Skip to main content

2026 T20உலககிண்ணத்தை கைப்பற்றியது. இந்திய அணி

 20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026) Match-55   இறுதிப்போட்டி

 

   T20 உலககிண்ணத்தின் 55து இறுதிப்போட்டி  08/03/2026 இந்தியா மற்றும் நியூசிலாந்து  அணிகளுக்கிடையில் இன்று இரவு 7.00மணிக்கு அஹமதாபாத்தில் ஆரம்பமானது.  இந்தப்போட்டியில் இந்தியா அணி வெற்றிபெற்றால் தொடர்ச்சியாக இரண்டாவது தடவை கிண்ணத்தை கைப்ப்பற்றும் முனைப்போடும் ,நியூசிலாந்து அணி முதல் தடவையாக கைப்பற்றும் நோக்கிலும் போட்டியில் கலந்துகொண்டது.


நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து  கிரிக்கெட் அணித்தலைவர் பந்துவீசத் தீர்மானித்தார்.

 இந்தியா  அணியானது  ஆரம்பமே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது நரேந்திர மோடி மைதானம் ஆரம்பம் முதலே இந்தியாவின்  ஆதிக்கமாகவே இருந்தது


இந்தியாவின் ஆரம்பவிக்கெட்டுக்காக இணைந்த சம்சன் மற்றும் அபிசேக் சர்மாவின் அதிரடி ஆரம்பத்திலே மைதானத்தில் தொடங்கியது.

 முதலாவது விக்கெட் 98 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது

  முதல் 6ஓவர்கள் முடிவில் 92 ஓட்டங்களைப்பெற்றது

இந்தியா  அணி சார்பாக 

 சஞ்சு சம்சன் 46பந்துகளுக்கு 89 ஓட்டங்களும்

அபிசேக் சர்மா 21பந்துகளுக்கு 52 ஓட்டங்களும்

இஷான் கிசான் 25பந்துகளில் 54ஓட்டங்களும்

கார்த்திக் பாண்டியா 13பந்துகளுக்கு 18

ஓட்டங்களும் பெற்றனர்.

20ஓவர்கள் நிறைவில் 255 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்தது.

  

நியூசிலாந்து   சார்பாக பந்து வீச்சில்

ஜிம்மி நிசாம்-3

ரச்சின் ரவீந்தர் -1

ஹென்ரி-1

 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.


    256எடுத்தால் வெற்றி என்று ஆடுகளம் புகுந்த நியூசிலாந்துஅணியின் ஆரம்பத்துடுப்பெடுத்தாட்டம்  சரியாக அமையவில்லை.

இந்திய மண்ணில் மைதானம் முழுக்க இந்திய ரசிகர்களின் ஆர்ப்பரிப்பின் மத்தியில் பெறும் அழுத்தத்துக்கு மத்தியில் நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாட ஆடுகளம் புகுந்தது

முதலாவது விக்கெட் 31ஓட்டங்களுக்கு  வீழ்த்தப்பட்டது

  6ஓவர்கள் முடிவில் 52-3 ஓட்டங்களைப்பெற்றது 

ஒரு கட்டத்தில் 47 ஓட்டங்களுக்கு 3விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது

அணித்தலைவரின் நிதானமான ஆட்டம் நியூசிலாந்துக்கு கைகொடுக்குமா என்று அனைவரினதும் எதிர்பார்ப்பும் காணப்பட்டது ஆனால் அது அமையவில்லை இந்தியாவின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது என்றுதான் கூறவேண்டும் நியூசிலாந்து அணியின் துடுப்பெடுத்தாட்ட வீரர்களுக்கு பெறும் அச்சுருத்தலாகவே பந்துவீசிக்கொண்டு இருந்தனர்


நியூசிலாந்து சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்


டிம் சைபெர்ட் 26பந்துகளில் 52ஓட்டம்

மிச்சல் சாட்னர்  35பந்துகளில் 43 ஓட்டம்

மிச்சல் 11பந்துகளில் 17

7பந்துகளில் 9ஓட்டம் என்று  பெற்றனர்.

  

 இந்தியாஅணி சார்பாக பந்து வீச்சில்

பும்ரா 4

அக்சர் படேல் 3

வருன் சக்கரவர்த்தி 1 

ஹார்த்திக் பாண்டியா 1

விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்






2026- T20உலககிண்னத்தின இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பும்ரா தெரிவானார்.

தொடர் நாயகனாக சஞ்சு சம்சன் தெரிவானார் .

தொடர்ச்சியாக 2024,2026ம் ஆண்டுகளில் இந்தியா உலககிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

 

செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்
  

Comments

Popular posts from this blog

கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன்.

 கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில பகுதியில் 8மாத கற்பிணியை வெட்டிக்கொன்ற கணவன். கற்பிட்டி தலவில கெலே பகுதியைச்சேர்ந்த 26மதிக்கத்தக்க பெண்ணியே சம்பவத்தில் உயிரிழந்தாதகதெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இந்த சம்பவத்தைச்செய்த சந்தேக நபரை கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி 45நிமிடங்களில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.சந்தேக நபருக்கு எதிரான குற்றத்துக்கு பயன்படுத்திய கத்தியுடன் கைதுசெய்துள்ளார்கள்.

வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன?

 வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன? கல்முனை வடக்கு  வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஆடை விவகாரம் இலங்கையில் பாரியளவில் பேசுபொருளாக மாறியது. தமிழர்கள் அதிகமாக பணிபுரியும் குறித்த வைத்தியசாலையில் புதிதாக ஒன்பது(9)ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்,இவர்கள் 9பேரும் முஸ்லிம்கள் எனவே அவர்கள் கடமைக்கு செல்லும் பொழுது அரசாங்கம் அங்கீகரித்த தமது கலாசாரத்துக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து சென்றுள்ளனர் இருந்த போதும் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம் மதக்கலாசாரத்தை முக்கியப்படுத்தும் குறித்த ஆடையை அணிந்து பணிபுரிய முடியாது என்று அவர்களுக்கு எதிர்ப்பு உருவாகியது இதனால் இவர்களின் வேலை கேள்விகுறியாகியது. ஆனால் இந்த ஆடைப்பிரச்சினை இலங்கையில் சமூகவளைதலங்களில்  ஒன்றுக்கு ஒன்று முரனான கருத்துகளுடன் மேலோங்கியது எனவே குறித்த 9ஊழியர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு உடனடியாக அரசாங்கம் மாற்றியது .இந்த மாற்றம் சரியானதா ?என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர் இன்று இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த 9ஊழியர்களையும் புதிய வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்...

இம்ரான் மஹ்ரூப் mp மசோதாவை சாபாநாயகரிடம் சமர்பித்தார்

  கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பான பிரேரனையை பாராளுமன்றத்தில் ஆராயக்கோரி சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்ட பிரேரனை ஒன்று வழங்கப்பட்டது.திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட கோரோனா காலத்தில் உயிரிழந்த  முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரனை நடாத்தவேண்டும் என வலியுருத்தும் பிரேரனையை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக்கோரி 20மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்ள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை 19-08-2026இன்று உத்தியோகபூர்வமாக வழங்கினார். இம்ரான் மஹ்ரூப்,முஜிபுர் ரஹ்மான்,காதர் மஸ்தான்,உதுமாலெப்பை,அப்துல் வாசித் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். தகவல்:- இம்ரான் மஹ்ரூப்  பா உ (FB பக்கம்)