நியூசிலாந்துடனான தொடரை கைப்பற்றியது இந்திய அணி
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 5போட்டிகள் கொண்ட T20தொடர் நியூசிலாந்தில் நடைபெற்றது இந்த தொடரில் முதலாவது,இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியையும் இந்திய அணி கைப்பற்றியது மிகுதி இருந்த இரண்டு போட்டிகளையும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3/2என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியது.
5தாவது போட்டி முடிவுகள் கீழ் வருமாறு அமைந்தது நாணய சூழற்ச்சியில் வெற்றிகொண்ட நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது
இந்தியா சார்பில் துடுப்பெடுத்தாட்டத்தில்
இஷான் கிசன் 61(32)
ஸ்ரேஷ் அய்யர் 50(23)
நாமன் டிர் 33(23)
நிதிஷ் ரெட்டி 22(17) என்ற அடிப்படையில் ஓட்டத்தைப்பெற இந்திய அணி 20ஓவர்கள் முடிவில் 191ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது.
நியூசிலாந்து சார்பாக பந்துவீச்சில்
அடம் மிலின் 4
நெதன் ஸ்மித் 2
டிக்னர் 2விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
192என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட கழம் இறங்கிய நியூசிலாந்து சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்
டிம் செய்பட் 93(50)
கிலன் பிலிப்ஸ் 65(38)
டெரி மிச்சல் 29(16) என்று அதிரடியாக ஆட நியூசிலாந்து அணியானது 18ஓவர்கள் முடிவில் 3விக்கெட்டை இழந்து 195ஓட்டங்களைப்பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
இந்தியா சார்பில் பந்துவீச்சில்
வருன் சக்கர்வர்த்தி 1
நிதிஷ் குமார் ரெட்டி 1
அர்ஸ்தீப் சிங் 1விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
5போட்டிகள் கொண்ட தொடரை 3/2என்ற அடிப்படையில் கைப்பற்றியது இந்திய
அணி
செய்தித்தொகுப்பு :-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்

Comments
Post a Comment