இரண்டாம் இடத்தைப்பெற்றது வேப்பங்குளம் முஹம்மதியா
மன்னார் முசலி பெற்கேனி கிராமத்தில் கடந்த 14,15,16ம் திகதிகளில் பகல் இரவுப்போட்டியாக ரெட் பிளவர் கிரிக்கட் கழகத்தினால் மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டியென்று நடாத்தப்பட்டது.
இலங்கையில் பல பாகங்களில் இருந்தும் இந்த தொடரில் கலந்துகொள்ள பல பலம்பொருந்திய அணிகள் பங்குபற்றியது இந்த தொடரில் முதலாவது இடத்தைப்பெறும் அணிக்கு 3லட்சம் ரூபாய்கள்,இரண்டாம் இடத்தைபெறும் அணிக்கு 150000ம் ரூபாய்கள் ,மூன்றாம் இடத்தைப்பெறும் அணிக்கு 250000ம் ரூபாய் பணப்பரிசில்கள் மற்றுன் கிண்ணங்களை வழங்க ஏற்பாட்டுக்குழு தீர்மானித்தது.
சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த தொடரில் பலம் பொருந்திய அணிகளுடன் மோதி இறுதிப்போட்டிக்கு மன்னார் வேப்பங்குளம் முஹம்மதியா அணியும் SSA மஹாவேவ அணியினரும் பலப்பரீட்சை நடாத்தினார்கள் மூன்று இலட்சம் ரூபாய் பணப்பரிசையும் கிண்ணத்தையும் யார் கைப்பற்ற போவது என்ற எதிர்பார்ப்பு வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அதிகமாகவே காணப்பட்டது இறுதியாக SSA அணியினர் முஹம்மதியா அணியை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றினார்.
செய்தித்தொகுப்பு:- தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

Comments
Post a Comment