Sunday, 8 February 2026

ENG V NPL

 20/20உலககிண்ணம்2026 (T20WORLDCUP-2026) Match-5

 

   T20 உலககிண்ணத்தின் 5து போட்டி  08/02/2026 இங்கிலாந்து மற்றும் நேபாளம் அணிகளுக்கிடையில் இன்று பிற்பகல் 3.00மணிக்கு மும்பையில் ஆரம்பமானது.

   நாணய சூழற்ச்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து  கிரிக்கெட் அணித்தலைவர் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

 இங்கிலாந்து அணியானது மெதுவான ஒர் ஆரம்பத்தையே கொடுத்தது

 5ஓட்டங்களுக்கு தனது முதலாவது விக்கெட்டை இழந்தது. முதல் 6ஓவர்கள் முடிவில் 57ஓட்டங்களைப்பெற்றது


இங்கிலாந்து  அணி சார்பாக 

 ஜகப் பதேல்35பந்துகளுக்கு 55 ஓட்டங்களும்

ஹரி புரூக் 32பந்துகளுக்கு 53ஓட்டங்களும்

வில் ஜக் அதிரடியாக 18பந்துகளில் 39ஓட்டங்களும்

ஜோஸ் பட்லர்17பந்துகளுக்கு 26

ஓட்டங்களும் பெற்றனர்.


20ஓவர்கள் நிறைவில் இங்கிலாந்து அணி 184ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்தது.

  மெதுவான ஆரம்பமாக இருந்தாலும் நடு வரிசை வீரர்கள் அணிக்கான ஓட்டத்தை அதிரடியான  முறையில் அதிக ஓட்டத்தை சேர்க்க உதவினார்கள்


 நேபால் சார்பாக பந்து வீச்சில்

நந்தன் யாதவ்-2

திபந் சிங் அய்ரி-2

சஹர் மல்லே-1

சந்தீல் லமிச்சானே-1


    185எடுத்தால் வெற்றி என்று ஆடுகளம் புகுந்த நேபால் அணியின் ஆரம்பத்துடுப்பெடுத்தாட்டம் சரியாக அமையவில்லை 


முதலாவது விக்கெட் 37 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது

  6ஓவர்கக் முடிவில் 47-2விக்கெட்டுக்களை இழந்தது.


  நேபாளம் சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்

டீபந் சிங் 29பந்துகளில் 44ஓட்டம்

 லோகேஸ் பம் 20பந்துகளில் 39 ஓட்டம்

 ரோஹித் போடேல் 34பந்துகளில்39ஓட்டம்

ஆரிப் சேக் 8பந்துகளில் 10ஓட்டம் என்று  பெற்றனர்.


 புதிய அணியா இருந்தாலும் இங்கிலாந்துக்கு இறுதிவரை வெற்றியை விட்டுக்கொடுக்கவில்லை மாறாக போராடியது நேபாளம்

இறுதியில் 6பந்துகளில் 10ஓட்டம் பெறவேண்டி இருந்தது. நேபாள அணியுடன்  போராடி 4ஓட்டங்களினால் வெற்றிபெற்றது இங்கிலாந்து அணி

      

  இங்கிலாந்து  அணி சார்பாக பந்து வீச்சில்

லியாம் டவுசன் 2விக்கெட்டையும்

 சாம் கரன்1

 விக்கெட்டையும்

ஆதில் ராசிட் 1விக்கெட்டையும்

ஜோபர் ஆர்சர் 1விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.



   2026- T20உலககிண்னத்தின் நான்காவது(5து) போட்டியில் இங்கிலாந்து  அணி 4ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக வில் ஜெக் தெரிவானார்.

செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

08/02/2026

 

No comments:

Post a Comment

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் ...