Skip to main content

ஆப்கானிஸ்தான் அணிக்கு 403 வெற்றி இலக்கு,தொடரை கைப்பற்றிய இந்திய அணி

 ஆப்கானிஸ்தான் அணிக்கு 403 வெற்றி இலக்கு,தொடரை கைப்பற்றிய இந்திய அணி



இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது.

இதில் முதலாவது போட்டியானது மழை காரணமாக 25 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது இதில் இந்திய அணி வெற்றிபெற்றது இரண்டாவது போட்டியானது இந்தியா லக்னோவில்  பகல் இரவுப்போட்டியாக இன்று ஆரம்பமானது நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது




இந்தியா அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினார்கள்,ஆரம்பம் இந்திய அணிக்கு சரியாக அமையவில்லை என்றுதான் கூறவேண்டும் இந்திய அணியின் முதலாவது விக்கெட் 9ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது ஜெய்ஸ்வால் 4ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார், அதன் பின் அணித்தலைவர் சுப்மன் கில் துடுப்பெடுத்தாட வர ஆப்கான் அணி எதிர்பார்க்காத ஒரு இலக்கை தீர்மாணித்தது இந்திய அணி என்றுதான் கூறவேண்டும் ,இந்திய அணி 403ஓட்டங்களை ஆப்கான் அணிக்காக நிர்ணயித்தது இந்திய அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் 


சுப்மன் கில்- 154 ஓட்டம் 110பந்துக்கு

இஷான் கிஷன் 125ஓட்டம் 79பந்துக்கு

ரோஹித் சர்மா 48ஓட்டம் 39பந்துக்கு

ஸ்ரேய் அய்யர் -26ஒட்டம் 24பந்துக்கு



   என்று பெர10விக்கெட் இழப்புக்கு 402ஓட்டத்தைபெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் சார்பாக பந்துவீச்சில்

கரோட்டி 76-4

ரசித் கான் 48-3

சலீம் சாபி 75-1

ஹசன்பர் 69-1 என்று விக்கெட்டுக்களை கைப்பற்றினார்கள்.


403 என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடச்சென்ற ஆப்கான் அணியானது  ஆரம்பம் சரியாக அமைந்த போதும் நிலையான துடுப்பாட்ட திறன் இல்லாமையினால் அடுக்கடுக்காக் விக்கெட்டுக்களை பறிகொடுக்க ஆரம்பித்தது என்று தான் கூறவேண்டும்,ஆப்கான் அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்

ரஹ்மத் சா 89பந்துகளில் 79ஓட்டம்

குர்பார் 39பந்துகளில் 41 ஓட்டம்

சாதிகுல்லா ஆடல் 50 பந்துகளில்42 ஓட்டம்

இப்ராஹிம் சட்ரான் 31பந்துகளில் 21ஒட்டம் என்று பெற்றனர். இறுதியில் சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 232ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர்.

 இந்திய அணி சார்பாக பந்துவீச்சில்


குர்னூர் பிரார் -3

பிரின்ஸ் யாடவ்-2

அர்சிப் சிங்-3

வாவிங்டன் சுந்தர்-1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.இறுதியில் 3போட்டிகள் கொண்ட தொடரில் 2போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

17-6-26

Comments

Popular posts from this blog

கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன்.

 கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில பகுதியில் 8மாத கற்பிணியை வெட்டிக்கொன்ற கணவன். கற்பிட்டி தலவில கெலே பகுதியைச்சேர்ந்த 26மதிக்கத்தக்க பெண்ணியே சம்பவத்தில் உயிரிழந்தாதகதெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இந்த சம்பவத்தைச்செய்த சந்தேக நபரை கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி 45நிமிடங்களில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.சந்தேக நபருக்கு எதிரான குற்றத்துக்கு பயன்படுத்திய கத்தியுடன் கைதுசெய்துள்ளார்கள்.

வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன?

 வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன? கல்முனை வடக்கு  வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஆடை விவகாரம் இலங்கையில் பாரியளவில் பேசுபொருளாக மாறியது. தமிழர்கள் அதிகமாக பணிபுரியும் குறித்த வைத்தியசாலையில் புதிதாக ஒன்பது(9)ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்,இவர்கள் 9பேரும் முஸ்லிம்கள் எனவே அவர்கள் கடமைக்கு செல்லும் பொழுது அரசாங்கம் அங்கீகரித்த தமது கலாசாரத்துக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து சென்றுள்ளனர் இருந்த போதும் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம் மதக்கலாசாரத்தை முக்கியப்படுத்தும் குறித்த ஆடையை அணிந்து பணிபுரிய முடியாது என்று அவர்களுக்கு எதிர்ப்பு உருவாகியது இதனால் இவர்களின் வேலை கேள்விகுறியாகியது. ஆனால் இந்த ஆடைப்பிரச்சினை இலங்கையில் சமூகவளைதலங்களில்  ஒன்றுக்கு ஒன்று முரனான கருத்துகளுடன் மேலோங்கியது எனவே குறித்த 9ஊழியர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு உடனடியாக அரசாங்கம் மாற்றியது .இந்த மாற்றம் சரியானதா ?என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர் இன்று இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த 9ஊழியர்களையும் புதிய வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்...

இம்ரான் மஹ்ரூப் mp மசோதாவை சாபாநாயகரிடம் சமர்பித்தார்

  கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பான பிரேரனையை பாராளுமன்றத்தில் ஆராயக்கோரி சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்ட பிரேரனை ஒன்று வழங்கப்பட்டது.திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட கோரோனா காலத்தில் உயிரிழந்த  முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரனை நடாத்தவேண்டும் என வலியுருத்தும் பிரேரனையை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக்கோரி 20மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்ள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை 19-08-2026இன்று உத்தியோகபூர்வமாக வழங்கினார். இம்ரான் மஹ்ரூப்,முஜிபுர் ரஹ்மான்,காதர் மஸ்தான்,உதுமாலெப்பை,அப்துல் வாசித் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். தகவல்:- இம்ரான் மஹ்ரூப்  பா உ (FB பக்கம்)