முக்கோணதொடரில் சம்பியனானது பாக்கிஸ்தான்
முக்கோண தொடரின் இறுதிப்போட்டியானது நேற்று 31/10/2026இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதின இந்த போட்டியானது பாக்கிஸ்தானில் லாகூர் கடாபி மைதானத்தில் பகல் இரவுப்போட்டியாக நடைபெற்றது நாணயசுழற்ச்சியில் வெற்றிபெற்ற பாக்கிஸ்தான் அணித்தலைவர் பந்துவீசத்தீர்மானித்தார்.
இலங்கை அணியானது நல்லதோர் ஆரம்பத்தையே பெற்றது.முதலாவது விக்கெட் 87ஓட்டம் பெற்ற போது வீழ்த்தப்பட்டது,இலங்கை அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில்
கமிந்து பெண்டிஸ் 131(128)
பவன் ரத்னாயக்க 77(65)
அவிஸ்க பெர்னாண்டோ 38(49)
டசுன் சானக்க 17(9) என்ற ஓட்டங்களை தனது அணிக்காக அதிகபட்சமாக சேர்க்க இலங்கை அணியானது 50ஓவர்கள் நிறைவில் 325/8விக்கெட்டுக்களை இழந்து.
பாக்கிஸ்தான் அணி சார்பாக பந்துவீச்சில்
சஹீன் அப்ரிடி 2
நசீம் சா 2
சல்மான் அகா 2
ஹரிஸ் ரவுப் 2விக்கெட்டுக்களைப்பெற்றுக்கொண்டனர்.
326என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட சென்ற பாக்கிஸ்தான் அணியானது ஆரம்பத்தில் சிறு தடுமாற்றத்தையே சந்தித்தது 14ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது பாக்கிஸ்தான் அதன் பின் இணைந்த பகர் சமான் ,சாட் பைக் ஆகியோரிப் இணைப்பாட்டம் பாக்கிஸ்தான் அணியின் ஓட்டவேகத்தை மாற்றியது பாக்கிஸ்தான் சார்பாக துடுப்பெடுத்தாட்டதில்
பகர் சமான் 127(99)
சாட் பைக் 74(75)
அரபாத் மின்ஹாஸ் 61(31)
ஹசன் நவாஸ் 47(45)என்று ஓட்டங்களைப்பெற 7விக்கெட்டுக்களை இழந்து பாக்கிஸ்தான் 331ஓட்டங்களைப்பெற்று 3விக்கெட்டுக்கள் மீதம் இருக்கவெற்றியை தனதாக்கியது.
இலங்கை சார்பில் பந்துவீச்சில்
டில்சான் மதுசங்க 3
அசித பெர்னாண்டோ 2
துனித்வெல்லாலகே 1
தீக்சன 1விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
செய்தித்தொகுப்பு:- தாஜூதீன் முஹம்மட் ஆசிக்
Comments
Post a Comment