Skip to main content

கண்டக்குழி கடற்கரை சுற்றுலாப் பாதை முழுமையாக காபட் வீதியாக பூரணப்படுத்தப்பட்டது!

 கல்பிட்டி பிராந்தியத்தின் சுற்றுலாத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் கண்டக்குழி கடற்கரைக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அதன் இறுதிப் பகுதி வீதி அபிவிருத்திப் பணிகளும் தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.



ஏற்கனவே கண்டக்குழி கடற்கரை வீதி காபட் செய்யப்பட்டு இருந்த போதிலும், குறிஞ்சிப்பிட்டி டானியா ஹோட்டல் அருகாமையில் இருந்து கடற்கரை வீதியுடன் இணையும் சுமார் 200 மீட்டர் தூரம் சீரமைக்கப்படாமல் இருந்தது. சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் பெரும் சவாலாக இருந்த இந்தப் பகுதியும் தற்போது முழுமையாக காபட் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது.


உலக வங்கியின் (World Bank) நிதி உதவியுடன், கல்பிட்டி பிரதேச சபையின் நேரடி கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் இத்திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்டக்குழி கடற்கரைக்கு செல்லும் அனைத்து வீதிகளும் இப்போது சீரான போக்குவரத்து நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.


எமது பிரதேசத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் சுற்றுலாத் துறைக்கு வலுசேர்க்கும் வகையில், இத்திட்டத்தை முன்னெடுக்க ஒத்துழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும், உறுதுணையாக நின்ற உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

        






 தகவல்:-Fb

Comments

Popular posts from this blog

எவெர்ஸ் கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடர் 2026

 மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்தும் எவெரஸ்ட் விளையாட்டுக்கழகம். புத்தளம் பகுதியில் மிகவும் பிரபல்யமான ஆலங்குடா எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமானது 24/07/2026 கிரிக்கெட்டுக்கு மிகவும் பிரபல்யமான அணியாக விளங்கிவரும் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகமானது புத்தளம் மாவட்டத்திற்க்குட்பட்ட அணிகளை மைய்யப்படுத்தி எதிர்வரும் 24,25,26 பகல் இரவுப்போட்டியாக அணிக்கு 11பேர் கொண்ட மாபெரும் கிரிக்கெட் தொடரை நடாத்துகின்றது. இந்த தொடரிக் சுமார் 40 பிரபல்யமான அணிகள் பங்குபற்றுகின்றது ,இந்த தொடரில் மகுடம் சூடும் அணிக்கான பணப்பரிசாக 150000ம் ரூபாய் மற்றும் இரண்டாமிடத்தைப்பெரும் அணிக்கு ரூபாய் 75000ம் ரூபாய்யும் பணப்பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40அணிகளில் முதலாம் இடத்தை அடைந்து சுமார் 150000ம் ரூபாய் பணப்பரிசை வெற்றிகொள்ள அதிரடியாகவும்,பல யுக்திகளை கையாண்டு திறமைவெளிக்காட்டி சம்பியனாக மகுடம் சூடி கிண்ணத்தை கைப்பற்றப்போவது எந்த அணி என்பதை அறிய ஆவலோடு இருக்கும் 40 அணிகள். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முகம்மட் ஆசிக் 24/07/2026

எவெரஸ்ட் அணி சம்பியனானது

 கிண்ணத்தைகைப்பற்றிய எவெரஸ்ட் அணி புத்தளம் ,கற்பிட்டி ,ஆலங்குடாவின் எவெரஸ் கிரிக்கெட் கழகத்தின் ஏற்பாட்டில் ஜூலை மாதம் 24,25,26ம் திகதிகளில் மாபெரும் மென்பந்துகிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமான முறையில் நிறைவுக்குகொண்டுவரப்பட்டது ,இந்த தொடரானது பகல் இரவுப்போட்டியாக நடைபெற்றது சுமார் 40அணிகளுக்குமேல் இந்த தொடரில் பங்குபெற்றியது இந்த தொடரில் வெற்றிபெரும் அணிக்கு சுமார் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய்(150000) மற்றும் கிண்ணம்,இரண்டாம் இடத்தைப்பெறும் அணிக்கு எழுபத்தைந்தாயிரம் ரூபாய்கள் மற்றும் கிண்ணம் என அறிவிக்கப்பட்டது.    மூன்று நாட்கள் பகல்,இரவாக இந்த போட்டிகள் நடாத்தப்பட்டத்து அந்த வகையில் அரை இறுதிக்கு 40அணிகளில் இருந்து வயம்பல லெவன்,எவெரஸ்ட்,போல்ஸ்டார்,சென் செபஸ்டியன் அணிகள் தேர்வாகின,முதலாவது அரை இறுதிப்போட்டி வயம்ப லெவன் மற்றும் எவெரஸ்ட் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் எவெரஸ்ட் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது,இரண்டாவது அரை இறுதி போல்ஸ்டார் மற்றும் சென் செபஸ்டியன் அணிகளுக்கிடையில் நடைபெற்றது இதில் போல்ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு தகுதுபெற்றது. இ...

ஆலங்குடா சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூட்டம்

  ஆலங்குடாவில் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஒன்றுகூடல்: பாதுகாப்பான கிராமத்தை உருவாக்கும் உறுதிமொழி ஆலங்குடா கிராமத்தின் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட சிவில் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய ஒன்றுகூடல், 2026 ஜூலை 18 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆலங்குடா கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு. முர்ஷித் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), ஆலங்குடா கிராம சேவையாளர் திருமதி அசீமா, அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சனூன், சமுர்த்தி உத்தியோகத்தர் திரு. ஹுனைஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் திரு. M.M. பஸ்லி, நீதிச் சமாதான அதிகாரி (JP) திரு. அஹ்மத் லெப்பை, பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் நிசார், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது கிராமத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனை, களவு, கொள்ளை, வன்முறை உள்ளிட்...