சமூகம் தந்தார். இன்று கடமைக்கு வருகை தந்த பணிப்பாளர் சுகுணன் அவர்களுக்கு பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீசங்கர் தலைமையில் இந்துமத மற்றும் இஸ்லாமிய முறையில்  சமய வழிபாடுகள். செய்யப்ப்பட்டது. அதன் பின்னர் வைத்தியரினால் கடமைபுரியும் வைத்தியர்கள்,தாதிமார்கள்,ஊழியர்களுக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டது.

சவுதி குர்ஆன் மனனப்போட்டி இலங்கை க்கு மூன்றாமிடம்

 குர்ஆன் மனனப்போட்டியில் இலங்கை மாணவன் மூன்றாம் இடம்  சவுதி அரேபியாவில் நடைபெற்ற மன்னர் அப்துல் அஸிஸ் குர்ஆன்  மனனப்போட்டியில் இலங்கை கல்ஹின்னை பிரதேசத்தைச்சேர்ந்த  அல் ஹாபிழ் இம்தாத் இல்யாஸ் மூன்றால் இடத்தைப்பிடித்தார். இதன் மூலம் இலங்கையின் புகழை உககெங்கும் வெளிக்காட்டியுள்ளார் சுமார் 133 நாடுகளைச்சேர்ந்த 334 மாணவர்கள் இந்த குர்ஆன் மனனப்போட்டியில் கலந்துகொண்டனர். இந்த குர் ஆன் மனனப்போட்டியில் 5ம் பிரிவில் கலந்துகொண்ட  இலங்கையைச்சேர்ந்த் அல் ஹாபில் இம்தாத் இல்யாஸ் கடுமையான போட்டியாளர்களுடன் போட்டிபோட்டு இந்த  குர்ஆன் மனனப்போட்டியில் மூன்றால் இடத்தைப்பிடித்தார். அல் ஹாபிழ் இம்தாத் இயாஸுக்கு 55,000 சவூதி ரியல்கள் (சுமார் 4,900,000 இலங்கை ரூபாய்) பரிசாக வழங்கப்பட்டது.

இந்தியா இலங்கை 2துடெஸ்ட் போட்டி

 இரண்டாவது டெஸ்ட்போட்டியின் முதல் நாள் முடிவு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான  இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமானது நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இந்திய அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது இந்த போட்டியானது கொழும்பு எஸ் எஸ் சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது  இந்திய அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் ஆரம்ப வீரர் ஜெய்ஸ்வால் 45 ஓட்டங்களையும், ராகுல் டிராவிட் 18, ஓட்டம் படிக்கல் 117 ஓட்டம், அணி தலைவர் 50 ஓட்டம், ரிசப் பந்த் மூன்று ஒட்டங்கள் பெற்றிருந்த வேளையில் சுகையினம் காரணமாக ஒய்வரை திரும்பினார் ஜடேஜா 43 ஓட்டங்களை பெற்று ஆட்டம் இழந்தார் முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்தியா சார்பாக ஜூரையில் ஏழு ஓட்டங்களுடனும் ஜாயிண்ட் நான்கு ஓட்டத்திலும் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.  இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் அசித்த பெர்ணாண்டோ  மூன்று(3) விக்கெட்டுகளையும் லகிரு குமார  விக்கெட்டையும் நுவன் 1விக்கட்டையும் கைப்பற்றியுள்ளார்கள் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணியானது 300 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் இழந்து துடுப்பு படுத்தாடிக் கொண்டிருக்கின்றது செய...

இம்ரான் மஹ்ரூப் mp மசோதாவை சாபாநாயகரிடம் சமர்பித்தார்

  கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பான பிரேரனையை பாராளுமன்றத்தில் ஆராயக்கோரி சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்ட பிரேரனை ஒன்று வழங்கப்பட்டது.திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட கோரோனா காலத்தில் உயிரிழந்த  முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரனை நடாத்தவேண்டும் என வலியுருத்தும் பிரேரனையை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக்கோரி 20மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்ள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை 19-08-2026இன்று உத்தியோகபூர்வமாக வழங்கினார். இம்ரான் மஹ்ரூப்,முஜிபுர் ரஹ்மான்,காதர் மஸ்தான்,உதுமாலெப்பை,அப்துல் வாசித் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். தகவல்:- இம்ரான் மஹ்ரூப்  பா உ (FB பக்கம்)

வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன?

 வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன? கல்முனை வடக்கு  வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஆடை விவகாரம் இலங்கையில் பாரியளவில் பேசுபொருளாக மாறியது. தமிழர்கள் அதிகமாக பணிபுரியும் குறித்த வைத்தியசாலையில் புதிதாக ஒன்பது(9)ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்,இவர்கள் 9பேரும் முஸ்லிம்கள் எனவே அவர்கள் கடமைக்கு செல்லும் பொழுது அரசாங்கம் அங்கீகரித்த தமது கலாசாரத்துக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து சென்றுள்ளனர் இருந்த போதும் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம் மதக்கலாசாரத்தை முக்கியப்படுத்தும் குறித்த ஆடையை அணிந்து பணிபுரிய முடியாது என்று அவர்களுக்கு எதிர்ப்பு உருவாகியது இதனால் இவர்களின் வேலை கேள்விகுறியாகியது. ஆனால் இந்த ஆடைப்பிரச்சினை இலங்கையில் சமூகவளைதலங்களில்  ஒன்றுக்கு ஒன்று முரனான கருத்துகளுடன் மேலோங்கியது எனவே குறித்த 9ஊழியர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு உடனடியாக அரசாங்கம் மாற்றியது .இந்த மாற்றம் சரியானதா ?என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர் இன்று இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த 9ஊழியர்களையும் புதிய வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்...

