Skip to main content

Posts

தாருல் உலூம் காஷிபுல் ஹுதா அரபிக்கல்லூரியில் நடைபெற்ற இல்லவிளையாட்டுப்போட்டி

 தாருல் உலூம் காஷிபுல் ஹுதா அரபிக்கல்லூரியில் நடைபெற்ற இல்லவிளையாட்டுப்போட்டி புத்தளம்,கற்பிட்டி,முதலைப்பாளியில் இயங்கி வரும் தாருல் உலூம் காஷிபுல் ஹுதா அரபிக்கல்லூரியில் இம்மாதம் (ஜூலை)28,29,30ஆகிய தினங்களில் மதுரசா மாணவர்களுக்கான மாபெரும் இல்லவிளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது, இந்த மதுரஸாவில் சுமார் 160மாணவர்கள் கல்விகற்கின்றனர்,இவர்களின் விளையாட்டுத்திறமைகளையும் ஊக்குவிக்கவேண்டும் என்ற நோக்கில் இந்த இல்ல விளையாட்டுப்போட்டியை இந்த மதுரஸாவில் அதிபர் அஷ்ஷேக் ஜெமில்கான் ரஹ்மானி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 160மாணவர்களையும்,மதுரஸாவில் பணிபுரியும் உலமாக்கள் 16பேரையும் ஒன்றினைத்து நான்கு இல்லங்களாக பிரிக்கப்பட்டு வெகுவிமர்சையான முறையில் இந்த விளையாட்டுப்போட்டி. நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்த நிகழ்வுகளை முன்று நாட்கள் நடாத்த திட்டமிட்டு அதில் ஒவ்வொரு நாட்களில் ஒவ்வொரு விளையாட்டு தொகுதிகளாக நடாத்தவும் விளையாட்டுக்குழு தீர்மானித்தது.அந்தவகையில் முதலாவது (28)நாள் நிகழ்வாக கிரிக்கெட் ,கரப்பந்துப்போட்டிகளை 4இல்லங்களுக்கிடையில் நடாத்தி முடிக்கப்பட்டது. இரண்டாவது நாளன்று(29) மாணவ...

எவெரஸ்ட் அணி சம்பியனானது

 கிண்ணத்தைகைப்பற்றிய எவெரஸ்ட் அணி புத்தளம் ,கற்பிட்டி ,ஆலங்குடாவின் எவெரஸ் கிரிக்கெட் கழகத்தின் ஏற்பாட்டில் ஜூலை மாதம் 24,25,26ம் திகதிகளில் மாபெரும் மென்பந்துகிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமான முறையில் நிறைவுக்குகொண்டுவரப்பட்டது ,இந்த தொடரானது பகல் இரவுப்போட்டியாக நடைபெற்றது சுமார் 40அணிகளுக்குமேல் இந்த தொடரில் பங்குபெற்றியது இந்த தொடரில் வெற்றிபெரும் அணிக்கு சுமார் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய்(150000) மற்றும் கிண்ணம்,இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய்கள் மற்றும் கிண்ணம் என அறிவிக்கப்பட்டது.    மூன்று நாட்கள் பகல்,இரவாக இந்த போட்டிகள் நடாத்தப்பட்டத்து அந்த வகையில் அரை இறுதிக்கு 40அணிகளில் இருந்து வயம்பல லெவன்,எவெரஸ்ட்,போல்ஸ்டார்,சென் செபஸ்டியன் அணிகள் தேர்வாகின,முதலாவது அரை இறுதிப்போட்டி வயம்ப லெவன் மற்றும் எவெரஸ்ட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் எவெரஸ்ட் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது,இரண்டாவது அரை இறுதி போல்ஸ்டார் மற்றும் சென் செபஸ்டியன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் போல்ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு தகுதுபெற்றது. இ...

