Skip to main content

சம்பியனானது கல்பிட்டி வேல்ட் லயன் கிரிக்கெட் அணி

 சம்பியனானது கல்பிட்டி வேல்ட் லயன் கிரிக்கெட் அணி


புத்தளம்,நுரைச்சோலை லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்திய மென்பந்துசுற்றுப்போட்டியானது ஆகஸ்ட் மாதம் 21,22,23ம் திகதிகளில் போல்ட் ஸ்டார் மைதானத்தில் நடாத்தப்பட்டது .

இந்த தொடரில் பல அணிகள் கிண்ணத்தை கைப்பற்றவேண்டும் என்ற நோக்கில் போட்டியில் பங்குபற்றின,இந்த தொடரில் பங்குபற்றி கிண்ணத்தை கைப்பற்றும் அணிக்கு பரிசுத்தொகையாக ஒரு லட்சம் அறிவிக்கப்பட்டது இந்த தொடரில் இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூபா 50000ம் அறிவிக்கப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது.

பணப்பரிசையும் கிண்ணத்தையும் கைப்பற்றும் நோக்கில் பல அணிகள் போட்டிபோட்டாலும் இறுதிப்போட்டிக்கு கல்பிட்டி வேல்ட் லயன் அணியுடன்  இறுதிப்போட்டியில் விளையாட  கோல்ட் மூன் அணி தகுதி பெற்றது இரண்டு பலம் பொருந்திய அணிகளும் இறுதிப்போட்டியில் மோதின இறுதியில் இந்த தொடரில் சம்பியணாக கல்பிட்டி வேல்ட் லயன் அணி மகுடம் சூடியது.வெற்றிபெற்ற அணிக்கு கல்பிட்டி பிரதேசசபைத்தலைவர் Asm.றிகாஸ் அவர்களின் கரங்களினால் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.மேலும் இந்த கிண்ணம் வேல்ட் லயன் அணியின் 40து வெற்றிக்கிண்ணம் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முகம்மட் ஆசிக்


Comments

Popular posts from this blog

கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன்.

 கற்பிட்டி பகுதியில் மனைவியை கொன்ற கணவன். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவில பகுதியில் 8மாத கற்பிணியை வெட்டிக்கொன்ற கணவன். கற்பிட்டி தலவில கெலே பகுதியைச்சேர்ந்த 26மதிக்கத்தக்க பெண்ணியே சம்பவத்தில் உயிரிழந்தாதகதெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இந்த சம்பவத்தைச்செய்த சந்தேக நபரை கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி 45நிமிடங்களில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.சந்தேக நபருக்கு எதிரான குற்றத்துக்கு பயன்படுத்திய கத்தியுடன் கைதுசெய்துள்ளார்கள்.

வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன?

 வைத்தியசாலை ஆடைப்பிரச்சினை தீர்வு என்ன? கல்முனை வடக்கு  வைத்தியசாலையில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஆடை விவகாரம் இலங்கையில் பாரியளவில் பேசுபொருளாக மாறியது. தமிழர்கள் அதிகமாக பணிபுரியும் குறித்த வைத்தியசாலையில் புதிதாக ஒன்பது(9)ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்,இவர்கள் 9பேரும் முஸ்லிம்கள் எனவே அவர்கள் கடமைக்கு செல்லும் பொழுது அரசாங்கம் அங்கீகரித்த தமது கலாசாரத்துக்குட்பட்ட ஆடைகளையே அணிந்து சென்றுள்ளனர் இருந்த போதும் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம் மதக்கலாசாரத்தை முக்கியப்படுத்தும் குறித்த ஆடையை அணிந்து பணிபுரிய முடியாது என்று அவர்களுக்கு எதிர்ப்பு உருவாகியது இதனால் இவர்களின் வேலை கேள்விகுறியாகியது. ஆனால் இந்த ஆடைப்பிரச்சினை இலங்கையில் சமூகவளைதலங்களில்  ஒன்றுக்கு ஒன்று முரனான கருத்துகளுடன் மேலோங்கியது எனவே குறித்த 9ஊழியர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு உடனடியாக அரசாங்கம் மாற்றியது .இந்த மாற்றம் சரியானதா ?என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர் இன்று இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த 9ஊழியர்களையும் புதிய வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்...

இம்ரான் மஹ்ரூப் mp மசோதாவை சாபாநாயகரிடம் சமர்பித்தார்

  கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸா தொடர்பான பிரேரனையை பாராளுமன்றத்தில் ஆராயக்கோரி சபாநாயகரிடம் கையெழுத்திடப்பட்ட பிரேரனை ஒன்று வழங்கப்பட்டது.திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் ஆகஸ்ட் 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட கோரோனா காலத்தில் உயிரிழந்த  முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரனை நடாத்தவேண்டும் என வலியுருத்தும் பிரேரனையை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக்கோரி 20மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்ள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை 19-08-2026இன்று உத்தியோகபூர்வமாக வழங்கினார். இம்ரான் மஹ்ரூப்,முஜிபுர் ரஹ்மான்,காதர் மஸ்தான்,உதுமாலெப்பை,அப்துல் வாசித் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். தகவல்:- இம்ரான் மஹ்ரூப்  பா உ (FB பக்கம்)