Skip to main content

இங்கிலாந்து v இந்தியா 1st ODI

 



இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டித்தொடர்  14/7/2026 இங்கிலாந்தின் பிரிங்கம்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.


இங்கிலாந்துடன் இருபதுக்கு இருபது தொடரை இழந்த இந்தியாவுக்கு இந்த ஒரு நாள் தொடர் மிகவும் முக்கியமானதாகவும் இந்திய இரசிகள் இந்தியா இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா என்ற கேள்விக்குறியோடு இந்த ஒரு நாள் தொடரை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.நாணய சுழற்ச்சியில் வெற்றிகொண்ட இங்கிலாந்து அணி முதலாவது துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.


இங்கிலாந்து சார்பாக ஆரம்பத்துடுப்பெடுத்தாட பென் டக்கெட்,மற்றும். ஜெகப் பெதல் ஆகியோர் கழம் இறங்க இந்த இணைப்பாட்டம் இங்கிலாந்துக்கு  சிறந்த ஆரம்பத்தை கொடுக்கவில்லை இந்தியாவின் பந்துவீச்சு இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் சவாலாக அமைந்தது

இங்கிலாந்து ஒரு கட்டத்தில் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 80ஓட்டங்களுக்கு 5விக்கெட்டை இழந்து தடுமாறியது ஆனால் அனுபவீரர் ஜோ ரூட்டின் நிதானம் விக்கெட்டை விட்டுக்கொடுக்காத ஆட்டம் இங்கிலாந்தை மோசமான ஓட்ட வீதத்தில்  இருந்து காப்பாற்றியது

இங்கிலாந்துசார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்

ஜோ ரூட் 76(76b)

லியாம் டவ்சன் 68(83b)

பென் டக்கட் 43 (45b)

வில் ஜக்20(19b) என்று ஓட்டத்தை பெற இங்கிலாந்து இறுதியாக 47.5ஒவர்கள் நிறைவில் சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 258ஓட்டங்களைப்பெற்றது,

இந்தியா சார்பாக பந்துவீச்சில்

அக்சர் படேல்-4

பிரதீப் கிருஷ்ணா-2

குர்னூர் பிரார்-1

பும்ரா-1 என கைப்பற்றினார்கள்.

259எடுத்தால் வெற்றி என துடுப்பெடுத்தாட இந்திய அணி ஆயத்தமானது வெகு நாட்களுக்கு பின் கோஹ்லி,மற்றும் ரோஹித் சர்மாவை கான ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர், ஆனால் அது அவர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்தது எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் கோஹ்லி பெரிதாக ஓட்டம் பெறும் முன்னரே ஆட்டமிழந்தனர். இந்தியாவின் முதலாவது விக்கெட் அணி 43ஓட்டம் பெற்ற போது வீழ்த்தப்பட்டது பெரிதும் எதிர்பார்த்த ரோஹித் சர்மா 11ஓட்டத்துடனும் விராட் கோஹ்லி 5ஓட்டத்துடன் திரும்பினார்கள் 48ஓட்டங்களுக்கு 2விக்கெட்டை இழந்தது இந்திய அணி ஆனால் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார் அணித்தலை சுப்மன் கில்

இந்தியா சார்பில் துடுப்பெடுத்தாட்டத்தில் 

 சுப்மன் கில் 80(75)

வாசிங்டன் சுந்தர் 52(63)

சிரேஷ் அய்யர் 35(53)

ரோஹித் சர்மா 11(21)என்ற அடிப்படையில் ஓட்டத்தை பெற்றனர். 

இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில் 

ஜோபர் ஆச்சர்-1

சாம் கரண்-1

ஜோஸ் டோங்கோ-1

விக்கெட்டை கைப்பற்ற இந்திய அணியானது 45.2ஓவர்கள் முடிவில் 4விக்கெட்டை இழந்து 262ஓட்டங்களைப்பெற்று 7விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றது.ஆட்ட நாயகனாக அக்சர் படேல் தெரிவானார்.3போட்டிகள் கொண்ட தொடரில் 1-0என்று இந்தியா முன்னிலையில் உள்ளது

செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்


    


Comments

Post a Comment

Popular posts from this blog

கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன்.

 கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில பகுதியில் 8மாத கற்பிணியை வெட்டிக்கொன்ற கணவன். கற்பிட்டி தலவில கெலே பகுதியைச்சேர்ந்த 26மதிக்கத்தக்க பெண்ணியே சம்பவத்தில் உயிரிழந்தாதகதெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இந்த சம்பவத்தைச்செய்த சந்தேக நபரை கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி 45நிமிடங்களில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.சந்தேக நபருக்கு எதிரான குற்றத்துக்கு பயன்படுத்திய கத்தியுடன் கைதுசெய்துள்ளார்கள்.

வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன?

 வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன? கல்முனை வடக்கு  வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஆடை விவகாரம் இலங்கையில் பாரியளவில் பேசுபொருளாக மாறியது. தமிழர்கள் அதிகமாக பணிபுரியும் குறித்த வைத்தியசாலையில் புதிதாக ஒன்பது(9)ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்,இவர்கள் 9பேரும் முஸ்லிம்கள் எனவே அவர்கள் கடமைக்கு செல்லும் பொழுது அரசாங்கம் அங்கீகரித்த தமது கலாசாரத்துக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து சென்றுள்ளனர் இருந்த போதும் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம் மதக்கலாசாரத்தை முக்கியப்படுத்தும் குறித்த ஆடையை அணிந்து பணிபுரிய முடியாது என்று அவர்களுக்கு எதிர்ப்பு உருவாகியது இதனால் இவர்களின் வேலை கேள்விகுறியாகியது. ஆனால் இந்த ஆடைப்பிரச்சினை இலங்கையில் சமூகவளைதலங்களில்  ஒன்றுக்கு ஒன்று முரனான கருத்துகளுடன் மேலோங்கியது எனவே குறித்த 9ஊழியர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு உடனடியாக அரசாங்கம் மாற்றியது .இந்த மாற்றம் சரியானதா ?என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர் இன்று இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த 9ஊழியர்களையும் புதிய வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்...

இம்ரான் மஹ்ரூப் mp மசோதாவை சாபாநாயகரிடம் சமர்பித்தார்

  கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பான பிரேரனையை பாராளுமன்றத்தில் ஆராயக்கோரி சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்ட பிரேரனை ஒன்று வழங்கப்பட்டது.திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட கோரோனா காலத்தில் உயிரிழந்த  முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரனை நடாத்தவேண்டும் என வலியுருத்தும் பிரேரனையை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக்கோரி 20மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்ள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை 19-08-2026இன்று உத்தியோகபூர்வமாக வழங்கினார். இம்ரான் மஹ்ரூப்,முஜிபுர் ரஹ்மான்,காதர் மஸ்தான்,உதுமாலெப்பை,அப்துல் வாசித் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். தகவல்:- இம்ரான் மஹ்ரூப்  பா உ (FB பக்கம்)