எவெர்ஸ் கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடர் 2026

 மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்தும் எவெரஸ்ட் விளையாட்டுக்கழகம். புத்தளம் பகுதியில் மிகவும் பிரபல்யமான ஆலங்குடா எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமானது 24/07/2026 கிரிக்கெட்டுக்கு மிகவும் பிரபல்யமான அணியாக விளங்கிவரும் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகமானது புத்தளம் மாவட்டத்திற்க்குட்பட்ட அணிகளை மைய்யப்படுத்தி எதிர்வரும் 24,25,26 பகல் இரவுப்போட்டியாக அணிக்கு 11பேர் கொண்ட மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்துகின்றது. இந்த தொடரிக் சுமார் 40 பிரபல்யமான அணிகள் பங்குபற்றுகின்றது ,இந்த தொடரில் மகுடம் சூடும் அணிக்கான பணப்பரிசாக 150000ம் ரூபாய் மற்றும் இரண்டாமிடத்தைப்பெரும் அணிக்கு ரூபாய் 75000ம் ரூபாய்யும் பணப்பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40அணிகளில் முதலாம் இடத்தை அடைந்து சுமார் 150000ம் ரூபாய் பணப்பரிசை வெற்றிகொள்ள அதிரடியாகவும்,பல யுக்திகளை கையாண்டு திறமைவெளிக்காட்டி சம்பியனாக மகுடம் சூடி கிண்ணத்தை கைப்பற்றப்போவது எந்த அணி என்பதை அறிய ஆவலோடு இருக்கும் 40 அணிகள். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முகம்மட் ஆசிக் 24/07/2026

ஆலங்குடா சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூட்டம்

  ஆலங்குடாவில் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஒன்றுகூடல்: பாதுகாப்பான கிராமத்தை உருவாக்கும் உறுதிமொழி ஆலங்குடா கிராமத்தின் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட சிவில் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ஒன்றுகூடல், 2026 ஜூலை 18 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆலங்குடா கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு. முர்ஷித் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), ஆலங்குடா கிராம சேவையாளர் திருமதி அசீமா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சனூன், சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. ஹுனைஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் திரு. M.M. பஸ்லி, நீதிச் சமாதான அதிகாரி (JP) திரு. அஹ்மத் லெப்பை, பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் நிசார், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது கிராமத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனை, களவு, கொள்ளை, வன்முறை உள்ளிட்...

இங்கிலாந்து v இந்தியா 1st ODI

  இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டித்தொடர்  14/7/2026 இங்கிலாந்தின் பிரிங்கம்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இங்கிலாந்துடன் இருபதுக்கு இருபது தொடரை இழந்த இந்தியாவுக்கு இந்த ஒரு நாள் தொடர் மிகவும் முக்கியமானதாகவும் இந்திய இரசிகள் இந்தியா இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா என்ற கேள்விக்குறியோடு இந்த ஒரு நாள் தொடரை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.நாணய சுழற்ச்சியில் வெற்றிகொண்ட இங்கிலாந்து அணி முதலாவது துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இங்கிலாந்து சார்பாக ஆரம்பத்துடுப்பெடுத்தாட பென் டக்கெட்,மற்றும். ஜெகப் பெதல் ஆகியோர் கழம் இறங்க இந்த இணைப்பாட்டம் இங்கிலாந்துக்கு  சிறந்த ஆரம்பத்தை கொடுக்கவில்லை இந்தியாவின் பந்துவீச்சு இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் சவாலாக அமைந்தது இங்கிலாந்து ஒரு கட்டத்தில் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 80ஓட்டங்களுக்கு 5விக்கெட்டை இழந்து தடுமாறியது ஆனால் அனுபவீரர் ஜோ ரூட்டின் நிதானம் விக்கெட்டை விட்டுக்கொடுக்காத ஆட்டம் இங்கிலாந்தை மோசமான ஓட்ட வீதத்தில்  இருந்து காப்பாற்றியது இங்கிலாந்துசார்பாக துடுப்பெடுத்தாட்டத்தி...

இஸ்லாஹியா பாலர் பாடசலையின் சிறுவர் சந்தை நிகழ்வு

  ஆலங்குடா,கல்முனைக்குடி அல் இஸ்லாஹியா ட பாலர் பாடசாலையில் சிறுவர் சந்தை உற்சாகமாக நடைபெற்றது(12-07-2026) அல் இஸ்லாஹியா கல்முனைக்குடி பாலர் பாடசாலையில் மாணவர்களின் படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் வணிக அடிப்படை அறிவை வளர்க்கும் நோக்கில் சிறுவர் சந்தை (Children's Market) நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாலர் மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் பல்வேறு உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் சிறிய உபயோகப் பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர். இந்த நிகழ்வின் மூலம் மாணவர்கள் பணத்தின் மதிப்பு, வாங்குதல்–விற்பனை நடைமுறை, வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் திறன் மற்றும் குழு ஒத்துழைப்பு போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை திறன்களை அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருந்தனர் மாணவர்களின் ஆர்வத்தையும் முயற்சியையும் பாராட்டியதுடன், இவ்வாறான செயன்முறை கல்வி நிகழ்வுகள் சிறுவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என்றும் தெரிவித்தனர். AK ...

