ஆலங்குடா,கல்முனைக்குடி அல் இஸ்லாஹியா ட பாலர் பாடசாலையில் சிறுவர் சந்தை உற்சாகமாக நடைபெற்றது(12-07-2026)
அல் இஸ்லாஹியா கல்முனைக்குடி பாலர் பாடசாலையில் மாணவர்களின் படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் வணிக அடிப்படை அறிவை வளர்க்கும் நோக்கில் சிறுவர் சந்தை (Children's Market) நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாலர் மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் பல்வேறு உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் சிறிய உபயோகப் பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர்.
இந்த நிகழ்வின் மூலம் மாணவர்கள் பணத்தின் மதிப்பு,
வாங்குதல்–விற்பனை நடைமுறை, வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் திறன் மற்றும் குழு ஒத்துழைப்பு போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை திறன்களை அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருந்தனர் மாணவர்களின் ஆர்வத்தையும் முயற்சியையும் பாராட்டியதுடன், இவ்வாறான செயன்முறை கல்வி நிகழ்வுகள் சிறுவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என்றும் தெரிவித்தனர்.
AK Media











Comments
Post a Comment