மாணவர்கள் கொளரவிக்கும் நிகழ்வு

 2025ம் ஆண்டு உயர்தரப்பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தெரிவாகிய சுமார் 300மாணவர்களுக்கும், க பொ சாதாரண தரத்தில் 9A பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களையும் கொளரவிக்கும் நிகழ்வு ஆகஸ்ட் 16ம் திகதி மூதூர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.  இந் நிகழ்வுக்கு மூதூர் நலன்புரி நிறுவனத்தில் ஏற்பாட்டில் நடைபெற்றது  இதற்க்கு தீடிர் மரண விசாரனை அதிகாரியும் மூதூர் நலன்புரி நிறுவனத்தின் தலைவருமானமுஹம்மது யூசூப் லாபிர் அவர்கள் தலைமை தாங்கினார்  இதனை ஆரம்பிக்கும் முகமா . ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவுப் ஹக்கீம் அவர்கள மற்றும் அதிதிகள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் , மற்றும் ஊர்மக்கள் என அனைவரும் மூதூர் வலய  காரியாலத்தின் முன் இருந்து கலாசாரமண்டபம்வரை  ஊர் வலமாக மயிலாட்டம் முரசொலி என்ற பாரம்பரிய நடன காட்சிகளுடன் அழைத்து வரப்பட்டனர். இதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் எம்  எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ்,எம் எஸ் உதுமாலெப்பை, அரசியல் பிரமுகர்கள்,கல்விமான்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர். தகவல்:-(றவுப் ஹக்கீம் (பா உ)உத்தியோகபூர்வ முக...

இரண்டாம் இடத்தைப்பெற்றது வேப்பங்குளம் முஹம்மதியா அணி

 இரண்டாம் இடத்தைப்பெற்றது வேப்பங்குளம் முஹம்மதியா மன்னார் முசலி பெற்கேனி கிராமத்தில் கடந்த 14,15,16ம் திகதிகளில் பகல் இரவுப்போட்டியாக ரெட் பிளவர் கிரிக்கட் கழகத்தினால் மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியென்று நடாத்தப்பட்டது. இலங்கையில் பல பாகங்களில் இருந்தும் இந்த தொடரில் கலந்துகொள்ள பல பலம்பொருந்திய அணிகள் பங்குபற்றியது இந்த தொடரில் முதலாவது இடத்தைப்பெறும் அணிக்கு 3லட்சம் ரூபாய்கள்,இரண்டாம் இடத்தைபெறும் அணிக்கு 150000ம் ரூபாய்கள் ,மூன்றாம் இடத்தைப்பெறும் அணிக்கு 250000ம் ரூபாய் பணப்பரிசில்கள் மற்றுன் கிண்ணங்களை வழங்க ஏற்பாட்டுக்குழு தீர்மானித்தது. சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த தொடரில் பலம் பொருந்திய அணிகளுடன் மோதி இறுதிப்போட்டிக்கு மன்னார் வேப்பங்குளம் முஹம்மதியா அணியும் SSA மஹாவேவ அணியினரும் பலப்பரீட்சை நடாத்தினார்கள் மூன்று இலட்சம் ரூபாய் பணப்பரிசையும் கிண்ணத்தையும் யார் கைப்பற்ற போவது என்ற எதிர்பார்ப்பு வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அதிகமாகவே காணப்பட்டது இறுதியாக SSA அணியினர் முஹம்மதியா அணியை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றினார். செய்தித்தொகுப்பு:- தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

5ம் ஆண்டுக்கான பரீட்சை நாளை

  09/08/2026 நாளை 5ம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை தினம் நடைபெறவுள்ளது. எனவே இந்த போட்டிப்பரீட்சையில் பங்குபற்றக்கூடிய அனைத்துச்சிறுவர்களுக்கும் ak media தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது,நல்லமுறையில் பரீட்சையை எழுதி நல்ல பெறுபேறுகளைப்பெறவேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். ADMIN

திகழி முஸ்லிம் மகா வித்தியாலயம்

 2025ம் ஆண்டு உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்களின் பல்கலைக்கழகத்துகான தெரிவுகள் வெளியாகிவுள்ள நிலையில் புத்தளம்,கற்பிட்டி,திகழி பாடசாலையின் சார்பாக பரீட்சை எழுதிய மாணவர்கள் எந்த பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளார்கள் என்ற விபரத்தை திகழி முஸ்லிம் மகா வித்தியாலம் உத்தியோகபூர்வமாக வெளியாக்கியுள்ளது. திகழி பாடசாலையில் கல்விகற்று  வயம்ப பல்கலைக்கழகத்துக்கு (Management)பிரிவுக்கு இரண்டு மாணகவர்கள்,  களனி பல்கலைக்கழகத்தில் விளையாட்டு ,அறிவியல் துறைக்கு ஒரு மாணவர், கொழும்பு கலைப்பிரிவுக்கு(arts) 5மாணவர்களும்,யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவுக்கு 4மாணவர்களும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் Tourim&hospitality managementபிரிவுக்கு ஒரு மாணவரும்,தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் islamic studies பிரிவுக்கு ஒரு மாணவரும் தெரிவாகியுள்ளார்கள்.