தொடரை கைப்பற்றியது சிம்பாபே

  பங்களாதேஷ் மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டி இன்று 10/07/2026ம் நடைபெற்றது நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது, முதலில் சிம்பாவே சார்பாக ஆரம்பத்துடுப்பாட்டவீரர்களாக பிரைன் பென்னட் மற்றும் பென் கரண்ட் ஆகியேர் மைதானம் நுழைந்தனர். இன்றைய போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியை தங்களது கட்டுப்பாட்டில்வைக்கதிட்டமிட்டிருந்தனர் என்று தான் கூறவேண்டும்  அணி12 ஓட்டம் பெற்றிருந்த வேலை சிம்பாவேயின் முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது சிம்பாவே சார்பாக துடுப்பெடுத்தாட்ட வரிசை பின்வருமாறு அமைந்திருந்தது மந்வேரா 75 (74b) இன்னசெண்ட் கையா 25(64b) பிரட் எவன்ஸ் 50(43b) சிக்கந்தர் ராசா 11(25b) இறுதியில் 48ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 199ஓட்டங்களைப்பெற்றது சிம்பாவே அணி பங்களாதேஷ் அணி சார்பாக பந்துவீச்சில் சைபுல் இஸ்லாம்  4 தன்விர் இஸ்லாம் 2 தஸ்கின்                      2 சைபுட்டின்.            ...

கரூர் சென்ற விஜய்

 கரூர் சென்ற விஜய் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கரூர் சென்றார் மக்கள் சந்திப்புக்காக,தேர்தலுக்கு முன் நடைபெற்ற கூட்ட நெரிசலில் உயிர் இழந்த சம்பவத்தின் பின்னர் தமிழகத்தின் முதலமைச்சரான பின்னர் இன்று அந்த பகுதி மக்களை சந்திக்க நேரில் சென்றார். இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 5000பேருக்கு மாத்ததிரமே அனுமதி வழங்கப்பட்டது இந் நிகழ்வில் தேர்தலின் போது பயண்படுத்திய வாகனத்தில் மேற்யே தனது உரையை ஆரம்பித்தார் முதலமைச்சர் விஜய்   இந் நிகழ்வில் கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் உயிர் இழந்தவர்களுக்கான நினைவுச்சின்னம் அமைப்பதாக கூறினார் விஜய்  மேலும் கரூர் கூட்ட நெரிசலில் உயிர்யிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரச வேலைக்கான நியமனக்கடிதத்தையும் தனது கரங்களினால் வழங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய். செய்தித்தொகுப்பு:-தாஜுதீன் முஹம்மட் ஆசிக்

நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரனை

 நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரனை அண்மையில் நீர் கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் நாட்டில் பேசுபொருளாக மாறிய நிலையில் இந்த கலவரத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் உயிர் இழந்த் நிலையிலும்,கைதிகள் மற்றும் மேலும் சில அதிகாரிகள் காயத்திற்குள்ளானர்,    எனவே இந்த சம்பவத்திற்க்கு தற்ப்போதைய நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார பதவி விலகவேண்டும் என்று கூறி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரமேதாச தலைமையிலான எதிர்க்கட்சியினர்,நாடாளுமன்றில் நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையை சபையில் சமர்பிப்பதற்க்கான மசோதாவில் கையெழுத்திட்டனர் இதில் எதிர்க்கட்சியில் இருந்து பலர் ஆதர்வாக கையெழுத்திட்டனர். செய்தித்தொகுப்பு:-தாஜுதீன் ஆசிக்

குடி நீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி அனுரகுமார திசானாயக்க

 குடி நீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி அனுரகுமார திசானாயக்க அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (10) முற்பகல் கலந்துகொண்டார். அநுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, கெபிதிகொல்லேவ, ஹொரவப்பொத்தான மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 67,000 குடும்பங்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1990களின் பிற்பகுதியில் இருந்து இப்பகுதிகளில் பரவி வரும் இனம் கண்டறியப்படாத சிறுநீரக நோய்க்கு (CKD) சுத்தமான குடிநீர் இல்லாததே முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டம் வெறும் உள்கட்டமைப்பு அபிவிருத்தி மட்டுமல்ல, மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தும் ஒரு வேலைத்திட்டம் என்றும் இங்கு சுட்டிக்காட்டினார். இந்தத் திட்டத்திற்கு ஆதரவளித்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு  நிலையத்திற்கும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர்...