Skip to main content

புத்தளத்துக்கும் இத்தாலிய நகரமொன்றுக்கும் இடையே நட்புறவு ஏற்படுத்த முன்மொழிவு*

 *புத்தளத்துக்கும் இத்தாலிய நகரமொன்றுக்கும் இடையே நட்புறவு ஏற்படுத்த முன்மொழிவு*



புத்தளம் – இத்தாலியில் உள்ள முக்கியமான நகரமொன்றுடன் புத்தளம் நகரை இணைத்து, இரு நகரங்களுக்கும் இடையே விளையாட்டு, கலாசாரம் மற்றும் பாரம்பரியம் உள்ளிட்ட துறைகளில் அனுபவங்களையும் ஒத்துழைப்பையும் பரிமாறிக்கொள்ளும் வகையில் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்துவதற்கான பிரேரணையை தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் மற்றும் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் இஷாம் மரிக்கார் முன்வைத்துள்ளார்.


சர்வதேச அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இலங்கையில் பல்வேறு சமூக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் இஷாம் மரிக்கார், அதன் தொடர்ச்சியாக புத்தளத்திற்கும் இத்தாலிய நகரமொன்றுக்கும் இடையில் City-to-City Partnership / Sister City உறவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த ஒத்துழைப்பின் ஊடாக புத்தளம் மற்றும் இத்தாலிய நகரம் ஆகியவற்றுக்கு இடையில் விளையாட்டு, கலாசாரம், பாரம்பரியம், இளைஞர் செயற்பாடுகள் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.


இத்தொடர்பை உத்தியோகபூர்வமாக முன்னெடுப்பதற்காக மாநகர சபையின் அனுமதியைப் பெறும் நோக்கில் குறித்த பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


இது நடைமுறைக்கு வந்தால், புத்தளம் நகரத்திற்கு சர்வதேச நகரங்களுடன் நேரடி தொடர்புகளை உருவாக்குவதற்கான புதிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தகவல்:- இஷாம் மரைக்கார்

 ஊடகப்பிரிவு

Comments

Popular posts from this blog

ACTIVE KIDS KINDERGARTEN ALANKUDA வின் *Tiny* *Titans* *சிறிய* *கைகள்* *பெரிய* *சாகசங்கள்*

  2026/01/13 ம் திகதி அதிபர் மற்றும் ஆசிரியைகள் தலைமையில் , ஆலங்குடா Eye Institute வளாகத்தில் வெகு விமர்சயாக நடைபெற்றது. இதில் Active Kids Kindergarten இன் மழலைகள் தங்கள் திறமைகளை மிகவும் சிறப்பாகவும் ரசிக்கும் வண்ணமும் வெளிப்படுத்தினார்கள். இதற்காக பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பயிற்றுவித்து பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர் 👏. பிள்ளைகள் தங்கள் ஆடைகளையும் பெற்றோரின் ஆடைகளையும் நீருடனும் சலவை தூளுடனும் bubbles உடனும் விளையாடிய வண்ணம் மிகவும் சிறப்பாகவும் வேடிக்கையாகவும் கழுவினார்கள். பார்ப்பதற்கு மிகவும் கண் கவரும் வகையில் இருந்தது.  மேலும் மிக அழகிய முறையில் பல வண்ணங்களில் chef உடையுடன் தங்கள் சிறிய கரங்களால் பழங்கள், மரக்கறிகளை வெட்டி தேங்காய் துருவி, உரல் கொண்டு இடித்து இன்னும் பல வகைகளில் பல விதமான கண்ணை கவரும் வண்ணங்களில் உணவுகளையும் பானங்களையும் தயாரித்தனர். குழந்தைகளுக்கு “எனக்கும் செய்ய முடியும்” என்ற தன்னம்பிக்கையையும், பொறுப்பு , சகிப்புத் தன்மை , படைப்பாற்றல் போன்ற மன நலம் சார்ந்த நன்மைகளை நோக்கமாக கொண்டே இந்நிகழ்வு *(Tiny Titans)* (*சிறிய கைகள் பெரிய சாகசங்கள்* )ஏ...

பாலர்பாடசாலையில் புதுவருடகொண்டாட்டம்

பாலர்பாடசாலையில் புதுவருடகொண்டாட்டம்  30/04/2026இன்று ஆண்டாங்கேனி லூர்து மாதா பாலர் பாடசாலையில் (அவுறுது உட்சவ) புதுவருட கொண்டாட்டம் பாலர்பாடசாலையில் மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரிய்ரகள் பிரதேச மக்களின் பங்குபற்றுதல்களுடன் நடைபெற்றது இந் நிகழ்வில் கற்பிட்டி முன் பள்ளிகளுக்கான பொறுப்பாளர் H.M.நிப்ராஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக் 30/04/2026

கால்கோள் விழா 2026

 கால்கோள் விழா 2026 ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயம் புத்/கல்/ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலத்தின் 2026ம் ஆண்டுக்கான முதலாம் தரத்துக்கான புதிய மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்று காலை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வின் முன்னாக் முதலாம் தரத்துக்கு கற்பித்த ஆசிரியைகளுக்கும் புதிய முதலாம் தரத்துக்கு கற்பிக்க இருக்கும் ஆசிரியைகளுக்கும் பரிசுப்பொருட்களும் வைக்கப்பட்டது பாடசாலை அதிபர் அவர்களினால்  இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர்AHM.சக்கூர் பிரதம அதிதியாக MLM.காதர் அவர்களும், ஆலங்குடா கிராமசேவகர் அசீமா,சமூக சேவகர் நிசார்,பாடசாலை ஆசிரியர்கள்,பாலர் பாடசாலை ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள்களும் கலந்துகொண்டனர். செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் ஆசிக் 2026./01/29