Skip to main content

ஈரான் கப்பலை பொறுப்பெடுக்கும் இலங்கை

  • ஈரான் கப்பலை பொறுப்பெடுக்கும் இலங்கை



இஞ்சின் பழுது காரணமாக கடலில் நிற்கும் ஈரானின் கப்பலை பொறுப்பேற்க இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தீர்மானம் - ஜனாதிபதி அறிவிப்பு 


கொழும்பை அண்மித்த பகுதியில் கடலிலுள்ள ஈரானின் இரண்டாவது கப்பலை பொறுப்பேற்க இலங்கை முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்றிரவு அவர் கூறியதாவது,


என்ஜின் ஒன்று செயல் இழந்ததாக சொல்லப்பட்ட ஈரானுக்கு சொந்தமான அந்த கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவராமல் திருகோணமலைக்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.


நாங்கள் இறையாண்மையுள்ள ஒரு நாடு.எந்த நாட்டுக்கும் சார்பானவர்கள் அல்ல நாம். எங்கள் கடல் பிரதேசத்தில் இருந்து கோரப்பட்ட உதவியை இராஜதந்திர முறையில் கையாண்டோம் எனவும்


நாங்கள் அமைதியை விரும்புகிறோம். அனைவருடனும் நாங்கள் நட்புறவை பேணுகிறோம். நாங்கள் நடுநிலையான நாடாக மனித நேய அடிப்படையில் செயல்படுகிறோம்.


இந்த பிரச்சினையை முன்வைத்து அரசுக்கும் நாட்டுக்கும் எதிரான கருத்துக்கள் வந்தன. சிறுவர்கள் அந்த கப்பலில் இருப்பதாக தகவல் பரப்பப்பட்டது. சிறுவர்கள் இருக்கிறார்கள் அரசு அவர்களை கவனிக்காமல் இருக்கிறார்கள் என்று தான் அவர்கள் செய்திகளை பரப்புகிறார்கள். இது அரசியல் நோக்கம் கொண்டது.


இது போர் ரீதியாக யாருக்கும் செய்யும் உதவி அல்ல. மனித உயிர்களை காப்பாற்ற நாங்கள் எடுத்த முடிவு. யாரும் இதனால் விசனப்படுவார்கள் என்று நினைக்க கூடாது. சர்வதேச ஒப்பந்தங்கள் கொள்கைகள் அடிப்படையில் தான் நாங்கள் முடிவுகளை எடுத்தோம். இராஜதந்திர ரீதியில் பேச்சு நடத்தி இந்த முடிவை எடுத்தோம். என்றும் தெரிவித்தார்.

 அத்தோடு கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வராமல் திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டு செல்லவும் தீர்மானம்

செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

05/03/2026

Comments

Popular posts from this blog

கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன்.

 கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில பகுதியில் 8மாத கற்பிணியை வெட்டிக்கொன்ற கணவன். கற்பிட்டி தலவில கெலே பகுதியைச்சேர்ந்த 26மதிக்கத்தக்க பெண்ணியே சம்பவத்தில் உயிரிழந்தாதகதெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இந்த சம்பவத்தைச்செய்த சந்தேக நபரை கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி 45நிமிடங்களில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.சந்தேக நபருக்கு எதிரான குற்றத்துக்கு பயன்படுத்திய கத்தியுடன் கைதுசெய்துள்ளார்கள்.

வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன?

 வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன? கல்முனை வடக்கு  வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஆடை விவகாரம் இலங்கையில் பாரியளவில் பேசுபொருளாக மாறியது. தமிழர்கள் அதிகமாக பணிபுரியும் குறித்த வைத்தியசாலையில் புதிதாக ஒன்பது(9)ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்,இவர்கள் 9பேரும் முஸ்லிம்கள் எனவே அவர்கள் கடமைக்கு செல்லும் பொழுது அரசாங்கம் அங்கீகரித்த தமது கலாசாரத்துக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து சென்றுள்ளனர் இருந்த போதும் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம் மதக்கலாசாரத்தை முக்கியப்படுத்தும் குறித்த ஆடையை அணிந்து பணிபுரிய முடியாது என்று அவர்களுக்கு எதிர்ப்பு உருவாகியது இதனால் இவர்களின் வேலை கேள்விகுறியாகியது. ஆனால் இந்த ஆடைப்பிரச்சினை இலங்கையில் சமூகவளைதலங்களில்  ஒன்றுக்கு ஒன்று முரனான கருத்துகளுடன் மேலோங்கியது எனவே குறித்த 9ஊழியர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு உடனடியாக அரசாங்கம் மாற்றியது .இந்த மாற்றம் சரியானதா ?என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர் இன்று இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த 9ஊழியர்களையும் புதிய வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்...

இம்ரான் மஹ்ரூப் mp மசோதாவை சாபாநாயகரிடம் சமர்பித்தார்

  கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பான பிரேரனையை பாராளுமன்றத்தில் ஆராயக்கோரி சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்ட பிரேரனை ஒன்று வழங்கப்பட்டது.திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட கோரோனா காலத்தில் உயிரிழந்த  முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரனை நடாத்தவேண்டும் என வலியுருத்தும் பிரேரனையை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக்கோரி 20மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்ள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை 19-08-2026இன்று உத்தியோகபூர்வமாக வழங்கினார். இம்ரான் மஹ்ரூப்,முஜிபுர் ரஹ்மான்,காதர் மஸ்தான்,உதுமாலெப்பை,அப்துல் வாசித் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். தகவல்:- இம்ரான் மஹ்ரூப்  பா உ (FB பக்கம்)