குர்ஆன் மனனப்போட்டியில் இலங்கை மாணவன் மூன்றாம் இடம்

சவுதி அரேபியாவில் நடைபெற்ற மன்னர் அப்துல் அஸிஸ் குர்ஆன் மனனப்போட்டியில் இலங்கை கல்ஹின்னை பிரதேசத்தைச்சேர்ந்த அல் ஹாபிழ் இம்தாத் இல்யாஸ் மூன்றால் இடத்தைப்பிடித்தார்.
இதன் மூலம் இலங்கையின் புகழை உககெங்கும் வெளிக்காட்டியுள்ளார் சுமார் 133 நாடுகளைச்சேர்ந்த 334 மாணவர்கள் இந்த குர்ஆன் மனனப்போட்டியில் கலந்துகொண்டனர். இந்த குர் ஆன் மனனப்போட்டியில் 5ம் பிரிவில் கலந்துகொண்ட இலங்கையைச்சேர்ந்த் அல் ஹாபில் இம்தாத் இல்யாஸ் கடுமையான போட்டியாளர்களுடன் போட்டிபோட்டு இந்த குர்ஆன் மனனப்போட்டியில் மூன்றால் இடத்தைப்பிடித்தார்.
அல் ஹாபிழ் இம்தாத் இயாஸுக்கு 55,000 சவூதி ரியல்கள் (சுமார் 4,900,000 இலங்கை ரூபாய்) பரிசாக வழங்கப்பட்டது.
Comments
Post a Comment