Skip to main content

தாருல் உலூம் காஷிபுல் ஹுதா அரபிக்கல்லூரியில் நடைபெற்ற இல்லவிளையாட்டுப்போட்டி

 தாருல் உலூம் காஷிபுல் ஹுதா அரபிக்கல்லூரியில் நடைபெற்ற இல்லவிளையாட்டுப்போட்டி



புத்தளம்,கற்பிட்டி,முதலைப்பாளியில் இயங்கி வரும் தாருல் உலூம் காஷிபுல் ஹுதா அரபிக்கல்லூரியில் இம்மாதம் (ஜூலை)28,29,30ஆகிய தினங்களில் மதுரசா மாணவர்களுக்கான மாபெரும் இல்லவிளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது, இந்த மதுரஸாவில் சுமார் 160மாணவர்கள் கல்விகற்கின்றனர்,இவர்களின் விளையாட்டுத்திறமைகளையும் ஊக்குவிக்கவேண்டும் என்ற நோக்கில் இந்த இல்ல விளையாட்டுப்போட்டியை இந்த மதுரஸாவில் அதிபர் அஷ்ஷேக் ஜெமில்கான் ரஹ்மானி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


160மாணவர்களையும்,மதுரஸாவில் பணிபுரியும் உலமாக்கள் 16பேரையும் ஒன்றினைத்து நான்கு இல்லங்களாக பிரிக்கப்பட்டு வெகுவிமர்சையான முறையில் இந்த விளையாட்டுப்போட்டி. நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்த நிகழ்வுகளை முன்று நாட்கள் நடாத்த திட்டமிட்டு அதில் ஒவ்வொரு நாட்களில் ஒவ்வொரு விளையாட்டு தொகுதிகளாக நடாத்தவும் விளையாட்டுக்குழு தீர்மானித்தது.அந்தவகையில் முதலாவது (28)நாள் நிகழ்வாக கிரிக்கெட் ,கரப்பந்துப்போட்டிகளை 4இல்லங்களுக்கிடையில் நடாத்தி முடிக்கப்பட்டது.


இரண்டாவது நாளன்று(29) மாணவர்களுக்கான 100m,200M,400m, 800m,நீளம்பாய்ந்தல்,தட்டெரிதல்,உயரம்பாய்தல்,முப்பாய்ச்சல்,குண்டெரிதல் என இன்னும் பல நிகழ்வுகளையும் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடுசெய்து இருந்தது முன்றாவது நாளான இல்லவிளையாட்டுப்போட்டியின் இறுதி நாள் அன்று(30) மதுரஸா மாணவர்களுக்கான கையிறு இலுத்தல்,கதிரைகளுக்கிடையில் பந்துகடத்தல் என்று பல குழு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து இருந்தனர் ஏற்பாட்டுக்குழுவினர்.மூன்று திட்டமிடப்பட்ட இந்த விளையாட்டுப்போட்டி வெகுவிமர்சையான முறையில் நடாத்தி முடிக்கப்பட்டது இல்லவிளையாட்டுப்போட்டியை திட்டமிட்ட ஏற்பாட்டுக்குழுவினரால்.




ஏற்பாட்டுக் குழு :-


1.MI றஸ்மில்கான் (ரஷீதி)

2.M.N.நுஸ்ரின் (காஷிபி)

3.M.முபீஸ் (காஷிபி)

4.M.அப்ரார் (ரஷாதி)


தகவல்:-MI றஸ்மில் கான்(ரஷீதி)



Comments

Popular posts from this blog

கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன்.

 கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில பகுதியில் 8மாத கற்பிணியை வெட்டிக்கொன்ற கணவன். கற்பிட்டி தலவில கெலே பகுதியைச்சேர்ந்த 26மதிக்கத்தக்க பெண்ணியே சம்பவத்தில் உயிரிழந்தாதகதெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இந்த சம்பவத்தைச்செய்த சந்தேக நபரை கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி 45நிமிடங்களில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.சந்தேக நபருக்கு எதிரான குற்றத்துக்கு பயன்படுத்திய கத்தியுடன் கைதுசெய்துள்ளார்கள்.

வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன?

 வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன? கல்முனை வடக்கு  வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஆடை விவகாரம் இலங்கையில் பாரியளவில் பேசுபொருளாக மாறியது. தமிழர்கள் அதிகமாக பணிபுரியும் குறித்த வைத்தியசாலையில் புதிதாக ஒன்பது(9)ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்,இவர்கள் 9பேரும் முஸ்லிம்கள் எனவே அவர்கள் கடமைக்கு செல்லும் பொழுது அரசாங்கம் அங்கீகரித்த தமது கலாசாரத்துக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து சென்றுள்ளனர் இருந்த போதும் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம் மதக்கலாசாரத்தை முக்கியப்படுத்தும் குறித்த ஆடையை அணிந்து பணிபுரிய முடியாது என்று அவர்களுக்கு எதிர்ப்பு உருவாகியது இதனால் இவர்களின் வேலை கேள்விகுறியாகியது. ஆனால் இந்த ஆடைப்பிரச்சினை இலங்கையில் சமூகவளைதலங்களில்  ஒன்றுக்கு ஒன்று முரனான கருத்துகளுடன் மேலோங்கியது எனவே குறித்த 9ஊழியர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு உடனடியாக அரசாங்கம் மாற்றியது .இந்த மாற்றம் சரியானதா ?என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர் இன்று இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த 9ஊழியர்களையும் புதிய வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்...

இம்ரான் மஹ்ரூப் mp மசோதாவை சாபாநாயகரிடம் சமர்பித்தார்

  கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பான பிரேரனையை பாராளுமன்றத்தில் ஆராயக்கோரி சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்ட பிரேரனை ஒன்று வழங்கப்பட்டது.திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட கோரோனா காலத்தில் உயிரிழந்த  முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரனை நடாத்தவேண்டும் என வலியுருத்தும் பிரேரனையை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக்கோரி 20மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்ள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை 19-08-2026இன்று உத்தியோகபூர்வமாக வழங்கினார். இம்ரான் மஹ்ரூப்,முஜிபுர் ரஹ்மான்,காதர் மஸ்தான்,உதுமாலெப்பை,அப்துல் வாசித் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். தகவல்:- இம்ரான் மஹ்ரூப்  பா உ (FB பக்கம்)