Skip to main content

கற்பிட்டியில் சிக்கிய போதைமாத்திரைகள்

 கற்பிட்டி முகத்துவாரம் கடற்கரையில் 4 பொதிகளில் 3 இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளை கைப்பற்றிய பொலிஸார்.


கற்பிட்டி முகத்துவாரம் கடற்கரைப் பகுதியில் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 4 பொதிகளில் சுமார் 317000 மாத்திரைகளை கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை (26) இரவு மேற்கொண்ட தேடுதலின் போது கைப்பற்றப்பட்டது.


கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் ஊடாக மேற்படி போதை மாத்திரை பொதிகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் கைவிட்டுச் சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தெரிவித்தார்

27/06/2025

Comments

Popular posts from this blog

வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட புத்தளம்

 வெள்ளத்தில் மூழ்கியது புத்தளம் கடந்த இரண்டு நாற்களாக நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் பல இடங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. அதே போன்று நேற்று 13/05/2026 புத்தளத்தில் பெய்த அடை மழை காரணமாக புத்தளத்தின் பல பகுதிகள் ,தில்லையடி,கடையாகுளம்,புத்தளம் மத்தியபகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக புத்தளத்தில் பல வீடுகால்,பாடசாலைகள்,வைத்தியசாலை,அரச நிறுவனங்கள்,கடைகள்,என்று பல இடங்கள் இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது,பல குடும்பங்கள் வெள்ளம் வீட்டினுல் உற்புகுந்ததனால் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டு இருக்கின்றாரர்கள்,பலரின் வீட்டுப்பொருட்களும் சேதமாகியுள்ளது இந்த வெள்ள அனர்த்தத்தினால். அரச தரப்பு மற்றும் தனியார் நிறுவனங்களும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கான உதவிககளைச்செய்து வருகின்றனர். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

பாலர்பாடசாலையில் புதுவருடகொண்டாட்டம்

பாலர்பாடசாலையில் புதுவருடகொண்டாட்டம்  30/04/2026இன்று ஆண்டாங்கேனி லூர்து மாதா பாலர் பாடசாலையில் (அவுறுது உட்சவ) புதுவருட கொண்டாட்டம் பாலர்பாடசாலையில் மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரிய்ரகள் பிரதேச மக்களின் பங்குபற்றுதல்களுடன் நடைபெற்றது இந் நிகழ்வில் கற்பிட்டி முன் பள்ளிகளுக்கான பொறுப்பாளர் H.M.நிப்ராஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக் 30/04/2026

ஆலங்குடா பாடசாலை மாணவி சாதனை

  📢 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு வீராங்கனை – லதீப் ஹயா 🏅 அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இணைந்தால் சாதனை நிச்சயம் என்பதை நிரூபித்துள்ளார் ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி லதீப் ஹயா. 🏆 புத்தளம் வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் 🥈 ஈட்டி எறிதல் – 2ஆம் இடம் 🥉 குண்டு எறிதல் – 3ஆம் இடம் 🏅 தட்டெறிதல் – 4ஆம் இடம் என சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று, மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளார். இந்த வெற்றியின் பின்னால் அவரது அயராத உழைப்பும், குடும்பத்தின் அர்ப்பணிப்பும், மேலும் பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர்களான ஏ.எம். பஜ்மிர், ஏ.ஆர். இஸ்பாக் அலி, எஸ். சாஜித் ஆகியோரின் வழிகாட்டலும் முக்கிய பங்காற்றுகின்றன. இன்று வெற்றிப் படிக்கட்டில் நிற்கும் ஹயா, தனது சாதனையால் பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்திருப்பதோடு, எதிர்காலத்தில் மேலும் உயரங்களை அடையத் தயாராக உள்ளார். 🌹 லதீப் ஹயாவிற்கு எமது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் மேலும் பல வெற்றிகளைப் பெற்று எமது சமூகத்தின் பெருமையை உயர்த்த இறைவன் அருள...